மின்னஞ்சல்களை பென் டிரைவில் சேமித்துக் கொள்வது எப்படி...?how to store E-mail in your flash
மின்னஞ்சல் சேவை என்பது இணைய இணைப்பு இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். மின்னஞ்சல்களை அனுப்பவும் படிக்கவும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவைப்படும். ஒரு வேளை இணைய இணைப்பில்லாத இடங்களில்/ நேரங்களில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை காண வேண்டும் எனும் போது என்ன செய்ய முடியும்?
இதற்கென இருக்கும் ஒரே வழி POP3 Clients என்று சொல்லப்படும் மென்பொருள்களின் வழியாக இணைய வசதி இருக்கும் போது எல்லா மின்னஞ்சல்களையும் கணிணிக்குத் தரவிறக்கிவிட்டு பின்னர் நேரம் இருக்கும் போது பார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக Microsoft Outlook, Thunderbird போன்ற மென்பொருள்களைச் சொல்லலாம். முக்கியமான மின்னஞ்சல் சேவைகளான ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை இவ்வகையான POP3 சேவைக்கு ஆதரவளிக்கின்றன.
ஆனால் இந்த மென்பொருள்களின் ஒரே குறை என்னவென்றால் கையடக்க வசதியில்லாமை. மின்னஞ்சல்களை பென் டிரைவ் போன்றவற்றில் வைத்து பயன்படுத்த முடியாது. இதைப் போல சிக்கல்களைத் தீர்க்க இருக்கும் ஒரு இலவச கையடக்க வசதி கொண்ட மென்பொருள் தான் MailStore. இந்த மென்பொருளுக்கென்று தனியாக எந்த அமைப்புகளையும் மேற்கொள்ளத் தேவையில்லை.
இந்த மென்பொருள் மூலம் நாம் எந்த மின்னஞ்சல் கணக்கையும் பேக்கப் செய்து கொள்ள முடியும். ஜிமெயில், அவுட்லுக், தண்டர்பேர்டு போன்றவற்றை நமது கணிணியில் நிறுவி பயன்படுத்தி வந்தாலும் அதனையும் எளிதாக பேக்கப் செய்யலாம்.
எப்படி பேக்கப் செய்வது?
இந்த மென்பொருளில் நுழைந்து Archieve Mails என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் கணிணியிலேயே அவுட்லுக் பயன்படுத்தி வந்தால் அதிலிருந்தும் எடுத்துக் கொள்ளலம். ஜிமெயில் கணக்கை பேக்கப் செய்ய Google Mail என்பதைத் தேர்வு செய்து பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொடுக்கவும். பின்னர் எந்தெந்த போல்டர்கள் வேண்டாம் என்பதையும் தேர்வு செய்ய முடியும்.
இதன் பின் உங்கள் கணக்கில் நுழைந்து எல்லா மின்னஞ்சல்களையும் கணிணிக்குத் தரவிறக்கப்படும். இதன் பின் Backup to HDD/USB என்பதைக் கிளிக் செய்து வன் தட்டிலோ அல்லது பென் டிரைவிலோ சேமித்துக் கொண்டு எங்கே சென்றாலும் பயன்படுத்தலாம். இதில் மின்னஞ்சல்களை சிடி/டிவிடியிலும் பேக்கப் செய்து கொள்ள முடியும்.
தரவிறக்கச்சுட்டி: http://www.mailstore.com/en/mailstore-home.aspx
0 கருத்துக்கள்:
Post a Comment