காதல் உண்மையா....? HORMONEகளின் அட்டகாசமா...?x-ray Report


பதினாறு வயதில் காதல் ??

துள்ளிதெறிக்கும் வயதாம் பதினாறு வயது.. HORMONEகளின் அட்டகாசம் எட்டிபார்கும் காலம். கல்வி எனும் ஒரு விடயம் ஒரு மனிதனின் வாழ்கையையே திசைமாற்றும் பருவம். சவால்களும் இலட்சியஙளும் நிறைந்த ஒரு போர்காலம்.. இவை யாவற்றின் மத்தியிலும் காதல் எனும் மெல்லிய உணர்வு ஒரு மனிதனுடைய மனதுள் பூக்கும் பருவமும் இதுவே என்பதிலும் எனக்கோ ஐயமில்லை..இதையெ "உனக்கும் எனக்கும்" என்ற ஜெயம் ரவி நடித்த படத்தின் ஒரு பாட்டின் வரிகளில் "16's தொடங்கி 60's வரைக்கும் SOMETHING இன்றி யாரடா ?" என்று கூறுகிறது.



ஆம்.. இதுவெ இயற்கை.. யார் மறுத்தாலும் யார் மறைத்தாலும் இதுவே உண்மை.. ஆனால் இவ்வுணர்வு ஒவ்வொருவரை வெவ்வேறு விதமாய் வெவ்வேரு ஆழத்தில் பாதிக்கிறது என்பதிலேயெ மாறுபடுகின்றது.. சிலருக்கு அவர்களுடைய பெற்றொரின் கட்டுப்பாடுகள், ஒழுக்கம் எனும் வட்டத்துள் அவர்களுடைய பெற்றோரும் அவரவர் வளர்ந்த சூழலும் வரையறுத்துள்ள விடயஙள் , கல்வி எனும் விடயத்திற்கு செலுத்தும் பிரதாணத்தினால் கல்வி கெட்டு விடமோ என்ற பயம் , நான் இருக்கும் குடும்ப நிலையில் காதல் ஒன்று தான் குறைச்சல் என்ற எண்ணங்கள் , காதலா ?? சீ சீ அபச்சாரம் அபச்சாரம் !! என்ற எண்ணம் எனப்பல காரணங்களினாலும் சூழ்நிலைகளினாலும் இக்காதல் என்பது வெறும் மாயையே இருபது இருபத்தினாங்கு வயதிற்குபின் வந்தால் மாத்திரமே அது காதல் என தாங்களே நினைத்து தங்களது உணர்வுகளை புதைத்து விடுவோர் பல.(இதைத்தவறு என நான் கூறவில்லை இவை வெறும் விமர்சனஙளே)

இவ்வாறானோர் வாழும் அதே உலகில் அதே சமூகத்தில் இக்காதல் ஒரு மின்னலை ஒத்த ஈட்டி போல் ஊடுருவிப்பாய்ந்து உள்ளேயே சிக்கி நிரந்தரமாகவே இடம் பிடித்துள்ள நெஞ்சங்களும் பல.. இவர்களுள் இன்னும் சிலர்க்கு இக்காதல் நாடி நரம்புகளினூடே சென்று செந்நீரில் கலந்து காதலே தங்களது உயிர்நாடி உயிர் மூச்சு என வாழ்வோரும் உளர்.இவ்வகைப்பட்டோரின் வளர்ப்புச்சூழல் சரியில்லை என்றோ பெற்றோரின் கண்காணிப்பு போதாது என்றோ இவர்களின் ஒழுக்கமில்லாமை என்றோ இவர்களுக்கு கல்விமேல் ஆழமான ஈடுபாடு இல்லை என்றோ கூறுவது என்ன நினைப்பதே தவறாகும்..பதினாறு வயதிலும் இவ்வகைப்பட்ட வரம்புகளை மீறியும் அவரவர் நெஞ்சங்களில் நுழைந்த காதலின் ஆழம் அல்லது பாதிப்பு என்பதே இதற்கு காரணம் எனக்கூற இயலும்.. இவ்வகைப்பட்ட ஒரு பாதிப்பு ஏற்படுவத்ற்கும் பல காரணங்களை முன்வைக்கலாம்..

இன்றைய இளம்பராயத்தினரின் முக்கியமாக பதினாறு வயதோரின் வாழ்கயில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து இப்போது அவர்களுடைய வாழ்வையே அதாவது வாழ்கை முறையயே சிறிது மாற்றக்கூடிய அளவிற்கு அங்கீகாரம் பிடித்துள்ளது தமிழ் சினிமா.. இது வெறும் பொழுதுபோக்காக அன்றி அவரவர் வாழ்கையில் வெவ்வேறு கோணங்களில் பின்னிபிணைந்துள்ளது இத்த்ழ்மிழ் சினிமா.. அதாவது திரைப்பட நாயகர்கள் பேசும் விதம்(விஜயின் style) நடக்கும் விதம்(ரஜினியின் style) தங்களுடய உடல் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை(சூர்யவின் six packs), சண்டைக்கலைகள் அதேவாறு பெண்களுக்கு நாயகிகள் உடுக்கும் விதம் அதே ஆடையை வாங்க வேண்டும் என்ற ஒரு நப்பாசை என்று பல கோணங்களில் பாதிக்கும் அதே வேளை ஆண் பெண் இரு பாலினருக்கும் பொதுவாக இத்தமிழ் சினிமா காதல் என்ற உணர்வு ஏற்பட தூன்டுகிறது என்பதையும் ஏற்பட்டோரின் மனதுகளில் மென்மேலும் வளர்க்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாத ஒரு நிஜம் ஆகும்..இதற்கு உதாரணமாக "விண்ணைத்தாண்டி வருவாயா" , "வாரணம் ஆயிரம்" என்ற படங்களை முன்வைக்கலாம்.. இவ்வாறான தமிழ்ப்படங்களின் பாதிப்பு வெறும் இருபது வயதினை தாண்டியோர்க்கு மட்டுமே ஒழிய பதினாறு வயதோற்கு ஏற்படுத்தாதா ?? பதினாறு வயதினர்க்கு உணர்ச்சிகள் இல்லையா ?? என்பது கேள்வியே ! மேற்கூறிய திரைப்படஙள் என்பது இக்காதலின் உதயத்திற்கும் வளர்ச்சிக்கும் பல காரணங்களில் ஒரு காரணம் மாத்திரமே.. மேலும் தங்களுடைய காதலி/காதலனுடைய குணம், அழகு தங்கள் மேல் கொண்ட அன்பு தங்களுக்கு மாத்திரம் தனித்துவமான முறையில் காட்டும் பாசம்/அக்கரை போன்ற பலவகையான காரணங்களும் உள்ளடங்கும்.. இவற்றை வெறும் வார்த்தைகளால் விளக்க முயல்வது சூடு என்பதை வார்தைகளால் கூற முயல்வதற்கு ஒப்பாகும்.. உணர்ச்ச்களை வார்தைகளால் விளக்க முடியாது..


இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் அதே சமுதாயத்தில் காதல் என்பதை பல வகைகளாக பிரித்து TRUE LOVE என்றும் அதிலும் SINCERE LOVE என்றும் இவற்றுக்கு மாறாக Time pass loveஎன்றும் optional love
என்றும் மடத்தனமாக வகைப்படுத்தி புனிதமான காதலை கொச்சப்படுத்தும் சிலரும் இவர்களுல் உளர். காதல் என்பது ஒன்றே. அது வெறும் பொழுதுபோக்கல்ல அது வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அறியாமல் திரிபவர்களும் சிலர்..

எனவே காதல் என்பது பதினாறு வயதிலே மேற்கூறியவாறு பலவாறு விதங்ளில் வெவ்வேறு கோணங்களில் மனிதனிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதே ஒழிய காதல் என்பது எனபதை நாம் அறியோம் என்றோ காதல் எமக்குள் தோன்றவே இல்லை என்றோ எவராலும் கூற இயலாது.. அவரவருடைய காதலரை சந்திக்காமல் இருக்கவும் எவர் மேதும் அப்படிப்பட்ட ஒரு நாட்டம் ஏற்படாத பட்சத்திலும் கூட காதல் எனும் உணர்வு அவர்களுள் வராமல் இருப்பது சாத்தியமன்று..

எனவே.. எம் காதலுக்காக எம் உயிரையும் கொடுப்போம் .. பதினாறு வயதில் தோன்றினாலும் எம்முள் பூத்ததும் அதே புனிதமான உண்மையான காதலே என்று கூறுவோரும் , காதல் என்பது எம் படிப்பை கெடுத்து எம் வாழ்வை சீக்கெடுக்க வந்த பிசாசே/எமனே என்று கூறுவோரும் ஒரே சமூகத்திலேயெ தான் உள்ளனர்.. எனவே பதினாறு வயதில் தோன்றுவது உன்மையாகவே காதல் தானா அல்லது வெறும் ஈர்ப்பு அல்லது மாயை தானா என்பது ஒரு மாபெரும் விவாதத்திற்குரிய கேள்வியே.....
..



ejaffna டுடே லொள்ளு 


Funny Animation Scraps and Graphics
நம்ம விஜயகாந்து சுத்தி சுத்தி அடிச்சுப்போட்டு எப்பிடி சாகுராடு எண்டு பாரு மச்சி..............!!


நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP