முகப்பரு இனி இல்லை /தடுக்கலாம் 100%


பொதுவாக முகப்பருக்கள் ஆண் பெண் என்ற இரு பாலாரிலும் 13-19 வயதுக்குடப்பட்ட விடலைப் பருவத்தினரையே அதிகமாக பாதிக்கும். அதற்கும் மேற்பட்ட வாலிப பருவத்தினரையும் விட்டு வைப்பதில்லை.

 இவை முக அழகை குலைப்பதுடன் தன்னம்பிக்கையை கெடுக்கும் வகையில் அமைந்து சிலருக்கு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தி விட்டு செல்கின்றது. பொதுவாக முகப் பருக்கள் வரும் காரணங்களில் மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அதற்கு நிவாரணமாக உண்ணும் உணவிலிருந்து ஒரு சில மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது.
 
அதில் முக்கியமாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கீரை உணவை தினமும் சாப்பிடலாம். சமைக்காத பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. தண்ணீர் நிறைய குடிப்பது நல்லது.
 
சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்களுக்கும் இந்த முக பருக்கள் வர வாய்ப்புகள் அதிகம். அதற்கு தினமும் ஆரஞ்சு பழரசத்தை முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு கழுவிட வேண்டும்.
 தக்காளி மற்றும் பப்பாளிபழக் கூழையும் முகத்தில் தடவி வந்தால் எண்ணெய் பசை குறையும். எண்ணெய் பசை அதிகமுள்ள சோப்புகளைப் அறவே பயன்படுத்தக் கூடாது. மாறாக பயத்த மாவு, கடலை மாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி அவை காய்ந்தவுடன் வெது வெதுப்பான நீரினால் கழுவ வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களை தவிர்ப்பது நல்லது. கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், மற்றும் நெய், வெண்ணெய் சேர்த்த உணவுகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. காரம், உப்பு, புளி, இறைச்சி , மற்றும் காரசாரமான மசாலா சேர்த்த உணவுகள், முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும் அதைப் போல் அடிக்கடி வெதுவெதுப்பான நீரை பருகுவதும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும். முகப்பருக்கள் வந்த பிறகு சிகிச்சை எடுப்பதற்கு பதில்,அவை வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் அக்கறை செலுத்துவதே சாலச் சிறந்தது.முகப்பரு ,தழும்பு மாற

Share
உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது.
இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம்.
இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது. சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.

முகம் பொலிவு பெற: வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.
கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம்
சந்தனத் தூள் - 5 கிராம்
வசம்பு பொடி - 2 கிராம்
எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.
முகச்சுருக்கம் மாற:
ஆவாரம் பூ காய்ந்த பொடி - 5 கிராம்
புதினா இலை காய்ந்த பொடி - 5 கிராம்
கடலை மாவு - 5 கிராம்
பயத்த மாவு - 5 கிராம்
எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.
வெள்ளரி - 2 துண்டு
நாட்டுத் தக்காளி - 1 பழம்
புதினா - சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும். இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.

முகம் பளபளக்க: காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

முகப்பரு தழும்பு மாற:
புதினா சாறு - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு - 1 ஸ்பூன்
இவற்றில் பயத்த மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.
ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற:
ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.
கொத்தமல்லி - 5 கிராம்
புதினா - 5 கிராம்
எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP