யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னி ஊடாக வவுனியாக்கு முதல் பயணம் 24.10.2009 .
நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 வருடங்கள் இந்த மண்ணிலே வளர்த்தவன். இப்பொது 2 வருடங்கள் கல்வி நிமிர்த்தம் வவுனியாவில் வசித்துவருகிறேன்.
A-9 ஊடாக வவுனியாசெல்ல பயணத்தை ஆரம்பித்தேன். பயணம் ஆரம்பத்திலேயே களை கட்டியது. பஸ்சில் பயணிக்க நான் சென்று அடைந்த இடமோ ரயில் நிலையம். அப்போதே
இதனை ஒரு பயண பதிவாக இட வேண்டும் என தோன்றியது. ஆனால் வவுனியா சென்று அடைந்தவுடன் மறந்துவிட்டேன். இடை இடையே நினைவு வரும், ஆயினும் நான் தமிழில் தட்டச்சு செய்யும் வேகம் மிக குறைவு. எனவே பதிவிடும் ஆவல் கனவாகவே இருந்தது. இப்போது கோடை விடுமுறை நான் மீண்டும் யாழில். வீட்டில் அகல கற்றை இணைய சேவை. எனவே கனாவை நனாவாக்கும் முயற்சி.
சிறு பிள்ளையாக இருக்கும்போதே அப்பா சொல்லும் இரயில் கதைகளிலே மூழ்கிய சம்பவங்கள் நிறைய உண்டு. அப்பா இரயில் ஏறி கொழும்பு சென்று திரும்பிய கதைகள் நிறைய சொல்லவார். இரயிலில் வரும்போது நடந்தது எல்லாம் சொல்லுவார். அப்போதே இரயில் என்றால் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் என் கெட்ட நேரம் நான் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இலங்கையில் ரயிலில் ஏறியது இல்லை.
அப்போதுதான் யாழில் இருந்து மீண்டும் பஸ் வவுனியா செல்ல ஆரம்பித்து இருந்தது. அதிகாலை பயணசீட்டுடன் யாழ்ப்பாண ரயில் நிலையம் சென்றேன். கூடவே என்னுடன் எனது அப்பாவும் வந்தார். மகனை தனியே அனுப்ப அவருக்கும் அம்மாவிற்கும் விருப்பம் இல்லை. பொதுவாக எனக்கு தனிய பிரயாணம் செய்யத்தான் விருப்பம் ஆனாலும் அப்பா,அம்மாவை விட்டு பிரியபோகிறேன் எனவே நான் ஏதும் சொல்லவில்லை. அத்தோடு ஒரு ஆசையும் கூடத்தான் அப்பா கூட வந்தால் பழைய கதைகள் சொல்வார்.

இரயில் நிலையத்தில் இரயில் வரவில்லை. பஸ் தான் வந்தது. மக்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். முன்னர் ஒரு போதும் இரயில் நிலையத்திற்கு அவ்வளவு அண்மையில் நான் சென்றது இல்லை. எனது உடல் படபடத்தது. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீண்ட வரிசையில் பயணம் செய்பவர்கள் எல்லாம் நின்றுகொண்டிருந்தோம். அப்போது நான் அப்பாவின் வாயை கிண்டினேன்.
எதிர்பார்த்ததை போலவே பழைய கதைகள் பல வந்தன. இரசித்தேன், கவலைபட்டேன், ஏகப்பட்ட உணர்ச்சிகள் எனக்குள்ளே. சே நான் 1950 களில் பிறந்து இருக்க கூடாத என்று வேறு எண்ணினேன். என் சொந்த நான் பிறந்த மண்ணிலே நான் ரயில் ஏறி இருப்பேனே. சுற்றி பார்த்தேன் தண்டவாளம் இருக்கவேண்டிய இடத்தில் புல் இருப்பதை உணர்த்தியது எனது பார்வை.
பளை உடைந்த பனை மரமும்
ஆணைஇறவு கடலும் உடலுக்குள் எதோ செய்ய
பரந்தன் கிளிநொச்சி உடைந்த எரிந்த கட்டடங்களும் எரிந்த&எறிந்த வாகனங்களும் கண்களில் நீரை வரப்பண்ண இன்று வரை சொல்ல முடியா உணர்வு அது
அது தான்இதை எழுத தூண்டினது
சொல்ல முடியா
கவலையை மனதுக்குள் அடக்கிக்கொண்டு மீதி பயணத்தை தொடர்தேன்
0 கருத்துக்கள்:
Post a Comment