ஆண்களை easy'a correct பண்ண idea...?


காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க...♥♥♥கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு நல்லா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களால் தான் முழுமையா உணர முடியும்.

இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த "கவர்தல்" தான் காதலுக்கே ஆரம்ப நிலை. அதனால, ஆண்களை கவர, பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உங்களுக்காக...


நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது, உங்களுடைய உடல் நிறத்துக்கு எத்த மாதிரியான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிஞ்சுக்கங்க... அதிலும் குறிப்பா, பிங்க் கலர், எல்லா ஆண்களையும் கவரக்கூடிய நிறம். இந்த பிங்க் ஷேட்ஸ் இருக்குற மாதிரியான உடைகள் எல்லாருடைய உடல் நிறத்திற்கும் பொருந்தும்.
நிகழ்ச்சி நடக்குற இடத்துக்கு போனதும், எங்கையாவது, ஓரமா இடம் இருக்குதான்னு தேடி பார்த்து போய் உட்காராமல், அந்த நிகழ்ச்சி நடக்கிற இடத்தோட நடுவுல போய், உங்களுக்கு அறிமுகமானவங்க கிட்ட சகஜமா சிரிச்சு பேசுங்க.
பேசும் போது, உங்க எதிர்பக்கம் நின்னுகிட்டு பேசுறவங்களுடைய கண்களை நேரா பார்த்து பேசுங்க. அப்படி பேசும் போது, உங்களுடைய உடல்மொழியையும் கவனத்தில வைச்சுக்கங்க. 

சுவர் மேலே சாய்ந்துக்கிட்டு பேசுறது, டேபிள் மேலே உட்காருவது, பேசும் போது வாயில ஏதாவது போட்டு மென்னுகிட்டே இருக்கிறது, நகம் கடிக்கறது, இந்த மாதிரியான செய்கைகள் உங்க கிட்ட இருக்கும் போது நீங்கள் ஆண்களை கவர முடியாம போறதுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு.
அதே சமயத்துல உங்களுக்கு அறிமுகமாகிற நண்பர்கள் கிட்ட உங்களைப் பற்றியே ரொம்ப பெருமையான பேசிக்கறதும், சரியான அணுகுமுறை இல்லை. அதை தவிர்த்துக்கிங்க.
 அந்த நிகழ்ச்சியில உங்களுக்கு புதுசா, அறிமுகமாகிற ஆண் நண்பர்கள் கிட்ட, உங்களுடைய பழைய காதல் வாழ்க்கையை பத்தியோ அல்லது காதலரைப் பத்தியோ பேசாதீங்க. இது தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம். ரெண்டு பேரும் ஒவ்வொருத்தரை பத்தி, நல்லா பேசி, மனசு அளவுல புரிஞ்சுக்கீட்டீங்க என்ற சூழ்நிலை வரும்போது நீங்க அவர் கிட்ட இந்த விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.
நீங்க ஏதாவது நிகழ்ச்சிக்கோ அல்லது வெளி இடங்களுக்கு செல்லும் போதோ, உங்க மனசுக்கு பிடிச்ச நபரை நீங்க சந்திக்க நேரிட்டால், இந்த விஷயங்களை மறக்காம, பின்பற்ற, பழக்கப்படுத்திக்கங்க. 

அப்புறம் வேற என்ன? உங்களுடைய நேரங்களை, இனிமையான முறையில் உங்க மனசுக்கு பிடிச்சவர்கூடவே செலவு பண்ணுங்க..
காலமெல்லாம் உண்மைக் காதல் வாழ்க...♥♥♥
காதலித்துப்பார்......


உன்னைப்பற்றி சிந்திப்பதைவிடுத்து
பிறரைப்பற்றியே சிந்திக்கத் தொடங்குவாய்..
உன்னுடன் நெருங்கியவர்களுடன் கூட
சந்தேகத்துடனேயே பழகுவாய்...
உன் சிந்தனையும் செயல்களும்
வேறுபட்டே இருந்தாலும்..
இறுதியில் அணைத்தும்
ஒன்றிலேயே முடிவடையும்..
உன்னைச் சுற்றி ஒரு கூட்டமே திரியும்
நீ பலரால் கல் எறியப்படுவாய்...
எறிந்த கற்களைக் கொண்டு
புதிய வீடுகட்ட முயற்சியும் எடுப்பாய்..
தொலைபேசி அழைப்பு கேட்டவுடன்
உன் காதும் சூடாக ஆரம்பிக்கும்..
“ஹலோ” என்று தொடங்கிய உனக்கு
“ம்ம்ம்” என்ற வார்த்தையே
இறுதியில் மிஞ்சும்..
அழைப்புக்கள் அனைத்தும்
ஒரே பெயரில் இருந்தே
வரவேண்டும் என்று ஆசைப்படுவாய்..
உன் பெயர் “செல் போனில்”
புதுப்பொழிவுடன் உருமாற்றம் பெறும்..
பெண் “ நண்பன்” ஆக்கப்படுவாள்..
ஆண் “ நண்பி” ஆக்கப்படுவான்...
நித்திரைக்குப் பின்னும் போர்வைக்குள்
முணு முணுப்புச் சத்தம் கேட்கும்..

காதலித்துப்பார்........
இருண்ட இரவுகளுக்குள் கூட
உன் காதருகே மாத்திரம்
ஓர் ஒளி வீசும்.

அதற்கு,
காதலித்துப்பார்.தொகுப்பு :-இ.சுகானன்.
http://suganan-collection.blogspot.com


ejaffna today லொள்ளு 


நீ இல்லை என்றால் என்னாவேன்.....! 

                                      நெருப்போடு வெந்தே மண்ணாவேன்......! "நண்பர்களே...!
இந்த பதிவு பிடிச்சு இருந்தால் உங்கள் கருத்துக்களை சொல்லுங்க
மறக்காமல் Voteபோடுங்க

2 கருத்துக்கள்:

RAJESH 5 August 2011 at 16:42  

கண்டதும் காதல், காணாமல் காதல்
உண்மையா....?
அருமை மிக்க நன்றி பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் சகோ.........

யாழ் அர்ஜுன் 11 August 2011 at 00:13  

நன்றி RAJESH
வாழ்த்துக்கள் சகோ....

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP