Facebookல் குடும்பமானத்தை விற்கலாம் வாங்க.....!! _பகுதி 1_இங்க பார்ரா நல்ல குட்டிடா...!
இது அவன்ட தங்கச்சிடா ........!!
இத பார்ரா நல்ல பிகர் ஒன்னு ....!!!
இது அவன்ட பொண்டாடிடா மச்சான்... ???

இப்படி எல்லாம் பல நண்பர்களின் facebook album களை பார்க்கும் போது மற்றவர்கள் கதைக்கின்றனர். இன்று facebookகில் இருக்கும் பல நண்பர்களின் album தில் தங்கள் வீட்டில் நடந்த பிறந்தநாள்-கல்யாண பாட்டிகள் அவர்களின் ரிப் போன photos களை தங்கள் album தில் வைத்திருக்கின்றனர். அதில் அவர்களின் தங்கை-மனைவி-உறவினர் என்று பல இளம் பெண்களின் photos இருக்கின்றது. மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்று தெரிந்தும் கூட இப்படி வைத்திருக்கின்றனர்.
தங்களின் பெண்களின் மானத்தை பாதுகாக்க வேண்டிய ஆண்களே முழு உலகுக்கும் album போட்டு காட்டுகின்றனர். இவர்களுக்கு கொஞ்சம் கூட சூடு சுரனை இல்லையா??? 
ஆண்கள்தான் இப்படி செய்கின்றான்கள் என்று பார்த்தால் நம்ம பெண்களும் கொஞ்சம் கூட சூடு சுரனை இல்லாமல் அவர்களின் photoவை அவர்களின் album தில் வைத்திருக்கின்றனர். இதில் முக்கிய பிரச்சினை இவர்களின் ஆடைகள் கூட சரியான ஆடையாய் இல்லை.
இந்த photos இணையதளத்தில் உலாவும் காம கராமிகளின் கண்ணில் பட்டால் உடன் எடிட் செய்து ஆபாச படமாய் மாற்றி மீண்டும் இணையதளத்தில் உலாவ விடுவார்கள்.
இது கதை அல்ல இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்த விடயத்தில் பெண்கள் அதிகமாய் பயந்து நடங்கள். ஆண்களே உங்க பெண்களின் மானத்துக்கு நீங்களே பாதுகாப்பாளர்களாக இருக்கின்றீர்கள்.

"உயிரைக் குடித்த "பேஸ்புக் 


இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த பேஸ்புக் இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது 
அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.  சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்: ஒரு ரிப்போர்ட். 

யாழ்ப்பாண தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையில் உயர்தரம் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி தனது மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். 
போக்குவரத்து பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட மாணவியின் தந்தை, தனது நண்பனின் நகரப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதே ஆண்டில் நகர்புற கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு மாணவியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.  இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள இணைய வசதி உள்ள கணனியில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளனர். 
குறிப்பிட்ட மாணவியின் ‘பேஸ்புக்’ ல் தொடர்பை ஏற்படுத்திய இளைஞன் ஒருவர் தான் தற்போது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்து நெருங்கிய நட்பினை பேஸ் புக் ஊடாக பெற்றுள்ளார். இந்த இளைஞனது தொடர்பை அடுத்து வீட்டு கணனியில் அரட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு, இணைய சேவை வழங்கும் நிலையங்களில் சென்று குறிப்பிட்ட மாணவி அந்த இளைஞனுடன் அரட்டை அடிக்கை ஆரம்பித்துள்ளார். நாளடைவில் தனது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி இளைஞனுடன் தொடர்புகளை பேணி இருந்துள்ளார்.  சில நட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர். 
சிறிது காலத்தின் பின் 
பாடசாலையில் குறிப்பிட்ட மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த அதிபர் மற்றும் பாட ஆசிரியை மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு இட்டபோது மாணவி மறுக்கவே பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் வீட்டில் மாணவியை கூட்டிச் சென்று விசாரிக்கும் போது உண்மை வெளியே வந்துள்ளது. ஆம் அவர் இப்போது கர்ப்பமாக உள்ளார். உடனடியாக குறிப்பிட்ட இளைஞனைப் பற்றி விசாரணைகளை தந்தை ஆரம்பித்தபோது இளைஞனின் பேஸ்புக் மாற்றப்பட்டும் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்தும் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.


இரகசியமாக பேணப்பட்டு வந்த இந்தச் சம்பவம் அந்தத் தந்தையின் அடாவடித் தனத்தால் பலருக்கும் தெரியவந்துள்ளது.  தனது மகளைக் கண்டிக்காத அந்தத் தந்தை, மாணவி தங்கியிருந்த தனது நண்பன் வீட்டிற்குச் சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளார்.   இதேவேளை பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளைஞன் 1989ம் ஆண்டு 13ம் திகதி பிறந்தவர் என்றும் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளதாகவும் அவரது பேஸ்புக் தரவுப்படி அவர் மானிப்பாயை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் கல்லூரியில் கல்வி பயின்றதாகவும் “யாழ் மேனகன்” என்னும் புனைப் பெயரில் பேஸ்புக்கில் மாணவிகளுடன் இவர் அரட்டை அடிப்பதாகவும், மாணவியின் தோழி தெரிவித்துள்ளார். அத்தோடு குறிப்பிட்ட அம்மாணவியின் பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்தும் அவ் இளைஞர் இபோது விலகி உள்ளார் எனத் தெரியவருகின்றது. அப்படியாயின் அவர் திட்டமிட்டே இவ்வாறு செய்கிறாரா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.


 பேஸ்புக் தற்கொலை


லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட தமிழ் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.  வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. 
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான 19 வயது இளைஞர் ஒருவருடன் இணையம் ஊடாக காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட குறித்த மாணவி இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியில் ஏற்பட்ட விரக்தி நிலைமையே இந்த தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.  கடந்த ஆறு மாதங்களாக பேஸ்புக் மூலம் இருவரும் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குறித்த மாணவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் அப்போது மாணவியின் வீட்டுக்கும் அவர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இலங்கையிலிருந்து லண்டன் சென்றது முதல் குறித்த மாணவியை அந்த இளைஞர் நிராகரிக்கத் தொடங்கியதாகவும் இதனால் மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.இணையமூடாக தொடர்பு கொள்ள முற்பட்ட போதிலும் இளைஞர் அவற்றை நிராகரித்த காரணத்தினால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


பேஸ்புக் டைவர்ஸ்


எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் பேஸ்புக், ட்விட்டர் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில் ஒரே பெட்ரூமில் இருக்கும் தம்பதிகளை சைலன்டாக பிரித்து டைவர்ஸ் செய்ய வைத்துவிடுகிறது என்ற தகவல் அமெரிக்க சர்வேயில் தெரியவந்திருக்கிறது   உலகின் எந்த பகுதிகளில் இருப்பவர்களையும் இணைக்கும் சமூக இணையதளங்களாக பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை புகழப்படுகின்றன. இவற்றின் பயன்கள், ஆபத்துகள் பற்றி அமெரிக்க திருமண தகவல் நிறுவனம் ஒன்று சர்வே நடத்தியுள்ளது. அதில் தெரியவந்திருக்கும் தகவல்கள்: 
1.அமெரிக்காவில் ஐந்தில் ஒரு டைவர்சுக்கு சமுதாய இணையதளங்கள் காரணமாக இருக்கின்றன 
2.சமுதாய இணையதளங்கள் வந்ததில் இருந்து டைவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக 80 சதவீத விவாகரத்து ஸ்பெஷல் வக்கீல்கள் கூறுகின்றனர். 
டைவர்ஸ் விவகாரத்தை பொருத்தவரை அதிக பாவத்தை சம்பாதித்திருப்பது பேஸ்புக். மொத்தத்தில் இதன் பங்கு 66 சதவீதம். மை ஸ்பேஸ் (15%), ட்விட்டர் (5%) ஆகியவை அடுத்த இடத்தில் இருக்கின்றன.   


இந்த இணையதளங்களில் வரும் ஆபாசமான செய்திகள், புகைப்படங்கள் பலரது வாழ்க்கையை பாழாக்குகின்றன. கூடா நட்பு அதிகரிக்கிறது. இதுவரை கூச்சப்பட்ட விஷயங்களையும் பெரிய தவறுகளையும் செய்ய தூண்டுகிறது. அவை வெளிப்படும் பட்சத்தில் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு டைவர்ஸ் வரை போகிறது. இந்த நிலை நீடித்தால் சமுதாய இணையதளங்களால் தம்பதிகளிடையே புரிதல் குறைந்து ‘பிரிதல்’ அதிகரிக்க வாய்ப்பு அதிகரிக்கும்


இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.
தொடரும் அதிரடி.... நாளை  
Facebookல் குடும்பமானத்தை விற்கலாம் வாங்க.....!! 
பகுதி_2_இல்
--செக்ஸ் நோய்கள் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக்கும் முக்கிய காரணம் 


--பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்! 
--Face Book (முகநூல்) என்ற போதை.  

--நீங்கள் ஃபேஸ்புக்கில் வலம் வருபவரா?
 எச்சரிக்கை இதோ முக்கிய ரகசியங்கள் 

  


 

3 கருத்துக்கள்:

stalin 24 October 2011 at 19:17  

பேஸ் புக்- ல ரொம்ப பெரிய கொடுமை எல்லாம் நடக்குது ...


அனைத்தையும் புரியும்படியா எழுதிரீகீங்க ...

Divya Nedungadi, Mohiniyattam Artiste 20 November 2011 at 15:09  

Great Blog! Satheesh Ji, Keep the good work rolling. All the best! Divya Nedungadi

regards,

divya-nedungadi.blogspot.com

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP