தலை தெறிக்கும் யாழ்ப்பாண கலாச்சாரம் ....!!



யாழ்ப்பாண பெருநகரத்தில் அடிக்கடி ஒழுங்குபடுத்தப்படும் களியாட்டங்களும் நிகழ்ச்சிகளும் அதிகமாக மேய்ந்தது பெண் உடலங்களைத்தான். நிகழ்வு முடிந்து மறுநாள் காலை அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் அங்குள்ள மறைவான இடங்களில் அதிகமாகச் சிதறிக்கிடப்பவை ஆணுறைகளும் உள்ளாடைகளும்தான்.
இந்தக் கட்டுக் கடங்காச்  News From Newjaffna.com
சுய கட்டுப்பாட்டு மீறல்கள்தான் நம் இடங்களைச் சிசுக்களை எறியும் குப்பை மேடுகளாக மாறவைக்கின்றன. 



அண்மைக்காலமாக யாழ்ப்பாணப்பத்திரிகைகள் வெளியிடும் காதல் தொடர்பான செய்திகள் அதிர்ச்சி தருவனவாயுள்ளன. தொடர்ச்சியாகப் பிறந்த சூடு ஆறும் முன்னேயே அழகான சிசுக்கள் தெருக்களில் எறியப்படுகின்றன. 
பற்றைக்காடுகளுக்குள் உரப்பைகளில் சுற்றிப் போடப்படுகின்றன. வீட்டுக்கோடிகளில் புதைக்கப்படுகின்றன. இந்த நிலைமை நல்ல பண்பாடுமிக்க சமூகமொன்றுக்கு விழுந்த சாபக்கேடாகவும் நோக்கப்படவேண்டும்.
>
கடந்த ஆண்டு வெளியான யாழ்ப்பாணப் பெண்கள் பற்றிய தரவு அறிக்கையொன்றில் 250 இற்கும் மேற்பட்ட பெண்கள் தந்தையின் பெயர் தெரியாத குழந்தைகளை வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைகளில் வெளியிடும் தகவல்களைவிட சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபடும் திருமணமாகாத இளம் பெண்களின் தொகை பல மடங்காக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் உயர்தரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர் நிலையைக் கடக்காத பெண்பிள்ளைகளே இந்த நடவடிக்கைகளில்  ஈடுபட்டுவருவது கவலையளிக்கின்றது. 

 >
இக் கவலையளிக்கும் செய்திகளில் இருந்துதான் யாழ்ப்பாணத்தில் காதல் பிறக்கும் தருணங்கள் பற்றிச் சிந்திக்க வைத்தது. இன்றைய இளைஞர், யுவதிகளின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்ட கைத்தொலைபேசி, Face Bokk போன்றன எல்லா எல்லைகளையும் கடந்து உறவைப்பேண வைக்கிறது. அந்த  உறவு கர்ப்பப்பைவரை ஊடுருவி அதனை நிரப்பிவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் வரை நிலைத்திருக்கும் வகையில் பின்னப்படுகிறது, பிணைப்பில் ஈடுபடுகிறது என்பதே இங்குள்ள சோகம். இதற்கு அதிவேகமாகப் பரவிக் கொள்ளும் காதல் காய்ச்சல்தான் பிரதான காரணம்.யாழ்ப்பாணத்து நகர்ப்புறங்களிலும் உள்ளகப் பகுதிகளிலும் இருக்கும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் போன்றன அதிகளவில் பெண் உழைப்பாளர்களை நம்பியே வாழ்கின்றன. 

அந்த நிலையங்களில் பொருள் விற்கப்படுகிறதோ இல்லையோ பெண் உடலங்கள் இலகுவாக விற்கப்பட்டுவிடுகின்றன.
வணிகமயப்பட்டுப் போன கல்வி, சாதாரணதரம் படிக்கும் பிள்ளையைக்கூட நகரம் நோக்கி இழுக்கிறது. இந்த ஈர்ப்புக்கள் முகம் முன்தெரியா, பின்தெரியா நபர்களோடு தொடர்பினை உருவாக்கி வருகிறது. இதில் பல நன்மைகள் இருப்பினும் கட்டுரையின் பிரதான கருப்பொருளுக்கு அமைவான காரணிகளும் இருக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் வேலியே பயிரை மேயும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மாணவியையே காதலித்துத் திருமணம் செய்து பிரச்சினைப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதுபோல் பேருந்து நடத்து நர்கள் மீதும் இந்தக் குற்றங்கள் சுமத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் காதலின் கலைக்களஞ்சியமாக மாறிவிட்டது போலவே காட்சியளிக்கிறது. முதலாம் வருட மாணவர் தொடக்கம் முதுநிலை விரிவுரையாளர்கள்வரை புரியும் லீலைகள் யாழ்ப்பாணத்து மக்கள் அறியாத செய்தியல்ல. பல்லினப் பண்பாடுகளுடன் வரும் ஆண்களும் பெண்களும் பெரும் கற்பனைகளோடும் கனவுகளோடும் உள்நுழைகின்றனர். இடைக்காலத்தில் தொற்றிக்கொள்ளும் காதல் மயக்கம் கொஞ்ச நாள்களுக்குள்ளேயே தோலுக்கானதாகவும், தசைக்கானதாகவும் மாறிவிடுகிறது. வெறும் பொழுது போக்குக்காகவும் சுகங்களுக்காகவும் காதல் வயப்படுகின்றனர். 4 வருடமும் ஒரே காதல் சோடியாய் எங்கும் திரிபவர்கள் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறியவுடன் வேறொரு வரை நலன்களின் அடிப்படையில் திருமணம் செய்துகொள்கின்றனர்.

  
ஆனாலும் பல்கலைக்கழகச் சூழலிலும், தமிழ்ச் சமூகத்திலும் கற்பு என்பது பிரதான ஒழுக்கப்பண்பாகவே பேசப்படுகிறது. பேருந்துகளிலும்,பேருந்து நிலையங்களிலும் காதல்படும்  பாட்டை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பேருந்தின் பின் இருக்கைகளின் முன் இருக்கும் இருக்கைகளில் பின்பக்கம் பெரும்பாலும் கைத்தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்படாமல் இருப்பதேயில்லை. 


பேருந்துக்குள் நிற்கும் சில இளைஞர்யுவதிகள் பயணச் சிட்டைகளையும் நாணயத் தாள்களையும் காதலைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகமாகவே  கையாளுகின்றனர்.  இந்தத் தொடர்புகளால் உருவாகும் பிணைப்பின் உச்சத்தில் இளைஞர்களும் யுவதிகளும் நடந்து கொள்ளும் முறைகள் பஸ்ஸினுள் பயணிப்பவர்களைக் கூடக் கவனிக்காத அளவுக்குச் சென்றுவிடுகிறது. அந்த லீலைகள் அவர்களின் பெற்றோருக்குச் சமமானவர்களையோ, கற்பித்த ஆசிரியரையோ, மதிப்பதில்லை. பேருந்து நிலையம் பற்றிச் சொல்லவே தேவையில்லை

.
யாழ்ப்பாண பெருநகரத்தில் அடிக்கடி ஒழுங்குபடுத்தப்படும் களியாட்டங்களும் நிகழ்ச்சிகளும் அதிகமாக மேய்ந்தது பெண் உடலங்களைத்தான். நிகழ்வு முடிந்து மறுநாள் காலை அந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் அங்குள்ள மறைவான இடங்களில் அதிகமாகச் சிதறிக்கிடப்பவை ஆணுறைகளும் உள்ளாடைகளும்தான்.
இந்தக் கட்டுக் கடங்காச் சுய கட்டுப்பாட்டு மீறல்கள்தான் நம் இடங்களைச் சிசுக்களை எறியும் குப்பை மேடுகளாக மாறவைக்கின்றன. 


காதல் என்பது ஓர் உணர்வு. அது தவறாகப் பேசுவதற்கு அருவருப்பான ஒன்றில்லை. தமது சமூகப் பெறுமதியையும் அதன் உயர்தரமான பண்பாட்டையும் கவனத்திலெடுத்து காதலைக் காதலிக்க வேண்டும். இல்லையேல் அநாதைச் சிசுக்களின் எண்ணிக்கையும் தந்தை தெரியாத பிள்ளைகளுடன் இளம் தாய்மார்களது எண்ணிக்கையும் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் .


Thanks Newjaffna.com
http://www.newjaffna.com/fullview.php?id=MjM0OA%3D%3D

1 கருத்துக்கள்:

Arjun 6 March 2011 at 16:51  

Akilan Sandilyan
அனைத்து சமுக கட்டமைப்புகளும் மனிதன் என்ற சமுக விலங்கினத்துக்கு பொதுவான
இயல்பூக்கன்களை கொண்டரிக்கும் எமதுசமுகம் ஒன்றும் விதி விலக்கல்ல
கல்வி மதம் சமுகஒழுக்க ..கட்டமைப்பின்
சிதைவு ...
பெண்ணடிமைத்தனம் ...
ஆணாதிக்கம் ...
வறுமை இவை எல்லாம் இவ்வாறான சம்பவங்களின் தோற்றுவாய்
வெறுமனே காரணங்களை களையாது...விளைவுகளை மாத்திரம் விமர்சிக்கமுடியது அருண் ராஜேஸ்வரன் உங்களுக்கு
ஒன்று தெரியுமா ?
ஊரில் இருந்து கொழும்பு வந்து உள்ள கூத்தெல்லாம் நிகழ்த்திவிட்டு ...ஊர் திரும்பியபின் வெள்ளை வேட்டி
கட்டி நீறணிந்து கலாசார பெருமை பேசும் எம்மவர் மனப்பான்மை ....உள்ளும் புறமும் ..நியாயமாய் ..பார்ப்போம்

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP