அப்துல் கலாமின் தன்னம்பிக்கை வரிகள் part 2

திரு.அப்துல் கலாம்*இளைஞர்களே கனவு காணுங்கள் 
*மகிழ்ச்சிக்காக நாளைவரை காத்திருக்காதே, முடிந்தவரை இன்றே மகிழ்ந்துகொள்.
*தலைக்கனத்தை குறைத்து சாதாரணமாக வாழ கற்றுக்கொள்.


*நீ சாதிக்க துணிந்துவிட்டால் சோதனைகள் எல்லாம் உனக்கு வேதனைகளே அல்ல

*கோபத்துக்கு முன்னால் உன் விவேகத்தை காட்டு
*யாரும் யாருடைய உணர்வுகளையும் சோதித்து பார்க்க வேண்டாம் அது மிகவும் கொடியது


*கோபமெனும் அரக்கன் உனை அணுகும் போது அமைதி காத்து நிதானமாய் முடிவெடு, நீ எடுக்கும் முடிவு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கட்டும்
*மன்னிப்பது மனித இயல்பு, ஆனால் என்றும் தப்புகள் செய்யும் போது மன்னிப்பதென்பது கடினம்தான்
*முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி


*விழுவது இயற்கை; எழுவதே வாழ்க்கை.
*எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்
*வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு


*எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது
*சந்தேகம் முன் வாசல் வழியாக நுழைந்தால் அன்பு பின்வாசல் வழியாகப் போய்விடும்.
*பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.


*பூவைப்போல புன்னகை காட்டு, போகும் வழியை இன்பம் ஆக்கு.
*காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது நீதான் காலத்தை மாற்ற வேண்டும்
*யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு.


*தீய எண்ணங்களில இருந்து விலக்கி, உங்கள் மனத்தை தூய்மையாக வைத்திருங்கள்.
*ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.
*சின்ன சின்ன விடயங்களையும் ரசித்து மகிழ்ந்துவிடுங்கள்.


*மௌன மொழிகளால் பிரச்சனைகளுக்கு என்றும் தீர்வு கிடைப்பதில்லை அவை பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்துவிடும், மௌனத்தை திறந்து உங்கள் பிரியமானவர்களிடன் வாய்விட்டு பேசுங்கள் தீர்வு கிட்டும்.
*ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
*நாம் எதிர்பார்க்கும் அன்பும் அரவணைப்பும் உரியவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை எனில் அவர்களிடம் இருந்து விலகி விடுவதே சிறந்தது.


*ஒழுக்கத்தில் ராமனைபோல் உயர்ந்து, அன்பினில் தாயினும் சிறந்த, உடல் உழைப்பால் மேன்மை ஓங்கி,பிள்ளைகளுக்கு நல்லாசானாய்,ஒவ்வோர் குடும்பத்தின் கோபுரங்களாய் இருக்கும் தந்தை
*நீ விரும்பியது கிடைக்கவில்லை எனிலும் விட்டுவிடு போகட்டும், அதனிலும் இனிதானதொன்று உனக்காக காத்திருக்கின்றது...
*இல்லாததைப்பற்றி எண்ணி வருத்தப்படுவதைக் காட்டிலும் இருப்பவற்றைப் பற்றிப் பெருமையாக நினயுங்கள்.


*தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!
இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!






வாசித்து விட்டீர்களா....................??
click Here-   
அப்துல் கலாமின் தன்னம்பிக்கை வரிகள் part 1


http://ejaffna.blogspot.com/2011/07/10.html




நாளை ejaffna இல் வாசிக்க மறக்க வேண்டாம் 
தண்ணீரில் மொபைல் விழுந்தால்.........?? 


நண்பர்களே...!
 நீங்கள் இந்த பதிவுக்கு தரும் வரவேற்பு அடுத்த பதிவை எழுத தூண்டும் ...!!

3 கருத்துக்கள்:

Anonymous,  29 August 2011 at 16:44  

super job keep it up bro

அம்பலத்தார் 29 August 2011 at 19:00  

அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் நல்ல கருத்துப்பகிர்வு.

Unknown 4 May 2012 at 05:51  

விழுவது இயற்கை! எழுவதே வாழ்க்கை!!

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP