"மொபைலா மொபைலா" குறும்படம் ஈழபெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு மீண்டும் சொல்லுகின்றது .

மீன் பாடும் மட்டு மண்ணின் அன்பு சகோதரிகளின்(வேணு ,கோபி) குறும்படம் பார்க்கும் வாய்ப்பு நீண்ட காலத்தின் பின் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 
 
குறும்படதலைப்பு மொபைலா மொபைலா
கதை
பல்கலைகழக விடுதியில் தங்கி இருக்கும்(வேணு) இன் தொலைபேசி (mobile) காணாமல் போகின்றது அதன் பின்னரான (மர்மம் நிறைந்த) கதையில் அந்த தொலைபேசி (மொபைல்) எவ்வாறு மீள கிடைக்க பெறுகின்றது என்பதை ஒட்டி கதை நீள்கின்றது .கதை ஆரம்பத்தில் வழமையான பாணியில் ஆரம்பமானாலும் இறுதி ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றது. குறித்த மொபைல் இன் மர்மத்தின் விடையாக  இருவர் பார்வையாளர் மனதில் பட்என்று தோன்றுகின்றனர் ஒருவர் இவர்களின் நண்பி மற்றயது கார்த்திக்(மரண அடைந்த மர்ம மனிதன்)
சிறப்புகள்
*முழுமையாக பெண்கள் பங்கு கொண்டு நடித்தமை மீண்டும் ஒரு முறை ஈழ பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு மீண்டும் சொல்லுகின்றது .
*ஈழகுறும்படதுக்கான சாயல்கள் தென்படுவது எமக்கான தனி அடையாளம்.
ஈழகுறும்படங்கள் சமூகம் அவலம் காதல் என்ற பிரிவில் பெரும்பாலும் அமையும் இது பாராட்டுக்கு உரிய புது முயற்சி.
வாழ்க வளர்க
"அன்னை ஊட்டிய பாலிடை தமிழ் கலந்து ஊட்டி விட்டாள்
என்னிலை வந்தாலும் தன்னிலை மறவாது தமிழ் காப்போம்
." 
 
முக்கிய பாத்திரங்கள் :செல்வி தேனுஜா மோகனதாஸ்,
செல்வி பிரனித்தா ரமணாநிதா,
செல்வி வேணுகா ரவிச்சந்திரன்
இயக்குனர் : செல்வி சாருணி இந்திரஜித்

ஒளிபதிவு: செல்வி வேணுகா ரவிச்சந்திரன்
தயாரிப்பு : செல்வி கோபிகா ரவிச்சந்திரன்
படத்தொகுப்பு: செவன் விஷ்ணுகாந்த் குமரஜோதி
இசை: செல்வன் சஞ்சித் லக்ஷ்மன்.
இத் திரைப்படத்துக்கான ஆலோசனையை திரு கோவர்த்தனன் பத்மநாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.
படத்தினை கீழ் பார்வை இடலாம் 
 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP