கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது.....?? --அதிரடி உண்மைகள்--

எதையும் நம்ப நாங்க என்ன லூசு பயல்களா ...............???
அதிரடி  உண்மைகள்


சொந்தங்கள் எப்பிடி இருகிறீங்க...?? 
உங்க சுகதுக்கங்கள் எப்படி ?
கீழ் உள்ள பதிவு முகநூலில்(facebook) கள்ளச்சாமிகளை ஒழிப்போர் சங்கம் பக்கத்தில் பார்த்த கட்டுரை அதனை கொஞ்சம் எனுடைய கருத்துகளையும் சேர்த்து இந்த பதிவில் போட்டு இருக்கின்றன் படிச்சு போட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க 
நான் கடவுள் இருக்கிறதோ இல்லையோ இருந்தால்  நன்றாக  இருக்கும் என்ற கொள்கை கொண்டவன் 
கள்ளச்சாமிகளா நிம்மதி தருவது?
எதையும் நம்ப நாங்க லூசு பயல்களா ...............???
பிரேமானந்தாவில் ஆரம்பித்து நித்தியானந்தா வரை களி தின்னும் காவிகள் மண்ணிக்கவும் பாவிகள் இன்னும்கூட முளைக்கலாம். ஆனால் விழிப்பும், தெளிவும் பக்தர்களிடம் தேவை.
 திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 
என்பது போல மக்களிடம் விழிபுணர்வு இல்லாதவரை போலி பெருச்சாளிகள் வளர்ந்துகொண்டேதான் இருப்பார்கள்.
"ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்." நித்தியானந்தாவின் இப்படியொரு 'அல்வாவை' ஆன்மீகம் என்று நினைத்து ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று போலீஸ் எடுத்துவரும் லிஸ்ட் இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டிருக்கிறது. எங்கே தங்களது பெயரும் வெளிச்சத்திற்கு வந்து, வாழ்க்கை இருட்டாகிவிடுமோ என்ற அச்சத்தில் லப்டப் அதிகமாகிக்கொண்டிருக்கும் பெண்கள் பலர்.


இது காலம் கடந்த பயம். உலகத்தை மீட்க வந்த தேவன்..." என உதயமாகும் சாமியார்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். மெத்தப் படித்தவர்களே அவற்றை உண்மை என்று நம்பி, பணம்,பொருள் நிம்மதியை தொலைத்துக்கொண்டிருப்பதும் தொடர்கதையாகிவிட்டது. 


சிலையை கடவுள் என்று நம்புவதில் மாற்று கருத்து இருக்கலாம். ஆனால் சிலை தன்னை நம்புகிறவர்களுக்கு நல்லது செய்கிறதோ இல்லையோ அதனால் யாருக்கும் ஒருபோதும் பாதிப்பு இருக்காது. கை,கால்களுடன் காமமும் முளைத்த ஆசாமிகளை சாமிகளாக நம்பும்போதுதான் ஆபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. 


கோயில் கருவறைக்குள் செக்ஸ் வைத்துக்கொண்டால் மோட்சம் கிடைக்கும்; தெய்வ அம்சம் பொருந்திய குழந்தை பிறக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பல பெண்களை நாசம் செய்த காஞ்சிபுரம் கோயில் அர்ச்சகர் தேவநாதன் ஒரு பக்கம். 
பெண்களும் பெண்களும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும்போது தெய்வத்தை பார்க்கலாம் என தன் கண்முன் காம விளையாட்டை பார்த்து ரசிக்கும் கல்கி சாமியார் இன்னொரு பக்கம்
கள்ளச்சாமிகளை ஒழிப்போர் சங்கம்...
காமவெறி வெளியுலகத்திற்கு தெரியவராமல் இருக்க கையெழுத்து வாங்கும் நித்தியானந்தா ஒரு பக்கம் என கலர் கலராக புறப்படும் போலிகள் நிற்கப்போவதில்லை. அடுத்த மாதமே புது டிசைனில் புழுகு மூட்டையை அவிழ்த்து ஆன்மீக தொண்டாற்றும் ஆசாமிகள் தென்பட ஆரம்பிக்கலாம்.


இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது. மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.  பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை.என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும்.கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.  நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை.  குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.  மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் அவர்கள் தண்டிக்கபடுவதில்லை.


இந்து மதத்தில் மட்டுமல்ல கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களிலும் போலி பாதிரியார்களும், போதகர்களும் இருக்கிறார்கள். 
அவர்களின் மாய வார்த்தைகளில் மயங்கி வாழ்க்கையை மாய்த்துக்கொள்ளாமல் இருப்பது நம் கைகளில்தான் உள்ளது. நெஞ்சு வலிக்கிறது என்று நித்தியானந்தா நாடகமாடிக்கொண்டிருக்கும் வேளையில் நிஜமான வலியை அனுபவிப்பவர்கள் எத்தனை பேரோ தெரியாது."நான் கடவுளை பார்த்தவன்" என்று உங்கள் முன்னால் யாராவது சொல்ல ஆரம்பித்தால் இனியாவது உஷாராக இருங்கள். ஏனென்றால் உங்களை ஏமாற்றிய பிறகு "நான் கடவுள் படத்தைதான் பார்த்தேன்" என்று லீகல் பாயிண்ட் பேசி தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனை காமெடியாக நினைத்து சிரிக்காமல் சீரியஸாக சிந்தியுங்கள்.....!

நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். 

ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான்
இது  எனது முன்னைய பதிவுகள்(கள்ளச்சாமி பதிவுகள்)  படிச்சு பாருங்க மறக்காமல் 
கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்.........part 1


கல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2

4 கருத்துக்கள்:

SURASH 3 November 2011 at 08:36  

எதையும் சொன்னால் புரியாது Machan
நல்ல பதிவு

Robin 3 November 2011 at 08:52  

மனிதனை நம்பாமல் கடவுளை நம்ப வேண்டும்.
நல்ல பதிவு.

யாழ் அர்ஜுன் 3 November 2011 at 08:57  

நன்றி Robin,SURASH thanx for your comment's

VANJOOR 3 November 2011 at 10:00  

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////

.

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP