"பேஸ்புக்" ஆல் சீர்கெடும் சமூகம் --எச்சரிக்கை--??
அண்மைகாலமாக இளைஞர்களின் விழிகளில் விரலை விட்டு ஆட்டும் கொடுர குடைச்சலாக உருமாறி உள்ளது சமூக வலைத்தளங்கள் . அதிலும் முக்கியமாக பேஸ்புக் வலைத்தலமானது தற்கால இளைஞர்களின்தாரகமந்திரமாகஉள்ளது
இந்த வலைதளமானது உண்மையில் சமூக ஒன்றிப்பின் நல்லெண்ண நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது எனினும் இதன் மூலம் பல சீர்கேடுகள் அரங்கேறி வருவது கசப்பான உண்மை.
அண்மையில் பல அனாமதேய சுட்டிகளில் தமது முகநூல் முகவரிகளாக கொண்டு இளைஞர்களும், யுவதிகளும் பல சீர்கேடுகளை செய்துவருவதாக அறியப்பட்டுள்ளது.
இது பல முகநூல் நண்பர்களை தனிப்பட்ட முறையில் பாதித்து உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது.
அண்மைகாலமாக யாழ்பாணம் மற்றும் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் இவ்வகையான அனாமதேய இம்சைகள் அரங்கேறி வருவதை ஊடகங்களின் மூலம் அறியப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான செய்தியினை
இவ்வகை இம்சைகள் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளமையும் தெரிவிக்கபட்டுள்ளது
இவகையான இம்சை அரக்கர்களிடமிருந்து முகநூல் நண்பர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இதோ சில எளிய வழிகள்
- உங்களின் அடையாள பெயர்கள்,மினஞ்சல் உள்ளிட்ட தனிப்பட்ட விடயங்களை முகநூலில் பதிவிடும்போது அவதானிப்புடன் இருங்கள்.அத்துடன் உங்கள் பெயர்களை ஒத்த வேறு நபர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களில் இருந்து உங்களை வேருபடுத்திகொள்ள தனிப்பட்ட குறிகள், புனைப்பெயர்,அடையாளங்கள் தொடர்பில் தனித்துவமாய் இருப்பது சிறந்தது.
- உங்கள் தொடர்புகளில் இணைய விரும்பும் புதிய நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும். உங்களுக்கு மிகவும் தெரிந்த நபர்கள் அன்றில் மற்றயவர்களின் தொடபுகள் சரியானதா என்று அறிந்துகொள்வது மட்டுமன்றி பிற பொதுவான நண்பர்களாக உள்ளவர்கள் யார் என்பதை சரியாக கவனத்தில் கொள்ளுங்கள்
- உங்கள் தனிப்பட்ட படங்கள் , குடும்ப விபரம், அலைபேசி இலக்கம், உறவினர்களின் பெயர்களை அனாவசியமாக உங்கள் முகநூலில் பதிவிடுவதை தவிர்த்துகொள்ளுங்கள். அன்றில் இவைகளை முகநூலில் இட்டாலும் அதனை உங்கள் உற்ற நண்பர்கள் மட்டும் பார்வையிடும்படி சீர் செய்து கொள்ளுங்கள். இதற்கான பிரத்தியேக அமைப்பு முகநூலில் உள்ளது.அதனை உங்கள் தனிபயன் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.
இணையம் நல்ல விடயங்களுக்காகப் பயன் படுத்தப்பட்டாலும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். பலர் பல்வேறு வழிகளில் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சமூகத்தளங்களில் பலர் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர். சில ஆண்கள் சமூகத்தளங்களிலே பெண் பெயரில் இருந்து பல பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.
பிரியா மகேஸ் எனும் பெயரிலே ஒரு ஆண் மூஞ்சிப் புத்தகத்திலே பல பெண்களை ஏமாற்றி வருகின்றார். ஆயிரத்தக்கும் மேற்பட்டவர்கள் இவர் நண்பர்களாக இருக்கின்றனர்.
இவர் ஒரு பெண் வலைப்பதிவரிடம் சட் செய்தபோதுதான் இவர் பெண் அல்ல ஆண் என்பது தெரிய வந்தது.
பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள்.
தற்போது புதிதாக முகநூலில் காணொளி அரட்டை முறை அறிமுகபடுதபட்டுளது. அதனை உங்கள் முகநூலில் சீர் செய்துகொள்ள பின்வரும் விதிகளை கடைபிடிக்கவும்:
- முதலில் இந்த இணைப்பினை பெற முக நூலில் உங்கள் தனிப்பட்ட பக்கத்தில் உள் நுழையவும் . அதன் பின்னர் இங்கேசொடுக்கவும்.
- அதன் பின்னர் அந்த இணைப்பின் மூலம் வழங்கப்படும் புதிய மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்அதனை நிறுவியதும் அரட்டைக்கான பகுதியை சொடுக்கவும். இதனை பயன் படுத்த கண்டிப்பாக media flash player அவசியம் என்பதை கருதிற்கொள்ளவும்முக்கியமாக காணொளி குறித்த சொடுக்கியை அழுத்தினாலும் உங்கள் அளிக்கக மறுமுனையில் இருப்பவர் அதனை அங்கீகரிக்கும் வரையில் அவரின் காணொளி தென்படாது.
இப்போது நேரடியாக உங்கள் நண்பர்களுடன் அரட்டையை தொடருங்கள்.........
2 கருத்துக்கள்:
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
நன்றி சகோதரம் வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment