இணையத்தில் தமிழ் - Tamil on Web -




தமிழர்களாகிய நமக்கு சிறப்பம்சம் என்னவெனில்இணையத்தில் தமிழை உபயோகப்படுத்துவோர் பெரும்பாலும் கூகிள் தமிழ் எழுதியை பயன்படுத்தி பார்த்து இருப்பீர்கள். இதன் சிறப்பம்சம், நீங்கள் தமிழில் டைப் செய்து கொண்டிருக்கும் போது தவறாக டைப் செய்தால் சரியான தேர்வுகளை தானாகவே தரும். பிளாக்கரிலும் இடுகை எடிட்டரில் கூகிள் தமிழ் எழுதி ஒருங்கிணைக்க பட்டு உள்ளது.

இணையத்தில் இதனை உபயோகிக்க நீங்கள் இந்த சுட்டிக்குசெல்ல வேண்டும். முன்பு குறைந்தபட்ச வசதிகளுடன் இருந்த இந்த பக்கத்தை தற்போது அதிக வசதிகளுடன் மேம்படுத்தி உள்ளார்கள்.

1. இப்போது வேறு எந்த வோர்ட் பிராசசர் உதவி இல்லாமல், கூகிள் தமிழ் எழுதி மூலம் உங்கள் ஆக்கங்களை வடிவமைத்து கொள்ள முடியும். அதற்கென எழுத்துக்களை பெரிதாகும் வசதி, போல்ட், இட்டாலிக், அண்டர்லைன், அலைன்மென்ட் உள்ளிட்ட பல வசதிகள் அறிமுகப்படுத்த பட்டு உள்ளன.


2. இணைய பக்கங்களுக்கு சுட்டி கொடுக்கும் வசதி, HTML ஆக எடிட் செய்யும் வசதி உள்ளிட்டவற்றால் ஒரு முழு இணைய பக்கத்தையே அங்கே வடிவமைத்து கொள்ள முடியும்.

3. மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், கூகிள் மொழி மாற்றி (Dictionary) இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஆங்கில வார்த்தைகளை தமிழாகவோ, தமிழ் வார்த்தைகளை ஆங்கிலமாகவோ மொழி மாற்றம் செய்து கொள்ள முடிகிறது.


4. அச்செடுக்கும் வசதி மூலம் நீங்கள் டைப் செய்த பக்கங்களை பிரிண்ட் எடுத்து கொள்ள முடியும்.

கூகிள் நம் மொழி சம்பந்தமான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து அக்கறை காட்டி வருவது இணையத்தில் தமிழ் வளர மேன்மேலும் உதவும்.

 கூகுளுக்கு நன்றி.

6 கருத்துக்கள்:

Arjun 17 July 2011 at 00:16  

thanks தோழி பிரஷா for your comments

Mahan.Thamesh 28 October 2011 at 17:36  

GOOD POST THANKS FOR SHERE

Arjun 29 October 2011 at 14:48  

Mahan.Thamesh ,ராக்கெட் ராஜா Thanks alot for your advice & visiting

மழை 29 October 2011 at 17:44  

பயணுள்ள பதிவு.

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP