மொபைல் apps இலவசமாக தரவிறக்க free mobile apps


மொபைல்களில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின் இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.
1. GetJar

மொபைல் பயன்பாடுகளுக்குச் சிறந்த தளமாகும். இணைய உலவிகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், ஆபிஸ் பயன்பாடுகள், PDF போன்ற பயன்பாடுகளை தலைப்பு வாரியாக வைத்துள்ளார்கள். இதில் ஆப்பிள் ஐபேடுக்கும் கூட மென்பொருள்களைப் பெற முடியும். எளிமையான பயன்பாடுகள் முதற்கொண்டு Google map, Google Earth போன்ற அட்வான்ஸ்டு மென்பொருள்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
http://getjar.com
2.Mobile9.com
இந்த தளத்தில் சாதாரண மொபைலில் இருந்து எல்லாவகையான மொபைல்க்கும்.பயன்பாடுகளைப் பெற முடியும். இத்தளத்தில் லட்சக்கணக்கான மொபைலுக்கான மென்பொருள்கள் உள்ளன. மேலும் புதிது புதிதாக பயன்பாடுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொபைலுக்குத் தேவையான Themes, Ringtones, Wallpapers, Videos, Screensavers, Java Softwares, Games என அனைத்துமே ஒரே இடத்தில் இருக்கின்றன. போனின் மாடலைக் குறிப்பிட்டால் போதும் அனைத்து வகையான பயன்பாடுகளும் ஒடிவரும்.
3.Nokia OVI Store
இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும். இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா மொபைலிலிருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
4. Android Market
கூகிளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விசயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
http://market.android.com
5. Microsoft Windows Mobile OS
மைக்ரோசாப்டின் மொபைல் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணிணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணிணியிலிருந்து தான் மொபைலில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணிணியில் நிறுவி கணிணி வழியாக மொபைல் அமைப்புகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக Registry Editor.
மொபைல் உதாரணங்கள் – Samsung Omnia Series, Sony Ericson Xperia X1
http://marketplace.windowsphone.com
6.Apple Store
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடு பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://store.apple.com/us
இதைத் தவிர மற்றவற்றைப் பயன்படுத்தி உள்ளதால் இதைக் கடைசியாக எழுதியுள்ளேன். ஐபோன் ஒன்று கூட சிக்கவில்லை இதுவரை. மற்றவை எல்லாம் நான் பயன்படுத்திப் பார்த்த அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளேன்.மொபைல் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைக் கூறவும்.

4 கருத்துக்கள்:

Anonymous,  26 August 2011 at 23:17  

well thanks alot

suba,  26 August 2011 at 23:20  

good information

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP