கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2

”வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் என்ற அழுக்கைக் கழுவுவதற்கு"இந்த அம்மா பகவான் கலாச்சாரம் எங்கு பார்த்தாலும் சூடு கிளப்பபுகிறது.என் இனிய அறிவுமிக்கத் தோழர்களே! மனிதாகப்பிறந்த நாம் ஏன் இன்னொரு மனிதனை வணங்க வேண்டும். நீங்கள் இன்னொரு மனிதனை மரியாதை செய்யுங்கள் ஆனால் வணங்காதீர்கள்.


தோழர்களே! 
இந்த அம்மா பகவான் தன்னை கல்கி அவதாரம் என்கிறார்
 (பலர் தம்மை கல்கி அவதாரம் என்கிறார்கள் அது வேறுகதை)
 எங்கேயாவது கடவுள் தன்னைத்தானே சுயபிரகடனம் செய்வார்களா? அவர் தானே கடவள் என்று சுயப்பிரகடனம் செய்து கொண்டு மிக அதிகமான சொத்துகளைச் சேர்த்துக்கொள்கிறார். மக்களின் பணத்தை பறித்துக்கொள்கிறார். அம்மா பகவானைப் பார்ப்பதற்கு 10000 ரூபா பேசுவதற்கு 20000ரூபாவாம் அப்படியானால் படுப்பதற்கு………………..அம்மா பகவானை காசுகட்டிப் பார்த்தவர்களினதும் பார்க்கப்போகிறவர்களினதும் வாதம் என்னவென்றால் அம்மா பகவானுக்கு காசுகொடுத்துப் பார்த்தால் அந்த காசு பலமடங்கு திரும்பக்கிடைத்துவிடும் என்பதுதான். காசு காசு என்று அலையும் சுயநலாவதிகளே இயலுமானவரை அறிவுள்ள சுயநலவாதிகளாக இருங்கள்.


பகவான் அன்பானவர்தானே. அப்படியானால் பகவானுக்குத்தேவை அன்புதானே ஒழிய காசில்லையல்லவா?. பகவானுக்கு அன்பிருந்தால் காசைக் கொடுக்கவேண்டியது தானே அதேன் முதலில் காசை வேண்டி பின்பு பல மடங்காகத்தருவது. கடவுள் என்ன சீட்டுக் கம்பனியா நடத்துகிறார். அங்கேயாவது நமக்கு குறிப்பிட்டகாலத்தில் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் இங்கே நாம் காசு கொடுப்பது தெரியும் ஆனால் அது எப்போது பலமடங்காகக் கிடைக்கும் என்பது தெரியாது. இந்த 10000ரூபாவை அல்லது 20000ரூபா வங்கியில் வைப்புசெய்தால் சிறிதளவு வட்டியாவது குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைக்கும். வங்கி அம்மாபகவான் போல ஏமாற்றவும் மாட்டாது. அங்கே ரசீது கொடுப்பார்கள் கண்காய்வு செய்வார்கள் சட்டப்பாதுகாப்பாவது இருக்கும்.
ம்…சரி உங்கள் வாதப்படியே வைத்துக் கொள்வோம். 



சரி 
அவர் கடவுள்தான்… 
அப்படியானால் 
1
சுனாமிப்பேரலை வருவதற்கு முன் சுனாமி வருகிறது என்று சொல்லி பல இலட்சம் உயிர்களைக் காத்திருக்கலாம் தானே. சுனாமி வருவது அமெரிக்க விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தளவு ஏன் அம்மா பகவானுக்குத் தெரியவில்லை. பக்தர்களிடமிருந்து கோடிகோடியாகப் பணத்தை எடுக்கும் அம்மா பகவான் ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை. சுவாமி சுனாமி நிவாரணம் கொடுக்கக் கூடாது என்பது சட்டமா?


சரி உங்கள் அம்மா பகவான் ‘கல்கி’ அவதாரமோ ‘கல்கண்டு’ அவதாரமோ ‘ஆனந்த விகடன்’ அவதாரமோ சக்தியுள்ள அவதாரம் என்றால் 
2
எமது உள்நாட்டு பிரச்சினையும் உள்நாட்டு யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து துன்பப்படும் மக்களை ரட்சிக்கட்டுமே. அவ்வாறு நடந்தால் நானே அம்மாபகவானுக்கு பலகோடி பக்தர்களை சேர்க்கப்பாடுபடுவேன்.

இந்த அம்மா பகவான் பின்னணியில் மாபெரும் உளவுத்துறை செய்றபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த அம்மா பகவான் பின்னணியில் ஒரு உளவுத்தறை பின்னிருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானவை. இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவானூடாக எமது மக்களைச் சிந்திக்கவிடாமல் பக்தி என்ற பத்தடி வளவுக்குள் எம் மக்களின் மூளையை புதைக்க முற்படுகின்றனர். எமது மக்களைச் சுயநலவாதிகளாக்குகின்றனர்.மற்றும் இந்த உளவு நிறுவனங்கள் அம்மா பகவான் மூலமாக எமது மக்களின் தேவை என்ன? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து எம்மீது ஆதிக்கம் செலுத்தி தம் நிகழ்ச்சிநிரல்களை எம்மூடாக நகர்த்துவார்கள். அன்பானவர்களே! அம்மா பகவானை வணங்கி அந்நிய ஆதிக்கத்தை உட்செலுத்திவிடாதீர்கள்.
வாய்மொழி பகவான் திருப்புகழ் பாட. ஸ்ரீ அம்மா பகவான் அவதார மகிமை


நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். 

ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், 



"வாருங்கள் தோழர்களே அம்மா பகவான் அழுக்குகளைக் கழுவுவதற்கு"


Are you read
கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 1
http://ejaffna.blogspot.com/2011/07/blog-post_16.html


ejaffna லொள்ளு 
    VS 
நித்தியானந்தா:-மச்சி  உனக்கும்  ஆப்பா .......?
கல்கி பகவான்:- உன்னைபோல    நான் இனோருதியோட திரியல 
நித்தியானந்தா:- ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள்பற்றி( நான் செய்யாததா) heeee.......



நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க
 

click here to join this Group(அம்மா பகவான் அழுக்குகளைக் கழுவுவதற்கு)

1 கருத்துக்கள்:

Anonymous,  4 June 2013 at 17:51  

superb

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP