கூகிள் பிளஸ் பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் வெல்வது யார் ....?
இணைய தொழில்நுட்பத்துறையில் இரு இணைய ஜாம்பாவான்கள் சூப்பராக மோதிக்கொண்டனர்.
ஒரு பக்கம் பேஸ்புக் வீடியோ சாட்டிங்கை அறிமுகப்படுத்தியது.
மறுமுனையில் கூகிள் பிளஸ் ஐ அறிமுகப்படுத்தியதுடன் ப்ளாக்கர் பிகாஸா போன்றவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் வீடியோ சாட்டிங்க் உடனடியாக அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வேலை செய்ததாக தெரிகிறது. ஆனால் கூகிள் பிளஸ் பக்கத்திற்கு செல்லும் பலருக்கு "Keep Me Posted" என்றே வருகிறது என்கின்றனர்.
கூகுள் பிளஸ் அழைப்பிதழ் பெற்றும் சிலர் ஆக்டிவேட் செய்ததாக தெரிகிறது. ப்ளாக்கர் மற்றும் பிகாஸா வை கூகிள் ப்ளாக்கர் மற்றும் கூகிள் போட்டோ என்று பெயர் மாற்றம் செய்யவுள்ளது கூகிள்.
அனைத்து பிரைவட் கூகிள் புரோபைல்களையும் இந்த மாதத்துடன் நீக்கிவிடுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது கூகிள். இதன்மூலம் அது மறைமுகமாக விருப்பமில்லாதவர்களையும் கூகிள் பிளஸை பயன்படுத்த வற்புறுத்துகிறது என்றும்,
இது தான் கூகிள் செய்யும் முதல் தவறு என்றும் இதன் மூலம் தனது பெயரைக் கெடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.ஆனால் கூகிள் புரோபைல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் எந்த நன்மையும் இல்லை என்கின்றனர் சிலர்.
கூகிள் பிளஸ் பற்றி ப்ளாக்கர் நண்பன் தனது வலைப்பதிவில் இவ்வாறு விவரிக்கிறார்.
கிட்டத்தட்ட பேஸ்புக் போன்றே காட்சி அளித்தாலும் பேஸ்புக்கைவிட கூகிள் ப்ளஸ் நன்றாக இருக்கிறது.
சர்கிள்:
பேஸ்புக்கில் நாம் ஏதாவது பகிர்ந்தால் அது நம்முடைய நண்பர்கள் அனைவருக்கும் சென்றடையும். ஆனால் கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் என நம் விருப்பப்படி பல குழுக்களாக (Circle) பிரித்துக் கொள்ளலாம். ஒருவரையே எத்தனை குழுக்களில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அவ்வாறு பிரித்துக் கொண்ட பின் குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் நாம் விரும்பியதை பகிர்ந்துக் கொள்ளலாம்.
நம்மை யாரவது அவர்கள் குழுவில் சேர்த்தால் நமக்கு செய்தி வந்துவிடும். ஆனால் எந்த குழுவில் அவர்கள் சேர்த்தார்கள் என்பது நமக்கு தெரியாது. அவ்வாறு அவர்கள் நம்மை சேர்த்த குழுவில் வேறு யார் யார் இருக்கிறார்கள் என்பதும் நமக்கு தெரியாது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (மறைமுகமாக) குறிப்பிடும்போது,
"குழுக்கள் என்பதன் பொருளே, குழுவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பது தான்."
(சரியாக மொழிபெயர்க்க தெரியவில்லை. அவர் கூறியது ஆங்கிலத்தில்,
"The definition of groups is . . . everyone inside the group knows who else is in the group"
இன்னொரு விஷயம் என்னவெனில், நம் அனுமதி இல்லாமலே யார் வேண்டுமானாலும் நம்மை அவர்கள் சர்கிளில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் நீங்கள் ஏதாவ்து பகிரும் முன் கவனித்து பகிரவும்.
ஹேங்-அவுட் (Hang-Out):
(படத்தில் கறுப்பு பின்னணியில் இருப்பது என்னுடைய திரை. நான் வீடியோவை மறைத்திருந்தேன்.)
ஹேங்-அவுட் என்பது குழுவாக வீடியோ சாட் செய்யும் வசதியாகும். அதிகபட்சமாக பத்து நபர்களுடன் நாம் நேரிடையாக வீடியோ சாட் செய்யலாம். பத்து நபர்கள் சாட் செய்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வெளியேறினால், வேறு யாராவது இணைந்துக் கொள்ளலாம். வீடியோ சாட் செய்துக் கொண்டிருக்கும் போதே text Chat-ம் செய்யலாம். இதுவும் கூகிள் ப்ளஸ்ஸின் சிறப்பம்சமாகும். உங்கள் வீடியோவை மறைத்துக் கொண்டும் மற்றவர்களுடன் வீடியோ சாட் செய்யலாம்.
இதன் மூலம் பதிவர் சந்திப்பு கூட நடத்தலாம். ஆனால் பத்து நபர் மட்டும் தான் கலந்துக் கொள்ள முடியும். பத்து நபர்கள் என்பதை அதிகப்படுத்த வேண்டுமென கூகிளுக்கு பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
Photo Tag:
பேஸ்புக்கில் உள்ளது போன்று புகைப்படத்தில் Tag கொடுப்பதுதான். ஆனால் இதில் எளிமையாக இருக்கின்றது. நாம் Tag கொடுக்கும்போது அந்த கட்டத்தின் அளவை நாம் நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி புகைப்படத்தில் முகங்கள் இருந்தால் தானாகாவே கண்டுபிடித்து பரிந்துரை செய்கிறது.
பகிர்ந்துக் கொள்வதில் நான்கு முறைகள்:
பேஸ்புக்கில் உள்ளது போன்றே செய்திகள், சுட்டிகள்(Links), வீடியோக்களை பகிரலாம். கூடுதலாக தாங்கள் இருக்கும் இடத்தையும் பகிரலாம். பகிர்வதில் நான்கு முறைகள் இருக்கின்றன.
1. குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் அல்லது ஒரு குழுவினருக்கு மட்டும் பகிரலாம்.
2. தங்கள் உருவாக்கியுள்ள அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கு பகிரலாம். (Your Circles)
3. அனைத்து சர்கிளிலும் உள்ளவர்களுக்கும், அவர்களின் சர்கிளின் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Extended Circle)
4. கூகிள் உள்ள ப்ளஸ்ஸில் உள்ள அனைவருக்கும் பகிரலாம். (Public)
Google நிறுவனம் அதன் பாவனையாளர்களுக்கு பகுதி பகுதியாக Google பிளஸ் புரோபைலை ஆக்டிவேட் செய்து வருகிறது.
எனினும் Google பிளஸ் புரோபைலின் முகவரி பேஸ்புக் முகவரி போன்று நினைவில் வைத்திருப்பதற்கு இலகுவாக இருக்காது.https://plus.google.com/u/0/109675630752736151170/posts என்று இருக்கும் முகவரியைgplus.to என்ற தளத்தின் மூலம் http://gplus.to/4tamilmedia என மாற்றிவிடலாம்.
இதற்கு gplus.to என்ற முகவரிக்கு சென்று உங்கள் Google பிளஸ் புரோபைலின் முகவரியில் தெரியும் இலக்கத்தையும் கொடுத்தால் இலகுவான முகவரி கிடைத்துவிடும்.
டுடே லொள்ளு
எப்பிடி ஓடினாலும் நமக்கு சாப்பாடு தான் மச்சி
ச்சே..... ச்சே ..... கோழி
Friend's
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ...........
0 கருத்துக்கள்:
Post a Comment