ஈழத்து சித்தர்கள்-நம்மவர்களை நாம் அறிய வேண்டும்

சித்தர்கள் என்ற சக்தி உள்ள மனிதர்கள் இந்த பூமியில் காலா காலம் தோன்றி மனிதர்களுக்கு நன்மைகளையும் தான் சார்ந்த சமூகத்தையும் வழிகாட்டலையும் மேற்கொண்டு உள்ளனர். தற்கால சமூக நிலை(மக்கள்) போன்று எல்லா நன்மையும்,பொருள் பண்டமும்  நான் மட்டும் பெறவேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கம் அன்றி மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

இவர்களில் நமது ஈழத்தில் உள்ள சில சித்தர்கள் பற்றி பார்போம். இந்தியாவில் சித்தர்கள் தொடர்பாக பலர் கதைக்கும் அளவிற்க்கு ஈழ சித்தர்கள் தொடர்பாக மௌனம் பேணுவது கவலைக்கு உரியது .


இன்றும் பலர் யாழ் மண்ணில் குடையில் சுவாமி என்ற சித்தரின் புகைப்படங்களை தங்கள் வீடுகள் தொழில் நிலையங்கள் வாகனங்களில் வைத்து வணங்குகின்றனர். ஆனாலும் ஈழத்து சித்தர்கள் புகழை சக்தியை பலர் அறிய செய்ய வேண்டும்


கடையிற் சுவாமிகள் :
 

கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படுகிறார்.
வாழ்க்கை வரலாறு
இவர் தென்னிந்தியாவின் பெங்களூரில் ஒரு நீதிபதியாக கடமை புரிந்து வந்தார். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி கொலையாளிதான் என்று தீர்ப்பாகியது. யூரிகளும் குற்றவாளியைக் கொலையாளியே என்று தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதியாக இருந்த இவருள்ளே தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு நான் யார் என்ற தத்துவ விசாரணை எழுந்தது. இந்த மனக் குழப்பங்கள் காரணமாக நீதிபதித் தொழிலைக் கைவிட்டு குரு ஒருவரிடம் சென்று ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும்.
இலங்கைக்கு வருதல்
வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.
யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது
முக்கிய வாழ்க்கைக் குறிப்புக்கள்
 • இவருக்கென்றொரு அடியார் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் ஆசிகளையும் இவர் வழங்கிவந்தார்.
 • சாதி பேதம் பாராட்டாமல் இவர் செய்த நடவடிக்கைகள் சில இவருக்கெதிரான சிலரையும் உருவாக்கியது.
 • இவரது அன்பர்கள் மாமிச, மது விருந்தளித்தாலும் அவற்றையும் இவர் உட்கொண்டிருக்கிறார்.
 • இவருடைய நடவடிக்கைகள் மனநோயாளரின் நடவடிக்கைகளை ஒத்திருந்தமையால் காவல் துறையினர் இவரைப்பிடித்து கொழும்பு மனநல மருத்துவமனக்கு அனுப்புமுகமாக சிறையில் அடைத்து வைத்திருந்தனர். (மறுநாள் திறந்து பார்த்தபோது இவர் சிறையில் இருக்கவில்லை என்றொரு கதை இருக்கிறது)
 • இறுதிக் காலத்தில் இவர் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த நீராவியடியில் வெளியில் எங்கும் செல்லாது வாழ்ந்து வந்தார்

சித்தர்கள் தொடர்பான முன்னைய பதிவை காண கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
http://ejaffna.blogspot.com/2012/01/sitharkal-tamil-sithar-18-sithu.html

 சித்தானைக்குட்டி சுவாமிகள்
இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் .தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார்.
குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேஸ்வரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார். காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பெரியானைக்குட்டி சுவாமிகள் 
இவர் கண்டியிலே சிறு வயதில் சலவைத் தொழிலாளி ஒருவரின் பராமரிப்பில் இருந்து வந்தவர். பின்னர் கண்டி கதிரேசன் கோயில் படிகளிலே தங்கிச் சித்த சாதனைகளில் ஈடுபாட்டு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு இந்தியா சென்று நவநீத சுவாமிகளின் நட்பினைப் பெற்றார். அங்கு சித்தானைக்குட்டி சுவாமிகளைத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். இருவருடனும் சேர்ந்து பல சாதனைகளைச் செய்துவிட்டு மூவருமாக இலங்கை வந்தனர்.
இலங்கை மீண்ட சுவாமிகள் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். கொழும்பு வீதிகளிலே அதிகமாக நடமாடினார். கொழும்பு கப்பித்தாவாத்தை பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தார். இவரைப் போற்றியவர்களிலே சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறிப்பிடத்தக்கவர்.இவரின் சீடர்களில் சித்தானைக்குட்டி சுவாமிகளும் மொட்டைச்சி அம்மையாரும் குறிப்பிடத்தக்கவர்கள். மொட்டைச்சி அம்மையார் திருக்கேதீஸ்வரத்தில் கொட்டில் அமைத்து வாழ்ந்து வந்தார்.பெரியானைக்குட்டி சுவாமிகள் 1911 இல் சமாதியடைந்தார். இவருடைய சமாதி கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இவரது சமாதியுடன் ஒரு பிள்ளையார் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.


சிவயோக சுவாமி
 
சிவயோக சுவாமி ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.

வாழ்க்கைக் குறிப்பு
அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு.

கல்வி
கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்க பாதிரிமாரின் நிறுவனமொன்றில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலமும், தமிழும் படித்தார்.
அரசுப் பணி
பள்ளிப்படிப்பு முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.
தம்முடைய உத்தியோகக் கடமைகள் தவிர கனிதரும் மரங்களை நட்டுக் கவனமாகப் பராமரித்து வந்தார். அவ்வாறு அவர் நட்டு பராமரித்த மாமரம் ஒன்று இன்றும் "சுவாமியார் மரம்" எனும் பெயருடன் கிளிநொச்சியில் உள்ளது

செல்லப்பா சுவாமிகளுடன் ஐக்கியமாதல்
1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "யாரடா நீ ?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார்.
 
கொழும்புத்துறையில் ஆசிரமம்
குரு தீட்சை பெற்று கொழும்புத்துறைக்குச் சென்று, அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து சிறிது காலம் மோன சுகத்தில் திழைத்தார். செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டுஇ தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் மரியாதை இவருக்குக் கிடைக்கப்பெற்றது. டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.
சமாதி
மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.
நான்கு மகாவாக்கியங்கள்
செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். இவற்றை அவரது பக்தர்கள் மகா வாக்கியங்கள் எனப் பின்னாளில் வகைப்படுத்தினர். அவை பின்வருவன

எப்பவோ முடிந்த காரியம்
1. நாம் அறியோம்
2. ஒரு பொல்லாப்பும் இல்லை
3. முழுதும் உண்மை
நற்சிந்தனை
யோகசுவாமிகள் தன்னை நாடி வந்த பக்தர்களின் மனக்குறையை நீக்கும் பொருட்டும் அவர்களுக்கு இறை சிந்தனையை ஊட்டும் பொருட்டும் தன்னிடம் சுரந்த ஞான பானத்தை கீர்த்தனங்களாகவும், கவிதைகளாகவும் அவரவர் பக்குவத்திற்குத் தக பாடியருளினார். இவற்றை அவரது அணுக்கத்தொண்டர்கள் தொகுத்து நற்சிந்தனை என்னும் திருநூலாக வெளியிட்டனர். நற்சிந்தனை என்னும் ஒரு தமிழ்ச் சொல்லை தமிழிற்கு அறிமுகப்படுத்தியவர் யோக சுவாமிகளே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அருள்மொழிகள்
சுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகள்இசந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி, சிறிகாந்தா என்பவர்களுக்கு அவ்வப்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் அருளிய தெள்ளிய உயர்ஞான ரசங் கொண்ட அமுத வாசகங்களை சந்த சுவாமிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "The Words of Our Master" என்னும் தலைப்பில் சிவதொண்டன் சபையினூடாக வெளியிட்டார். பின்னர் செல்லத்துரை சுவாமிகள் இதனை எங்கள் ஆசான் அருள்மொழிகள் எனும் தலைப்பில் தமிழில் வெளியிட்டார்.
துறவுச் சீடர்கள்
யோகசுவாமிகள் இந்நிலவுலகில் உலவிய காலத்தில் ஆயிரக்கணக்கான பல்சமய, பல்மொழி அடியவர்கள் அவரது அணுக்கத் தொண்டர்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் சுவாமிகளின் வழியினை நேர்நிலையாகப் பின்பற்றி துறவுச்சீடராகப் பரிணமித்தவர்கள் மூவரே.
 1. மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் கைதடியில் தென்னோலைக் கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தவர்.
 2. சந்த சுவாமி. இவர் இலங்கையின் கடைசி ஆங்கிலேய தேசாதிபதி சோல்பரி பிரபுவின் மகன். யோக சுவாமிகளைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்ப்பாணக் கோவில்களில் உலாவியவர்.
 3. செல்லத்துரை சுவாமி, இவர் சுவாமிகளின் பணிப்பிற்கிணங்க சுமார் அரை நூற்றண்டு காலம் யாழ்ப்பாணம்இ மற்றும் மட்டக்களப்பு சிவதொண்டன் நிலையங்களில் இருந்து பணியாற்றி 2006 ஆம் ஆண்டு சமாதியடைந்தார்.
இவர்களைவிட சிவாய சுப்ரமணியசுவாமி, கௌரிபாலா (ஜெர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலிய இளைஞர்) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் எனப் பின்வந்தோரால் போற்றப்படுகின்றனர்.
“சாமி என்றிருக்கிறவர் தானும் மற்றவர்களை போலென்று எண்ணவேண்டும்” என்பதும் "நீங்களும் சுவாமி பண்ணவேண்டாம், மற்றவர்களையும் சுவாமி பண்ண விடவேண்டாம்" என்பதும் சுவாமிகளின் வாக்குகள்
செல்லப்பா சுவாமிகள்
 
செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா.
செல்லப்பா இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின்இ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்று ஆங்கிலங் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின் உண்டான சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றி அதிகாரிகளின் அபிமானம்பெற்று பலமுறை களஞ்சியப் பொறுப்பதிகாரியாகவும் பதிற்கடமையும் பார்த்து வந்தார்.
செல்லப்பர் தமது உத்தியோகங்களை நேர்மையாகவும் திறமையாகவும் ஒழுங்காகவும் அதிகாரிகள் மெச்சும் வகையில் பார்த்து வந்த காலத்தில், அரசவுத்தியோகம் ஆதிக்கம் செல்வாக்கு முதலிய சிறப்புக்களில் மனங்கொள்ளாது, உள்ளத்தில் ஊற்றெடுத்து வந்த ஒரு வேகத்தின்பால் சென்ற வண்ணம் வாழ்ந்து வந்தார். ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. அவரின்போக்கு பெரிய புதிராகவே இருந்தது. எவருக்கும் பிடிகொடாமல் தாமும் தம் கடமையுமாக வெளியே நடந்த வண்ணம், தம் அகநாட்டத்தில் கருத்தூன்றிக் கந்தசுவாமியாரும் தாமும் அர்த்த சாமத்தின்பின் அந்தரங்க தொடர்புகொண்டு வந்தார். ‘பிதாவே பிதாவே’ என்று பிதற்றியும் வந்தார்.
உள்ளே ஊறிவந்த ஒருவகை ஞானப்பெருக்கு, வெளியெ வழியத்தொடங்கிய வேளையில் அவரின் போக்கு பித்தர் போலவும், பிசாசு பிடித்தவர் போலவும், குழந்தை போலவும் இருந்தது. தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், ஓமோம் என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப்பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தி வந்தார். அவர் தமக்கு அண்மையிற் சென்றோரைத் துரத்தத் தொடங்கிய காலத்திலேயே தமது உத்தியோகத்தொடர்பையும் துண்டித்து கொட்டிலின் மூலையில் குந்தியிருக்கத்தொடங்கினார்.
செல்லப்பா சுவாமிகள் வெளியே உலகத் துறவில் விசர்க்கோலமும்இ உள்ளத்திலே ஒடுக்கமும் ஞான நாட்டமும் சிந்தனையுங் கொண்டு, நல்லூரான் திருவருள் வெள்ளத்தில் நாளும் நனைந்து மூழ்கியிருந்த காலத்திலேஇ நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வையும் தீட்சையும் உபதேசமும் கிடைத்தன என்று நம்புதற்கு இடமுண்டு. குருவருள் பெற்ற பேற்றினாலே புறக்கோலம் நீங்காமலே அந்த கரணசுத்தி பெற்றுஇ பசுகரணங்கள் பதிகரணங்களாக மலரப்பெற்றார். முன்னர் மூலையில் முடங்கிக்கிடந்தவர் குருவருட் பிரகாசத்தாலே முச்சந்திக்கு வந்தாற்போலத் தேரடியில் வந்து குந்தியிருந்து யாவருந் தரிசிக்கக் கூடியவராயிருந்தார். தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத்திலே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தியுண்டென்று அனுமானித்துஈ அவரைச் சூழ்ந்து மொய்க்கத்தொடங்கினார்கள். அதே வேளையில் அவர் தமக்குள்ளே சிந்தனைப்பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள்இ விசரன் என்று கல்லெறியவுந் தொடங்கினர்.
உள்ளத்தில் எழுந்த துறவு மனப்பான்மையால் உலகத்தை அறவே துறந்த செல்லப்பா சுவாமிகள், வெளயுலகத்தவருக்கு விசரனாகவும், ஆன்ம ஈடேற்றங் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சியளித்தார். அவர் பொது மக்களிடம் வாங்கிய பட்டத்துக்கமைய மேலும் பைத்தியகோலத்தை மிகைப்படுத்தி வந்தார். பகல் முழுதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல்லப்பா சுவாமிகள், இரவில் அர்த்தசாமப் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்ற பின்னர் மெதுவாக நல்லூர் கோபுர வாசற்பக்கம் சென்று முருகனைத்தேடுவார்போல பிதாவே! பிதாவே! என்று கூவியழைத்து, அவருடன் சொல்லெதிர் பெற்றும் பெறாமலும் உரையாடி வந்தார்
சிவாச் சித்தர்
சிவாச் சித்தர் இலங்கையின் மட்டக்களப்பின் தெற்கே உள்ள காரைதீவு எனும் கிராமத்தில் சமாதியடைந்த சித்தர்களுள் ஒருவராவார். எனினும் தமது பெயருக்கு ஏற்ப இவர் சித்துக்களை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவரல்லர். அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தினரான சுவாமிகள் மக்களால் சிவாச் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். கதிர்காம பாதயாத்திரை வந்த வழியில் காரைதீவில் தங்கிக் கொண்ட சுவாமிகள் அங்கேயே தனது அருளாசியை வழங்கி சமாதியும் அடைந்தவர் ஆனார்.இவரது சமாதி ஆலயம் காரைதீவு பொதுமயானத்தை அண்மித்ததாய் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது.
முருகேசு சுவாமிகள்
முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர். கே. முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு, அக்டோபர் 26, 1933 - செப்டம்பர் 24, 2007) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர். காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். நுவரெலியா நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவை.
வாழ்க்கைக் குறிப்பு
முருகேசு சுவாமிகள் 1933ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் இலங்கையின் மத்திய மாகாணத்தின், கண்டி மாநகரில் இராமன் காளிமுத்து - சந்தனம்மா தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததனால், தமது இளம் பிராயத்திலேயே பல்வேறு கூலி வேலைகளுக்கும் செல்ல நேர்ந்தது. அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலேயே சுவாமிகளுக்கு ஓர் மகாத்மா காட்சியளித்து, கணபதி மந்திரங்கள் அடங்கிய நூல் ஒன்றினையும் வழங்கினார். அன்றுமுதல் சுவாமிகள் தினமும் அந்த மந்திரங்களை செபிக்க ஆரம்பித்தார்.

குரு
சுவாமிகள் பின்னாளில் இந்தியாவிற்கு சென்று பண்டிதர் கண்ணையா யோகி மகரிஷிகளை தமது சற்குருவாக ஏற்று ஆத்மஞானத்தினை பயின்றார். சுவாமிகள் தமது குருவின் கட்டளைப்படி காயத்திரி மந்திரத்தினை கற்றுஇ ஆராய்ந்துஇ அறிந்து பாண்டித்தியம் பெற்றதனால்இ காயத்திரி சித்தர் என அழைக்கப்படலானார். அத்துடன் தமது ஆராய்ச்சியின் முடிவுகளை பல நூல்களில் எழுதியுமுள்ளார்.
ஆன்மீகப் பணி
சுவாமிகள் இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுஇ காடுகள்இ மலைகள்இ குகைகளில் பல சித்தர்கள்இ முனிவர்கள்இ மஹரிஷிகளை கண்டு வணங்கி அவர்களிடமிருந்து பல்வேறு சித்திகளையும் கைவரப் பெற்றார். பின் தன் தாயகம் திரும்பிஇ ஆன்மீகப் பணிகளை தொடர்ந்தார். அவற்றுள் சுவாமிகளால் நிறுவப்பட்ட நுவரெலியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காயத்திரி பீடம் என்பன முக்கியமானவை. அது மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள்இ ஆச்சிரமங்கள்இ காயத்திரி பீடங்கள் என பலவற்றையும் நிறுவியுள்ளார். இவற்றுள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சப்தரிஷி மண்டபம் பிரசித்தமானது.
சீடர்கள்
முருகேசு சுவாமிகள் உலகின் பல நாடுகளுக்கு சென்று மக்களுக்கு ஆன்மீக விளிப்புணர்வினை ஏற்படுத்தினார். சுவாமிகள் விட்டுச் சென்ற சேவகளை அவரது சீடரான மட்டக்களப்பு புண்ணியரெத்தினம் சுவாமிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.
சமாதி
முருகேசு சுவாமிகள் கடந்த 2007ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அங்கு மருத்துவமனை ஒன்றில், செப்டம்பர் 24இ 2007 அன்று இறந்தார். நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில் சுவாமிகளின் ஜீவசமாதி அமைய பெற்றுள்ளது. அங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நூல்கள்
தமிழில்:
1. ஸ்ரீ காயத்ரி மந்திர மகிமை
2. ஞான குரு
3. மனித காந்தம்
4. எளிய முறை யோகப் பயிற்சி
5. சகல தெய்வ உபாசனா சித்தி
6. காயத்ரி உபாசனா பத்ததி
7. காயத்ரி ராமாயணம்
8. காயத்ரி கீதை
9. காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு
10. பிரபஞ்சம் இன்பமயம்
11. மனித உடலில் தெய்வ ஞானம்
ஆங்கிலத்தில்:
 1. The Great Science and Power of Gayathri
 2. Spiritual Tenets of Sri Gayathri Peetam
 3. Cosmo Mystic Meditation
பரமகுரு சுவாமிகள்
 
பரமகுரு சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிரஞ்சனானந்தர் என்ற பெயராலும் அறியப்படுகிறார். தமிழ்நாட்டின் பிரபல துறவியாக இருந்த பிரேமானந்தா தன்னுடைய பாட்டியாரின் குருவாக இவரைக் குறிப்பிடுவதோடு ஜ1ஸ தனது பிறப்பு குறித்து பரமகுரு தனது பாட்டிக்கு அக்காலத்திலேயே சொல்லிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் இலங்கையின் நடு மலைநாட்டுப் பகுதியிலுள்ள ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். இளமையிலேயே துறவு மனப்பான்மை கொண்ட இவர்இ சிறுவயது முதலே தனிமையில் நாட்டம் கொண்டவர். மாத்தளையிலிருந்து திருக்கோணமலைக்குச் செல்லும் வீதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூன்றாண்டு காலம் வாழ்ந்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. கோவணமும் பச்சை நிறப்போர்வையும் அணிந்தவராக இவர் காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு அடிக்கடிச் சென்று வந்த இவர் இந்தியாவின் கிடாரிப்பட்டி என்ற இடத்தில் சிலகாலம் தவம் செய்துள்ளார் என்பதற்கு சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாமி நிரஞ்சனானந்தர் என்ற பெயரும் இவருக்கு இந்தியாவிலேயே இடப்பட்டது. குழந்தைவேற் சுவாமிகளுக்கு அறிவுரை தருவதற்காக கடையிற் சுவாமிகள் இவரை கீரிமலைக்கு வரப்பண்ணியதாக கூறுவர். குழந்தைவேற் சுவாமிகள்இ பரமகுரு சுவாமிகளுக்கும் கடையிற் சுவாமிகளுக்கும் பணிவிடை செய்துவந்துள்ளார்.
மருதனார்மடம் பகுதியிலுள்ள பனங்காட்டில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். அக்காலங்களில் பாசிப்பயற்றினை அவித்துக் கஞ்சியாகக் குடித்து வந்தார் என்று கூறப்படுகிறது. பரமகுரு சுவாமிகளின் பெயரால் காங்கேசன்துறையிலும் கீரிமலையிலும் மடங்கள் கட்டப்பட்டன. சேணிய தெருவில் இருந்த சின்னத்தம்பி என்பவரே இவ்விரு மடங்களையும் கட்டுவித்தவராவார்.
பரமகுரு சுவாமிகளின் சமாதி விழா 1904ம் ஆண்டில் மாத்தளையில் நடைபெற்றது. இவரது சமாதி அமைக்கும் பணிகளை சேர். அருணாசலம் முன்னின்று நிறைவேற்றியிருக்கிறார்.

இந்த பதிவில் உள்ள பெரும் பாலான விடயங்கள் இணையத்தில் பெற்றவை அவற்றை தொகுத்து உள்ளது
உங்கள் கருத்துக்களை கூறுங்கள்
நன்றி 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP