சிவதொண்டன்

யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே முக்கியமானவராகக் கருதப்படுகின்ற  அருங்கருத்துக்களை வெளிக்கொணரவென்று சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடராஜன் என்பாரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இது.
1935ம் ஆண்டு மார்கழி
மாதத்திலிருந்து “எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவார் ஈசன்” என்னும் சுலோசத்தை தாங்கி திங்கள்தோறும் சிவதொண்டன் வெளிவந்து மக்கள் மத்தியிலே அமைதியாக சமயப்பணி ஆற்றி வருகின்றது. சிவதொண்டனின் மூன்றாம் இதழ் முதலாய் நற்சிந்தனை எனும் தலைப்போடு  திருவாய் மொழிகள் பதிவாக தொடங்கின.
சிவதொண்டன் ஏடு 2011 இலே பவளவிழாக்காண்கின்றது.
வாழி சிவசமயம் வாழிதிரு நீறுகண்டி
வாழிதிரு வைந்தெழுந்து மன்பர்களும் – வாழியரோ
வீடறியும் மேலோர் விழையுஞ் சிவதொண்டன்
சீடறிவு மன்பு நிறைந்து.
என்று வாழ்த்தி வணங்குவோம்

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP