23 வயதில் பாட்டியான பெண்...! புதிய உலக சாதனை


23 வயதான ரோமானிய பெண், உலகின் மிக இளமையான பாட்டியாக உலக சாதனை படைத்துள்ளார்.
ரிஃப்சா ஸ்டானேஸு எனும் குறித்த பெண் 12 வயதில் தனது முதல் மகளான மரியாவை பெற்றெடுத்தார். என்னை பின்பற்றிவிடாதே என அவர் எடுத்துக்கூறியும் கேட்காமல், மரியா  தனது 11 வயதில், இயொன் எனும் குழந்தையை
பெற்றெடுத்துள்ளார்.

பக்கத்து கிராமத்தை சேர்ந்த இன்னுமொரு ரோமானியருக்கு தனது தந்தை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்ததாலேயே, தான் 12 வயதில் திருமணம் புரிய நேரிட்டது என கூறும் ரிஃப்சா, அயனெல் எனும் நகை வியாபாரியை மணம் முடித்தார். இவர்களது மகள் மரியா 10 வயதில் கர்ப்பமடைந்ததுடன், பாடசாலை செல்வதையும் நிறுத்தியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தது 6 மாதங்களின் பின்னரே தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், தனக்கு பேரன் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ள ரிஃப்கா, மரியாவின் உடல் நலத்திற்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் மணி, 26 வயதில் பாட்டியானதுவே சாதனையாக இருந்தது.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP