இலங்கையின் ரோமியோ - ஜூலியட் காதல் ஜோடி!

உலகப் பிரசித்தி வாய்ந்த ரோமியோ - ஜூலியட் காதல் ஜோடியின் பாணியில் இலங்கையில் புத்தளம் மாவட்டத்தில் காதல் ஜோடி ஒன்று வாழ்வை முடித்துக் கொண்ட துயரியல் சம்பவம் நேர்ந்து உள்ளது. 

காதலி நேற்று தற்கொலை செய்து

இருக்கின்றார். காதலி தற்கொலை செய்து விட்டார் என்பதை இன்று மாலை அறிந்து கொண்ட காதலனும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இக்காதல் ஜோடிக்கு இடையில் தகராறு ஒன்று ஏற்பட்டு இருந்தது. சோதிடப்படி திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் காதலன். ஆனால் முடியாது என்று ஒரே பிடியாக நின்றார் காதலி. இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் காதலி தூக்கில் தொங்கி நேற்று  உயிரை மாய்த்தார். காதலன் விமானப் படையில் கடமையாற்றுபவர். இரத்மலானை விமான நிலையத்தில் கடமையில் இருந்திருக்கின்றார். 

இன்று மாலை ஊருக்கு புகையிரதத்தில் திரும்ப வந்தபோதே காதலியின் தற்கொலையை கேள்விப்பட்டார்.

ஓடும் ரயிலுக்கு முன்னால் அக்கணத்திலேயே குதித்து தற்கொலை செய்தார்

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP