Facebookல் குடும்பமானத்தை விற்கலாம் வாங்க.....!! _பகுதி 2_
இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு,
நீங்கள் யார்..?
உங்கள் நண்பர்கள் யார்..?
உங்களுக்கு என்ன பிடிக்கும்..?
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.
சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.
பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும்.
பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.
செக்ஸ் நோய்கள் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக்கும் முக்கிய காரணம்
லண்டன்: இங்கிலாந்தில் செக்ஸ் தொடர்பான நோய்களிந் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக் முக்கியக் காரணமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. செக்ஸ் நோய்கள் அங்கு நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு ஃபேஸ்புக்தான் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் சிபிலிஸ் நோயின் தாக்குதல் கடந்த காலங்களை விட தற்போது நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு முன்பின் அறியாதவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு கொள்வதுதான் காரணம் என்கிறது அந்த ஆய்வு. இதுகுறித்து ஆய்வை நடத்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் கெல்லி கூறுகையில், சிபிலிஸ் நோயின் தாக்குதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான இளம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், இணையதளங்கள் மூலம் குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு வைத்திருப்பதாக கூறியுள்ளனர். சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், சம்பந்தமே இல்லாதவர்களைக் கூட எளிதில் தொடர்பு கொள்ள வைக்க உதவுகிறது. இது செக்ஸ் நோய்களின் அதிகரிப்புக்குக் காரணமாக விடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்புதான் சிபிலிஸ் நோய் மிகப் பெரிய வியாதியாக இருந்தது. அப்போது ஆணுறையை அதிகம் பேர் பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது ஆணுறை குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்திலும் சிபிலிஸ் வேகமாகப் பரவுவது வியப்பாக உள்ளது. பெண்களில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்குத்தான் சிபிலிஸ் அதிகம் தாக்கியுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை 25 முதல் 34 வயது வரையிலானோரே பாதிக்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றோருக்கு ஃபேஸ்புக் மிகப் பெரிய வடிகாலாக உள்ளது என்றார் கெல்லி. இந்த பரபரப்பு ஆய்வு குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை விளக்கம் தரவில்லை.
நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.
1. பேஸ்புக் பிளேசஸ் (Facebook Places):
இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம்.
நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம். யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த:
உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.
3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?
பேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும். இதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும். இங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.
4. அப்ளிகேஷன்களுக்குத் தடா:
பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.
5. அணுகுவதற்குத் தடை:
உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.
6.இறுதி நடவடிக்கை:
பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும். திரும்பிப் பார்க்காமலேயே. பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.
அதற்கான வழிகளைத் தான் மேலே பார்த்தீர்கள். அவற்றை மேற்கொள்வது உங்கள் முடிவைப் பொறுத்தே உள்ளது.
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
நம்மில் பலர்பேர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி வருவோம், இது ஒரு சோஷியல் தளம் ஆகும். இதன் மூலம் நம் கருத்தினை நண்பர்களுடனோ அல்லது பிறரிடமோ பகிர்ந்து கொள்ள முடியும். பேஸ்புக் கணக்கினை அலுவலகத்தில் பார்த்துவிட்டு கணக்கினை விட்டு வெளியேறாமல் வந்திருப்போம். அல்லது ப்ரவுசிங் சென்று விட்டு கணக்கினை சரியாக Logout செய்யாமல் மறந்து வந்திருப்போம். அப்போது நம்முடைய கணக்கினை யாராவது முடக்கவோ அல்லது அதன் மூலம் எதாவது தீய செயலில் ஈடுபடவோ வாய்ப்புள்ளது.
நம்முடைய பேஸ்புக் கணக்கு திறக்கப்பட்ட அனைத்து இடங்களிருந்தும் கணக்கினை விட்டு வெளியேற முடியும், இதன் மூலம் திறக்கபட்ட பேஸ்புக் கணக்கினை Logout செய்ய முடியும். முதலில் உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் நுழைந்து கொள்ளவும். பின் ACCOUNT > Account Setting என்பதை தேர்வு செய்யவும். பிறகு Account Security என்பதற்கு நேராக உள்ள Change என்ற பொத்தானை அழுத்தவும். அடுத்தாதக் தோன்றும் திரையில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் வேறு இடத்தில் திறக்கபட்டிருந்தால் காட்டும். பின் End activity என்ற பொத்தானை அழுத்தவும். இனி எந்த நாட்டில் உங்கள் பேஸ்புக் திறக்கபட்டிருந்தாலும் சரி மற்ற Device அதாவது மொபைல் போனில் உங்கள் அக்கவுண்ட் திறக்கப்பட்டிருந்தால் அதுவும் Logout ஆகிவிடும்.
Face Book (முகநூல்) என்ற போதை.
பேஸ் புக்கில் நடப்பது என்ன?
இன்று நண்பர்களை சேமிக்கிறோம் என்று சொல்லித்தான் இளைஞர்கள் இந்த இணையத்தளத்தில் உருப்பினர்களான மாறுகிறார்கள். ஆனால் இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நற்புகள் உருவாகிறது என்றால் மிகவும் ஆபாசமாகவும்,அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நற்புதான் இதில் உருவாகிறது. உதாரணத்திற்கு ஒருவர் இந்த பேஸ்புக்கில் தனக்குறிய உருப்பினர் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டவுடன் அவர் பற்றிய விபரங்களை அதிலே அவர் இடுவதற்கான அவருக்குறிய பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அவர் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அணைவருக்கும் அனுமதிக்கப் பட்டுவிடும்.
தனது புகைப்படம். தான் யார்?
எந்த நாட்டை சேர்ந்தவர்?
தொழில் செய்பவரா?
அல்லது மாணவரா?
இது போன்ற என்னோரன்ன தகவல்கள் அதிலே பதியப் படும் இவையனைத்தும் அனைவரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் வெளிப்படையாகவே இருக்கும். இப்படியிருக்கும் போது இதில் ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது. ஆரம்பத்தில் வேறுவிதமாக நற்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக,காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புல்ல எவரும் மறுக்க முடியாது. அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை. இந்த வகையான நற்புகளில் ஈடுபடும் சிலர் இதற்கு ஒரு காரணத்தை பதில் என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.
தயவு செய்து சிந்தித்து பாருங்கள் .................???
நீங்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருபவரா?
எச்சரிக்கை இதோ முக்கிய ரகசியங்கள்
ஃபேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட் வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'Data Mining' எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன.
அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள தங்கத் துகள் போன்றது. பேஸ்புக்கில் எப்போதுமே போடக்கூடாத பத்து விடயங்கள் பற்றி டேவிட்வைட்லெக் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்த திகதியும் இடமும்
இது உங்கள் அடையாளங்கள் திருடப்படக்கூடிய மிக ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். உங்களது கடவுச் சொல்லை மீளமைக்கும் இணையத்தளங்களில் இது பொதுவாகக் கேட்கப்படும் பாதுகாப்புக் கேள்வி. ஒரு குற்றவாளி இதை மீளமைத்தால் அவர் உங்கள் வங்கிக் கணக்கில் பிரவேசிப்பது உட்பட எதைவேண்டுமானாலும் செய்யலாம்.
தாயின் கன்னிப் பெயர்
பல இணையத்தளங்கள் உங்களது தாயின் கன்னிப் பெயரை உங்களுக்கு அங்கீகாரம் வழங்கப் பயன்படுத்துகின்றன. நீங்கள் கற்ற பாடசாலையின் பெயரையும் அவை பொதுவாக பாதுகாப்புக் கேள்வியாகப் கேட்டு பயன்படுத்துகின்றன. எனவே இதையும் பேஸ்புக்கில் போடாதீர்கள்.
விலாசம்
நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்புகின்றீர்களா? இது அடையாள மோசடியில் (Identity Theft) மீண்டும் உங்களைத் தள்ளிவிடும். மோசடியாளர்களும் மற்றவர்களைப் பின் தொடர்பவர்களும் இவற்றைப் பாவிக்க இடமுண்டு.
விடுமுறைகள்
உங்களது விடுமுறைத் திட்ங்களை நீங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவது, உங்கள் வீட்டைக் கொள்ளையிட வருமாறு நீங்களே கொள்ளையர்களுக்கு அழைப்பு விடுப்பது போன்றது. வீட்டிலிருந்து புறப்படும் குறுகிய பயணங்கள் இதுவும் நீங்கள் பின் தொடரப்படவும் கொள்ளையிடப்படவும் கூடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் பொருள் கொள்வனவுக்காகச் செல்லும் இடங்கள், நண்பர்களோடு உணவருந்தச் செல்லும் இடங்கள். அதைப்பற்றிய தினம் நேரம் போன்ற விவரங்கள். இது உங்களைப் பின்தொடருபவருக்கு நீங்களே அழைப்பு விடுப்பது போன்றதாகும். பேஸ்புக்கின் மூலம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து அச்சுறுத்தியது சம்பந்தமாக ஒரு வழக்கும் அண்மையில் பதிவாகியுள்ளது. முறையற்ற படங்கள் பேஸ்புக்கை பலரும் பார்ப்பதால் இத்தகையப் படங்களைப் போடுவது மோசமானது. அது உங்களைப்பறறிய தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்திவிடும். அதே போல் உங்கள் வீட்டின் மாதிரித் தோற்றத்தைக் காட்டக்கூடிய மற்றும் உங்களிடமிருக்கும் பெறுமதியான பொருள்களைக் காட்டக்கூடிய படங்களையும் போட வேண்டாம். ஒப்புதல்கள் இதுவும் உங்களை வேலையிழக்கச் செய்து உங்கள் எதிர்காலத்தையே பாதித்துவிடக்கூடும்.நீங்கள் மற்றவர்களுடன் வைத்திருக்கின்ற உறவு மற்றும் வெட்கக்கேடான செயல்களை பேஸ்புக்கில் மூலம் ஒத்துக் கொள்வது ஆபத்தானது.
விளம்பரங்கள்:- நீங்கள் பேஸ்புக்கில் போடுகின்ற எல்லாமே உங்களால் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அதில் இருக்கும். தொலைபேசி இலக்கம் உங்களோடு அவசியம் தொடர்புகொள்ள வேண்டிய நிலைமைகள் தவிர இதைச் செய்ய வேண்டாம். இது 'data mining' திட்டத்தால் பெறப்பட்டு விளம்பரதாரர்களுக்கு வழங்கப்படலாம். மேலும் "Lost my phone" அல்லது "Need Ur number".போன்ற பேஸ்புக் பக்கங்களையும் பாவிக்க வேண்டாம். பிள்ளைகளின் பெயர்கள் இதுவும் அடையாளத் திருடர்களால் அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களால் பாவிக்கப்படக்கூடும். ஒரு பிள்ளையின் விவரங்களைத் திருடுவது மிகவும் இலேசானது. பொதுவான முழு அளவிலான விவரங்களை வெளியிட வேண்டாம்
பேஸ்புக்கில் இத்தகைய விவரங்கள் இருப்பதானது எந்த ஒரு தேடுதல் இயந்திரத்தினாலும் பாவிக்கப்படக்கூடியது. பெயரை மட்டும் வழங்கிவிட்டு ஏனைய எல்லாவற்றையும் மறைத்து வைத்திருப்பது மேலானது.
தயவு செய்து சிந்தித்து பாருங்கள் .................???
4 கருத்துக்கள்:
பேஸ் புக் பிரிச்சு மேய்ரீங்க ....
vote போட்டாச்சு ...
பெரிய பதிவா இருக்கு
கொஞ்சம் கொஞ்சமா எழுதுங்க ...
அப்ப தான் புரிஞ்சுக்க முடியும் நண்பா ..
தீபாவளி வாழ்த்துக்கள் ..
ok bro
i accept & i correct it soon
Post a Comment