கள்ள சாத்திரமும் களவாணி பயல்களும் சோதிடம்உண்மையா ...?? ஒரு X-Ray Report

வெள்ளி நீசம் பெற்றிருந்தால் கள்ளபுருசன் வைத்திருப்பாள்...
சனி லக்கினத்தில் இருந்தால் இன்னொருவன் அனுபவித்தவளாக வேறு ஒருவனை திருமணம் செய்வாள்...

இவ் நட்சத்திரத்தில் பிறந்த பெண்னை இப்படி அனுக,அனுபவிகவேண்டும்.... 
இந்த இராசியில் பிறந்தவள் இப்படி (Thanks:- Newjaffna)
இருப்பாள்...

ஜோதிட ரீதியில் ஒரு ஆணுக்கு 85வீத பொருத்தமாக இருக்கும் பெண் கிடைப்பதற்கான நிகழ்தகவுக் கணக்கு ஒன்று தரப்படுகின்றது.

யாழ்ப்பாண பெண்தான் வேண்டும் என ஒரு மாப்பிளை எடுத்துக் கொண்டால்

யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்களின் தொகை --------- 200 000 (அண்ணளவாக)
அதில் திருமணம் செய்தவர்கள்-------- 115 000 (அண்ணளவாக)
30வயது ஆணுக்கு பொருத்தமான வயதில் உள்ளவா;கள் (20 – 28)----------  14 000 (அண்ணளவாக)

அவனுக்கு சோதிடத்தின் படி கன்னிராசியில் உள்ள உத்திரத்தில் 3ம் பாதமும் சித்திரையில் 2ம் பாதமும் உள்ள பெண் இருந்தால் தான் 85 வீதம் பொருந்தும். அப்படி பார்த்தால் 14000 திருமணமாகாத 20 – 28 வயதுக்குட்பட்ட பெண்களில் ஒரு 1000 பெண்கள் இருப்பார்கள்... அவர்களில் நிச்சயமாக மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்கு சோதிட நிகழ்தகவின் படி செவ்வாய் குற்றம் கட்டாயம் இருக்கும்.... அப்படியாயின்  300 பெண்கள் இருப்பார்கள்.... அவர்களில் நல்ல சாதி ரீதியில் பிரிவு காட்டி அதில் உள்ளவர்கள் ஒரு 200 போ; இருப்பார்கள்... 200 பெண்களில்  அழகானதும் அவனுக்கு பிடித்துமான ஒரு நல்ல பெண் ஒரு 10 பேர் இருப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படி பிடித்த 10 பெண்களில் அவனை அவர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று கேட்டால் ஒருத்திக்கு தான் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்வாள்... இவளை அவன் எப்போது எங்கு என்று தேடிப்பி பிடிப்பது......

ஜோதிட உண்மைகள்

வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் பற்றிய சில உண்மைகள்.

யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு 1650 ம் ஆண்டளவில் ஆண்ட மன்னன் கூலங்கைச் சக்கரவர்த்தி தனக்கு ஒரு ஜோதிடர் தேவை என இந்தியாவில் இருந்து இராமலிங்கம் என்னும் ஒரு சோதிடரை வரவழைத்தார்.

 அவர் பாண்டிய மன்னருடைய ஆஸ்தான சோதிடரின் உதவியாளராக இருந்தவர் என்று வரலாறு கூறுகிறது. இவர் யாழ்ப்பாணத்திற்கு வந்ததும் இவருக்கு மிகுந்த வரவேற்பும் சிறப்பும் அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

அந் நேரம் யாழ்ப்பாணத்தில்  அரச ஆட்சியில் அரசன் இந்த ஆட்கள் இன்ன வேலை செய்யவேண்டும் என்ற சாதிப் பிரிவினையை உண்டாக்கினான்.

அப்போது பிரபுக்களும் நிலஉடமைக்காரரும் பிராமணர்களும் அரச செல்வாக்கினால் உயர்சாதி என்ற ஒரு பிரிவுக்குள் வந்தார்கள். நிலபுலமற்ற மக்கள் அரசனுடையதும் அமைச்சர்கள் பிரபுகள் போன்றவர்களுடைய சேவகர்களாகவும் அவர்களுக்கு பணிவிடை செய்பவர்களாகவும் பிரிக்கப்பட்டார்கள். அவரவர்கள் இந்த இந்த வேலைகள் செய்தல் வேண்டும் என்று பகுக்கப்பட்டார்கள். தங்களை பிராமணர் , ஷத்திரியர், வைசிகர் என்ற உயர் சாதியாகவூம் சூத்திரர் என்று தமக்கு கீழ்பட்டவர்களையும் பிரித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்களை 18 சாதிகளாகப் பிரித்து அவர்களுக்கு தமது ஆளுமையின் கீழுள்ள நிலம் மற்றும் தொழில்களுக்கும் சேவைகளுக்கும் பொறுப்பாகவும் வேலை செய்ய ஒப்படைத்தார்கள். இவா;களில் வேளாளர்களை இந்தப்பிரிவில் உயர் பிரிவு என்று வைத்தார்கள்  (வேளாண்மை செய்வோர்). உண்மையில் வேளளரும் இவர்களின் அடிமைதான்.

இப்படி பிரித்து வைத்து ஆளும்போதுதான் இந்த இராமலிங்கம் யோதிடர் யாழ்பாணத்திற்கு வந்தார். அப்போது பூமி உருண்டை வடிவம் என்று அறியப்பட்டுவிட்டது. ஆனால் சந்திரனுக்கு சுய ஒளி இல்லை என்று தெரியாது. அத்தோடு சூரியனும் மற்றைய நட்சத்திரங்கள், கிரகங்களும் பூமியை சுற்றி வருகின்றன என்று நம்பப்பட்ட காலம். சந்திரனும் ஒரு கிரகம் என்றே கணிக்கப்பட்டது. பூமியின் உபகிரகம் என்று அறியபடவில்லை.  இச் சோதிடர் வான சாஸ்த்திரத்தை ஓரளவூ தெரிந்தவர் என்பது உண்மை. அவரால் இந்ந நாளில் பௌர்னமி, அமாவாசை, கிரகணம் போன்றவை வரும் என்ற கணித்தலே சரியாக தனது குருநாதரின் பட்டறிவினை வைத்து கூறமுடிந்தது. அச்சோதிடர் தனது மூதாதையர் கண்டுபிடித்த நட்சத்திரங்களின் அறிவை வைத்துக் கொன்டே நட்சத்திரங்கள் போன்றவற்றையூம் தனது சாத்திரத்திற்குள் கொண்டுவந்தார்.


பௌர்ணமி தினத்தில் சந்திர ஈர்ப்பை வைத்து கடலலை எழும்புவதை கண்ட முற்காலத்து அறிவாளிகள்?????? கூடுதலாக சிந்தித்தார்கள்???? அதன் விளைவே இந்த ஜோதிடம் மக்கள் வாழ்க்கையிலும் விளையாட முனைந்தது. அனேகமாக அவர்கள் போராடுவதற்கு பௌர்ணமியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஏனெனில் வீரர்களுக்கு உட்சாகம் வரும் என்று நினைத்தே.

பின்னர் இந்த இராமலிங்கம் பிரபுகளையும் மன்னரையும் திருப்திபடுத்துவதற்காக சோதிட ஓலைச்சுவடு எழுதினார். நவக்கிரகங்கள் என்றும் சூரியனே அதன் தலைவன் என்று எழுதினார். இரவில் நட்சத்திரங்களின் ஒருங்கமைப்பை பார்த்து அதற்கு வடிவங்கள் கொடுத்து அவ்வடிவத்துக்குள் தெளிவாக தெரிந்த 27 நட்சத்திரங்களுக்கு பெயரும் சூட்டி அச்சுவினி, பரணி, கார்த்திகை என அவ் வடிவ அமைப்பின்படி அதனை மேடம்( ஆடு) இடபம் (பசு) மிதுனம் என பகுத்தார். இது உண்மையில் வான வெளியில் தெரியலாம். பஞ்சாங்கத்தில் கூறியபடி அந்நேரத்தில் சரியாகத் தெரியலாம். ஏனெனில் அவருடைய காலத்தில் 24 மணித்தியாலங்கள் என்று ஒன்றும் இல்லை. சூரியன் எழுந்து பின்னர் இரவு வந்து திருப்பி சூரியன் எழும் நேரம் வரை ஒரு நாள். சூரியன் நடுவானம் அதாவது விஞ்ஞான முறைபடி பூமியின் மத்திய கோட்டுக்க வரும்போது தமிழ்நாட்டில் இச்சோதிடரின் மூதாதையர் மதுரையில் ஒரு மீனாட்சி அம்மன் கோவிலை அரசரை கொண்டு கட்டுவித்தனர். (இப்போது சித்திரை வருடப் பிறப்பின் அன்று சூரியன் சரியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் உச்சம் கொடுக்கின்றான். இதனை வைத்தே இவர்கள் காலம் கணித்தனர். இந்த இராமலிங்கம் நல்லூருக்கு வர முதல் நல்லூரிலே  ஒரு பனை மரம் காய்த்து அடுத்த தடவை மீன்டும் காய்க்கும் காலம் வரை ஒரு வருடம் என கனிக்கப்பட்டுவந்தது.. ( 1910 ம் ஆண்டுக்கு பின்னர் ஆங்கிலேயரால் இலங்கையில் உருவாக்கப்பட்ட மனிங் யாப்பு சீர்திருத்ததுக்கு பின் ஆங்கில தேதிகள் இலங்கையின் யாழ் மக்களிடையே பிரபலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான் நள்ளிரவில் இருந்து நாள் இலங்கையில் எண்ணப்படுகிறது.) இப்படி சூரியன் உதிக்கும் காலத்தை ஒவ்வொரு நாளும் அவதானித்து அதனுடைய உதயத்தை பதிந்து வைத்தால் மீண்டும் அதே ஆண்டு அது போல் சூரியன் கட்டாயம் உதிக்கும் தானே.. இதே போல் நட்சத்திரத்தையும் ஒரு வருடம் அவதானித்து பதிந்து வைத்திருந்தால் யாராலும் கூட சரியாக யோதிடர் போலவே அனைத்தும் கனித்துக் கூறமுடியும். சோதிடரின் சிறந்த மதிநுட்பத்தை?????? பாh;த்த அரசர் அவர் கூறுவதெல்லாம் உண்மை என்றே நம்பினார். இப்படியாக இவர் ஜோதிடப் புத்தகம் எழுதும் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த சில சம்பங்கள்..


1.    பிறக்கும் குழந்தை எந்த காலத்தில் பிறந்தது என்ற குழப்பம் நிலவியது

2.    அந்நேரம் மருத்துவ வசதி குறைந்த காலமாகையால் பிறந்த குழந்தைசரியாகப் பராமரிக்க முடியாமல் இறக்க நேரிட்டது.

3.    பெரியயம்மைஇ பொக்குளிப்பான் போன்ற நோய்கள் உருவாகின. இவற்றை அம் மக்கள் தெய்வக்குற்றம் என்றே நினைத்தார்கள்

4.    பெண்கள் தாங்கள் மணம் முடிக்கும் ஆணின் வயதும் சரியாகக் கணிப்பில் இல்லாத காரணத்தால் 15 – 25 வயது கூடுதல் வித்தியாசத்தில் திருமனம் செய்தார்கள்

5.    உயர் சாதியில் இருந்தவர்கள் தங்களது உடற் பசிக்காக கீழ்சாதிப் பெண்களை தங்களது சொத்தாக்கி பாலியல் தேவைக்காக அடிமைபோல் வைத்திருந்தார்கள்.

6.    கோவில்களில் தாசி என்னும் ஆடல் கலையில் வல்ல பெண்கள் பாலியல் தேவைக்காக இருந்தும் திருப்திப்படாது கீழ்சாதிப் பெண்களுடன் தொடர்பு கொண்டனர் உயர்சாதி ஆண்கள்

7.    உயர்சாதிப் பெண்களை தாழ் சாதி ஆண்கள் அனுகவிடாது வைத்திருந்தார்கள்.

8.    போர்க்களத்தில் இறந்த போர்வீரர்களது மனைவி, மக்களை தங்களது தேவைக்கா பாவித்துக் கொண்டிருந்தாh;கள்.

9.    உயர்சாதியில் திருமணமான  பெண்கள் கணவருக்கு தெரியாமல் பல போர்வீரர்கள், அடிமைகள் போன்றவர்களை பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வைத்திருந்ததாகவூம் கூறப்படுகிறது.
இதனை கவனித்த உயர்சாதி புருசர்கள் தாங்கள் வெளியூரோ வேறு துணையைத் தேடி போகும் போதோ தங்களது மனைவிகளுக்கு மேகலை (அரை மூடி சலங்கை) எனப்படும் பூட்டுடன் கூடிய தங்க ஆபரணத்தை அணிவித்து பூட்டிவிட்டு திறப்பினை தாங்கள் கொண்டு செல்வார்கள். இது பெண்களுக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய அணிகலன். ஏனெனில் இது அணிந்திருந்தால் பெண்கள் சிறுநீர் கழிக்க மாத்திரம் முடியும்.


10.    அக்காலத்திர் வீரத்தை மாத்திரம் வைத்தே பெண்கள் ஆண்களை விரும்பி திருமணம் முடித்தார்கள். வீரத்தில் சிறந்தவனுக்கு பெண் கொடுக்கப்பட்டது. சிறந்த வீரனை பல பெண்கள் விரும்பி திருமணம் செய்தகாலம்..சாதகம் பார்த்தல் என்பது அப்போது துளியும் இல்லை. கோழைகளுக்கு அங்கு இடமில்லாது போய்விட்டது.. உதாரணமாக உயர் சாதியில் ( முதலியார், உடையார், மாப்பாணர்) பிறந்த இளைஞர்களுக்கு இவ் வீரத்தில் பாரிய குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களது பரம்பரைப் பெண்களே அவர்களை வெறுத்த காலம் அது…..

இவ்வாறு குழப்பங்கள் இருந்த காலத்தில் இவ் முக்காலமும் உணர்ந்த இராமலிங்க முனிவரை அரசர் அணுகி இவற்றுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆராய தொடங்கினார். அப்போது தொடங்கியது தான் குறிப்பு எழுதல் வேலை..?????

முதலில் வயதினை சரியாகக் கணிப்பதற்கு தோன்றிய இந்தக் குறிப்ப்பு எழுதும் வேலை பின்னர் எவ்வாறான பிரச்சனைகளுக்கு எப்படி மக்களின் வாழ்வில் நட்சத்திரம், ராசி, யோனி, தாலி செவ்வாய் குற்றம் என புகுந்து விளையாடுகின்றது

உடனடியாகவே இராமலிங்க முனிவர் களத்தில் இறங்கினார். ஒரு சட்டம் நல்லூர்; ஆஸ்தானத்திலே இயற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அரச ஆஸ்தான சோதிடரை அனுகும்படியும் முன்னர் பிறந்த குழந்தைகள் எந்தக் காலத்தில் பிறந்தார்கள் என்று தெரிவிக்கும்படியும் கட்டளை இயற்றினார். மக்கள் அவரை அனுகத்தொடங்கினார்கள். அச் சோதிடரும் நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் போன்றவை எங்கு நிற்கின்றன என்று அறிந்து குறிப்பு எழுதத் தொடங்கினார்

. இவ்வாறு கூடுதலான குழந்தைகள் பிறக்கத் தொடங்க இவரால் பல சீடர்கள் இவருக்கு உதவியாக பயிற்றுவிக்கப்பட்டாh;கள். இவ்வாறு தொடங்கிய இவரது சேவை மக்களது வாழ்விலும் புகுந்து விளையாடத் தொடங்கியது.

அந்தக்காலத்தில் சரியான வயது தெரியாதபடியால் ஒரு 50வயது கிழவனும் தனது வீரச் செயலைக் காட்டி 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். வயது கூடிய பெண்கள் வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்திருந்தனர். இதனால் அவர்ளுக்கு பல பிரச்சணைகள் குறிப்பாக பாலியல் ரீதியாக ஏற்பட்டது.

சில பெண்களும் ஆண்களும் நெறிதவறி நடக்க தொடங்கினார்கள். இதை அவதானித்த இந்த ஞானி  இதனை ஆராய வெளிக்கிட்டார். அவார் திருமணம் சம்பந்தமாக இயற்றிய ஜோதிடம் மிகவூம் நகைப்புக்கிடமானது..

 பனை காய்த்த காலம்,  மா காய்த்த காலம்,  புளி காய்த்தகாலம் , சில பூக்கள் பூத்தகாலம் பெரும்பாலான நாய்கள் பாலியல்உறவு கொள்ளும் காலம், மற்றைய விலங்குகள் எந்த எந்த காலத்தில் கூடுதலாக பாலியல் உறவு கொள்ளும் காலம்,  விலங்குகள் துணையைத் தேடி அலையும் நேரம் இவற்றையும் அந்த கால நேரத்தில் நட்சத்திரங்கள் சூரியன் சந்திரன் என்பன எங்கு நின்றன என்பதையும் வைத்தே திருமணப் பொருத்தம் என்ற ஒன்றை உருவாக்கினார்.. இவ்வாறு அவரால் எழுதப்பட்டு வெளிவந்த ஜோதிட  சாத்திரத்தில் பிரபுக்களுக்கும் உயர் சாதியினருக்கும் சில சிக்கல்கள் உருவாகியது...அதாவது பாலியல் தேவைக்காக வேறு பெண்களை அடையமுடியாத படி ஒரு பயத்தினை அவர்களுக்கு உருவாக்கியது அந்த ஜோதிடம். உடனடியாக அதற்கும் அவர் ஒரு தீர்வு கண்டார். அதாவது உயர்சாதியில் பிறந்தவர்களுக்கு சில பொருத்தங்கள் புற நடையாக இருக்கலாம் என்று.. அதில் முக்கயமானது தாலிப் பொருத்தம் (ரச்சுபொருத்தம் என்று பஞ்சாங்கத்தில் இருக்கிறது),  யோணி பொருத்தம் என்பவற்றை உயர்சாதியினர் பார்க்கத் தோவையில்லை என்று...

இதனையும் பஞ்சாங்கத்தின் திருமணப் பொருத்ததின் கடைசியில் பார்க்கலாம்....யோனி என்னும் பொருத்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் பாலியல் தொடர்புக்கு என்று அவரால் விளக்கம் கூறப்பட்டுள்ளது கூறப்பட்டுள்ளது...

 இந்த ஜோதிடர் தனது அடியாட்களை பயன்படுத்தி யாழ்பாண ராச்சியத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்கள் எந்தக் காலத்தில் பிறந்தார்கள்.. எத்தனை மனைவி, பிள்ளைகளுடன் வாழ்கின்றார்கள்..

எத்தனை மனைவி வேறு ஆடவரோடு ஓடி இருக்கிறாள்..எத்தனை கணவர் வேறு பெண்களை அனுபவித்திருக்கிறார்கள்... திருமணத்திற்கு முன் எத்தனை பெண்கள் ஆடவரோடும் ஆடவர் பெண்களோடும் தொடர்பாயிருந்து அரசனிடத்தில் தண்டனை பெற்று இருக்கிறார்கள், எத்தனை பெண்கள் திருமனமானவுடன் கணவர் இறந்திருக்கிறார்,   பெண் இறந்திருக்கிறாள் என்று அவர்கள் வாய்மூலமாக கூறிய சில அற்ப தகவலை பயன்படுத்தி ( அவர்கள் பொய் சொல்லியும் இருக்கலாம். நமது பத்திரிகைகள் தேர்தல் நேரத்தில் மக்கள் கணிப்பு கேட்டு யார் வெல்வார்கள் என்று சொல்லி மூக்குடைபடுவது போல) சோதிடம் எழுதினார்

மக்கள் தாங்கள் பிறந்தகாலத்தை பின்வருமாறு கூறியிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மா பூத்தகாலம், பணை பூத்தகாலம்,  ஆலம்பழம் விழுந்தகாலம்,  நாவல் பழுத்த காலம் என்று பல்வேறு காலத்தை இவர்கள் குறித்து வைத்திருந்து சோதிடரின் சீடர்களுக்கு கூறியிருக்கின்றனர். அவரும் அதையும் அப் பூப்பூக்கும் காலத்தில் நட்சத்திரங்கள், கிரகங்கள் எங்கிருந்தன என்று கணித்து எமக்கு இந்த போற்றக்கூடிய சோதிடம்?????!!!!!!!!!!!! தந்தார்.

 செவ்வாய் சில இடத்தில் இருந்தால் அவருக்கு குற்றம்...அப்படி இப்படி என்று சீடர்கள் கொடுத்த தகவல்களை வைத்து ஒரு பாரிய கற்பனைக் கலவையூடன் கூடியதான சோதிட ஏடு உருவாகியது......

பல்லி தனது துணையை கவருவதற்காகவூம் ஏனைய பல்லிகளை எச்சரிப்பதற்காகவூம் வெளிவிடும் சத்ததிற்கும் சோதிடம்......
காகம் பசிக்காகவும் மற்றைய காகங்களை வரவழைப் பதற்காகவும், பயத்தாலும் வெளியிடும் சத்தத்தை வைத்து சோதிடம்...
முழுவியலம் என்னும் ஒன்று வெளியே செல்லும் போது இவர்கள் முன்னுக்கு வரக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே பஞ்சாக்கத்தில் இருக்கிறது....
அப்படி பார்க்கும்போது பிரதான வீதி அருகில் இருக்கும் ஒரு நபர் வெளியிலே போகமுடியாது..
இவர் எழுதிய பஞ்சாங்கத்தை இந்திய சோதிடர்கள் மிகவும் எதிர்த்திருந்தார்கள்....
அவர்களுக்கிடையில் பாரிய கருத்துச் சண்டை உருவாகியிருக்கிறது...
இருந்தும் இச் சோதிடருக்கு நல்லூர் அரசனால் இருந்த செல்வாக்கினால் யாழ்பாணத்தில் இதை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவர முடிந்தது.

இச் சோதிடரால் நட்சத்திரங்கள் சந்திரன், சூரியன் என்பன இருக்கிமிடம் துல்லியமாக கணித்து கூறமுடிந்தது...
ஏனெனில் இது மாறாது .. ஒரு வருடத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக இவற்றை ஆராய்ந்து குறித்து வைத்திருந்தால் அடுத்த வருடமும் இதே போல் நிச்சயம் வரும்
இதை வைத்துக் கொண்டுதான் இப்போதய சோதிடர்களும் அமைவாசை, அட்டநமி போன்றவை பஞ்சாங்கத்தில் எப்படி முதலே தெரிய வருகிறது என்று முட்டாள் தனமான கேள்விகள் கேட்கின்றாh;கள்...

தர்க்க ரீதியாக  சிலவற்றை யோசித்துப்பாத்தால் உண்மை விளங்கும்.... இவரது ஜோதிட சாத்திரத்தில் உள்ள குறைபாடு சிலவற்றை கண்டு பிடித்து தானும் ஒரு பெரிய ஆள் என்று மற்றவர்களுக்கு காட்டுவதற்காக கார்த்திகேய ஐயர் என்பவர் சைவசமயத்தவர்களுக்கான மிகப்பெரிய ஆதினமாக இந்தியாவில் இருந்த திருவாவடுதுறை ஆதினத்தில் 1880 தனது திறமையையும் சோதிடத்தில் நிரூபித்து திருக்கணித பஞ்சாங்கம் என்னும் இன்னுமொரு பொக்கிசம்???????!!!!!!!!!!!! எமக்களித்தார்... அதில் உள்ளது அனைத்தும் உண்மையிலே வானியல் சாத்திரத்தில் சரியானது... ஆனால் அவர் அதையும் மக்களுடைய வாழ்க்கையில் புகுத்தியிருப்பது மிகவும் வேதனையாய் இருக்கிறது......

இந்த இராமலிங்கமும் கார்த்திகேசுவும்... ஜாதக தோசத்தால் திருமணம் செய்யது இருப்பவர்களின் கையில் கிடைத்தால் அவ்வளவுதான்...  இவர்கள் சொல்லிவிட்டு போய்விட்டார்கள் மற்றவர்கள் இதனால் படும்பாடு யாருக்கு தெரியும்....

இந்தியாவில் ஏராளமான பஞ்சாங்கங்கள், யோதிடங்கள்....இவை எல்லாம் உண்மையா?????? சிந்தியுங்கள... கிளியோசியம்.. கருட யோசியம்....பாம்பு யோசியம்.... ஏராளமா... இருக்கிறது...இப்ப ஒரு ஜோதிடம்..அது என்னவோ ஆட்டோவோ பஸ்சோவாம்…அடஅட ஆட்டோபஸ் ஜோதிடமாம் .வானத்தில் நட்சத்திரங்களும்... கிரகங்களும் தங்கள் பாட்டில் இருக்கின்றன... அதை நாங்கள் வைத்து எங்கள் வாழ்க்கையில் படுத்தும் பாடு.....சொல்ல முடியாதுதுது..  
.
ஜோதிட  ரீதியில் ஒரு ஆணுக்கு 85வீத பொருத்தமாக இருக்கும் பெண் கிடைப்பதற்கான நிகழ்தகவுக் கணக்கு ஒன்று தரப்படுகின்றது.

யாழ்ப்பாண பெண்தான் வேண்டும் என ஒரு மாப்பிளை   எடுத்துக் கொண்டால்

யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்களின் தொகை ---------- 200 000 அண்ணளவாக
அதில் திருமணம் செய்தவர்கள் -------- 115 000 அண்ணளவாக
30வயது ஆணுக்கு பொருத்தமான வயதில் உள்ளவா;கள் (20 – 28)----------  14 000 அண்ணளவாக

அவனுக்கு சோதிடத்தின் படி கன்னிராசியில் உள்ள உத்திரத்தில் 3ம் பாதமும் சித்திரையில் 2ம் பாதமும் உள்ள பெண் இருந்தால் தான் 85 வீதம் பொருந்தும். அப்படி பார்த்தால் 14000 திருமணமாகாத 20 – 28 வயதுக்குட்பட்ட பெண்களில் ஒரு 1000 பெண்கள் இருப்பார்கள்... அவர்களில் நிச்சயமாக மூன்றில் இரண்டு பங்கு பெண்களுக்கு சோதிட நிகழ்தகவின் படி செவ்வாய் குற்றம் கட்டாயம் இருக்கும்.... அப்படியாயின்  300 பெண்கள் இருப்பார்கள்.... அவர்களில் நல்ல சாதி ரீதியில் பிரிவு காட்டி அதில் உள்ளவர்கள் ஒரு 200 போ; இருப்பார்கள்... 200 பெண்களில்  அழகானதும் அவனுக்கு பிடித்துமான ஒரு நல்ல பெண் ஒரு 10 பேர் இருப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படி பிடித்த 10 பெண்களில் அவனை அவர்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்று கேட்டால் ஒருத்திக்கு தான் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்வாள்... இவளை அவன் எப்போது எங்கு என்று தேடிப்பி பிடிப்பது...... தலை சுற்றுகிறது இந்த புறோக்கர் வேலையை நினைக்கும் போது.  சோதிடத்தில் உள்ள  வானம், நட்சத்திரங்கள் சம்பந்தமானவை உண்மை. . ஆனால் அதை வைத்துக் கொண்டு மக்களுக்கு சொல்லப்படும் பலன்கள் மிகக் கொடுமையான அப்பட்டமான பொய்......உதாரனத்திற்கு இராமலிங்கத்தின் வழித்தோன்றல் என்று கூறி சித்தானந்தபூபதி என்பவரால் 1890 ல்  எழுதப்பட்ட பெண்களின் மோகம் என்னும் நூல்....

இவ் நட்சத்திரத்தில் பிறந்த பெண்னை இப்படி அனுகவேண்டும்....
இந்த இராசியில் பிறந்தவள் இப்படி இருப்பாள்... வெள்ளி நீசம் பெற்றிருந்தால் கள்ளபுருசன் வைத்திருப்பாள்... சனி லக்கினத்தில்; இருந்தால் இன்னொருவன் அனுபவித்தவளாக வேறு ஒருவனை திருமணம் செய்வாள்... செவ்வாய் குற்றத்தில் 1ல் செவ்வாய் இருந்தால் பூப்படையூம் முன் கலங்கப்பட்டிருப்பாள்...2ல் செவ்வாய் குற்றமிருந்தால் வயது முதிந்தவரிடம் விருப்பம் வைத்திருப்பாள்....இவ்வாறு ஏராளாமான அப்பட்டமான பொய்கள் சோதிடத்தில் இருக்கிறது... அத்தோடு பெண்கள் பூப்படையூம் காலத்தை வைத்து ஒரு சோதிடம்....அதற்கான பலன்... இந்தியாவில் இதை பார்த்துதான் திருமணம் செய்வார்கள்....இவற்றை எல்லாம் ஒருவன் வாசித்து நம்பி இருப்பான் என்றால் அவன் தனது மனைவியுடன் ஒருபோதும் சந்தோசமாக இருக்கமாட்டான்... இதற்கு மேல் என்னால் பொய்யான சோதிடம் பற்றி சொல்ல மனம் வரவில்லை..


(Thanks:- Newjaffna)

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP