60வது பிறந்தநாள் மணிவிழா வாழ்த்தும் சேவை நலன் பாராட்டும்

எனது(யாழ் அர்ஜுன் அவர்களின் )அப்பா 

யாழ்ப்பாணம் பல.நோ.கூ.சங்கத்தில் தனது 40 (1971-2011) வருட சேவையை பூர்த்தி செய்கின்ற கொக்குவில் மைந்தன் உயர்திரு.இராசையா இராஜேஸ்வரன் அவர்களை எங்கள் இதயங்களால் வாழ்த்துகின்றோம்.


இக்கட்டான காலப்பகுதியில் உயிரை துச்சமென "மக்கள் சேவை மகேசன் சேவை" என சேவை ஆற்றிய( குறிப்பாக 1983,1995,கோட்டை யுத்தகாலத்தில்) இராஜேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண கூட்டுறவு உலகின் ஒப்பற்ற மனிதனாக 40ஆண்டு காலம் கூட்டுறவு உலகில் பணிபுரிந்த முதல் மனிதன் என்ற சாதனையோடு விடைபெறுகிறார்

உயர்திரு.இராசையா இராஜேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணம் பல.நோ.கூ.சங்கத்தின் கிளை முகாமையாளராகக் கடமையேற்று கிளை மேற்பார்வையாளராகவும், களஞ்சியப் பொறுப்பாளராகவும், வர்த்தக முகாமையாளராகவும் கடமையாற்றி சங்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய, பணியாளர் மத்தியிலே ஐக்கியம் பேணுபவராக இருந்து பணியாளர் நலன்புரிச்சங்கத்தின் தலைவராகவும் இருந்து அறுபது வருடங்கள் கூட்டுறவு பேணிவளர்த்த சாதனையோடு விடைபெறுகிறார்
எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய திரு.இராசையா இராஜேஸ்வரன் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லாமும் பெற்றுவாழ எங்கள் இதயங்களால் வாழ்த்துகின்றோம்.


சேவை நலன் பாராட்டும் மணிவிழா வைபவம் 22-8-2011 காலை
8மணிக்கு யாழ் பல.நோ.கூ.சங்கமகாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்


பணியாளர்கள்
யாழ்ப்பாணம் பல.நோ.கூ.சங்கம்
20-8-2011உங்கள் வாழ்த்துகளை கூறுங்கள்......................!!

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP