கணவன்-மனைவி உறவு மேம்பட பாரடி வாழ்கையை.....! life with love
பதிவின் நோக்கம்:- கணவன் - மனைவி உறவு மேம்பட இனிமையான பிரச்சினைகள் இல்லாமல் நிம்மதியாக வாழ Idea
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.
நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.
"காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்."
சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!
நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு
காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது
; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.
; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள்.
ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.
'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்
சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.
மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
1
-முதல் வகை, ‘I am OK, your are also OK’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
2
2
-இரண்டாவது வகை ‘I am not OK, but you are OK’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.
3
3
-மூன்றாவது வகை, ‘I am OK, but you are not OK’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.
இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்...
முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.
இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.
கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சண்டைபோடும் தம்பதியர், அதி விரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொள்வதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்கள் ஆவதும் கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை.
ஏனென்றால், மெளனம் என்பது ஒரு கூர்மையான் ஆயுதம். அதனை முறையான சரியான விடயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன் - மனைவிக்கிடையில் சண்டை வரும் போது இருவரும் மௌனமானது பெரும் ஆபத்தாகும்.
ஏனென்றால் மௌனமாக இருக்கும் போது, மூளையில் இனம் புரியாத ஒரு சக்தி அமர்ந்து கொள்ளும். காதலிக்கும் போது நடந்த விடயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பது தான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விடயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.
மேலும் இருவரும் மௌனமாக இருப்பதால் யார் முதலில் பேச வேண்டும் என்ற தற்பெருமை வளர்ந்து வெட்டமுடியாத பெரிய மரமாக மாறிவிடும்.
முதலில் அவர் தான் பேச வேண்டும் என இவரும், இவர் தான் பேச வேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைக்குப் போய்விடுவார்கள். அதற்குப் பின் சமாதானம் என்பது சற்றே கடினமானது.
அதனால் ஏதாவது பிரச்சினை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், ஆனால் அமைதியாக மட்டும் இருந்து விடாதீர்கள். கதையுங்கள், கதைத்துக் கொண்டேயிருங்கள்.
பதிவின் தத்துவம் :-"நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க
1 கருத்துக்கள்:
"ஆதலினால் காதல் செய்வீர்"
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம். “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் உடலுறவு மட்டுமே.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், திருமணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப்
பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் கடமைக்கு கணவன் மனைவி எனக் குறுகி, சாகும் வரை தொடர்கின்றன.
கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் "சாப்பாடு தயாரா?", "பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?" என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.
உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள்.
நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம். கணவன் மனைவிக்கிடையில் காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையயுள்ள நெருக்கத்தையே காதல் என எண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் சற்று நெருக்கமாக பழக நேர்ந்தாலே அது கல்யாணம் செய்து கொள்வது வரை சென்று விடுகின்றது.
இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
– நல்லையா தயாபரன்
Post a Comment