மாவீரன் கடாஃபியை கொன்ற அமெரிக்கா இனி யாவது அடங்குமா

அமெரிக்கா துரோக பூமி அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும்
எச்சரிக்கை: கீழுள்ள படங்களும் காணொளிகளும் மிகக் கொடூரமானவை.
"சிலுவைப்போர்"
 கிறிஸ்தவ மதத்துக்காக போரிடும் நாடுகள் இஸ்லாத்தின் மீது புதிய சிலுவைப்போர் ஒன்றைத் தொடுத்துள்ளன. உலகெங்கும் இஸ்லாம் வாழ வேண்டும். இந்த யுத்தத்தில் இஸ்லாமிய இராணுவம் அனைத்தும் பங்குகொள்ள வேண்டும்.
கர்ணல் கடாஃபி

தன்னைப் பிடித்தவர்களிடம் மன்றாடிய கடாஃபி

கிளர்ச்சிக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் தளபதி கடாஃபி காலை 15 வாகனங்களைக் கொண்ட ஒரு வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்தார். அந்த வாகனத் தொடரணியின் மீது காலை 8.30 அளவில் நேட்டோ விமானங்கள் குண்டு தாக்குதல் நடாத்தி அழித்தன. இதில் அமெரிக்க ஆளில்லா விமானங்களே ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் முதலில் முன்னர் சென்ற ஒரு வாகனத்தைத் தாக்கி மற்ற வாகனங்களைத் தடை செய்தன. பின்னர் வீசிய குண்டுகள் சுமார் ஆறு வாகனங்களைத் தாக்கிச் சேதப் படுத்தின.  மொத்தமாக 70 வாகனங்கள் தப்பி ஓட முயற்ச்சித்ததாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது. நேட்டோ தாம் தனிப்பட்டவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில்லை என்றும் தமக்கு கடாஃப் அந்த வாகனங்களுக்குள் இருப்பது தாக்கும் போது தெரியாது என்றும் கூறியது.


குண்டு வீச்சிலிருந்து தப்ப கடாஃபி ஒரு தண்ணீர் வாய்க்கால் குழாய்க்குள் ஒளிந்து கொண்டார். நீண்ட நாட்களாக கடாஃபி ஆதரவுப் படைகள் சரணடையாமல் மூர்க்கத் தனமாக  பதில் தாக்குதல் தொடுத்ததில் இருந்தே கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கடாஃபி Sirte சேர்டேநகரில் ஒளிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.


இப்படி இருந்தவரை...


இப்படிப் பண்ணினார்கள்....
வாகனத் தொடரணி மீது விமானத் தாக்குதல் நடந்திய பின்னர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடும் தேடுதல் மேற்கொண்டனர். கடாஃபியின் ஆதரவுப் படையினரில் ஒருவர் கொடுத்த தகவலை அடிப்படையாக வைத்து 12..30 மணியளவில் கடாஃபி இருந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். கடாஃபியின் மெய்ப் பாதுகாவலர்கள் சரனடைந்தனர். அவர்கள் தங்கள் தலைவனை ஒன்றும் செய்ய வேண்டாம் அவர் காயப்பட்டுள்ளார் என்றனர். யார் தலைவர் என்று வினவிய போது அவர்கள் யாரென்று சொல்லவில்லை. பின்னர் தண்ணீர் வாய்க்காலுக்குள் இருந்து வந்த கடாஃபி எனது மகன்களே.... இங்கு என்ன நடக்கிறது?...... என்ன பிழை இங்கு..... என்றபடி வந்தார். தனது எதிரிகளை எலிகள் என்று அடிக்கடி விமர்சித்த கடாஃபி ஒரு வாய்க்காலுக்குள் எலிபோல் ஒளித்திருந்தார். அவரது தங்கக் கைத் துப்பாக்கியுடன் வெளிவந்த கடாஃபி தன்னைச் சுடவேண்டாம் என்று கத்தினார். அவரை இனம் கண்டு கொண்ட அவரது எதிரிகள் அவரை மூர்க்கமாகத் தாக்கினர்.ஒரு கட்டத்தில் 69வயதான கடாஃபி தன்மீது கருணை காட்டுமாறு கெஞ்சினார். நீங்கள் செய்வது இசுலாமியச் சட்டங்களுக்கு விரோதமானது என்று கடாஃபி கூற அவரைத் தாக்குபவர்கள் நாயே பொத்தடா வாயை என்றனர். கடாஃபி தாக்கப்படுவதையும் அவர் கெஞ்சுவதையும் கீழுள்ள காணொளியில் காணலாம்:


கெஞ்சும் கடாஃபி
கடுமையான தாக்குதலால் கடாஃபி கொல்லப் பட்டார். அவர் ஒரு கைத்துப்பாகியால் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை தெருவில் போட்டு காலால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் அசிங்கப்படுத்தினர் அவரது எதிரிகள். ஒரு நல்ல இசுலாமியர்களாக எதிரியின் உடலுக்கு மரியாதை செலுத்த கிளர்ச்சிக்காரர்கள் தவறி விட்டனர். எனது மண்ணில் இருந்து கடைசிவரை போராடுவேன் என்று அடிக்கடி அறை கூவல் விடுத்த கடாஃபி, தான் சொன்ன படியே செய்தார். கட்ஃபியின் உடல் அசிங்கமான முறையில் தாக்கப்படுவதைக் கீளுள்ள காணொளியில் காணலாம்:
 கடாஃபியின் குடும்பம்
கடாஃபியின் மகன்களில் ஒருவரான சயிஃ அல் இஸ்லாம் கடாஃபி காயங்களுடன் கைப்பற்றப்பட்டார். ஒரு மகன் சயிஃப் அல் அரப் கொல்லப்பட்டார். இன்னும் ஒரு மகன் முத்தாசிமும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். முஹம்மட், சாதி, ஹானிபல் ஆகிய மூன்று மகன்களும் ஒரே ஒரு மகளான ஆயிஷாவும் கடாஃபியின் மனைவியும் தப்பி விட்டனர். ஒரு மகன் காசிமிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.


கடாஃபியின் உடல்
காடாஃபி ஒளிந்திருந்த இடம்
கடாஃபியின் தங்கத் துப்பாக்கி
கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
 கொடூரமான தாக்குதல்:


நீதிக்குப் பு'றம்பான கொலை
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடாஃபி தப்பி ஓட முயற்சித்த போது காலில் முதலில் சுடப்பட்டதாகவும் கடாஃபியை தாம்  முதலில் கைது செய்ததாகவும் அப்போது அவர் ஏற்கனவே முதுகிலும் தலையிலும் காயப்பட்டிருந்ததாகவும் அவரை ஒரு வாகனத்தில் தாம் ஏற்ற முயன்ற போது தமக்கும் கடாஃபியின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாஃபி அவரது மெய்ப்பாதுகாவலரால் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். கடாஃபியை பிடித்து வைத்திருக்கும் காணொளிப் பதிவுகள் வெளி வந்துள்ளன. பின்னர் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் அவரடு உடலில் உள்ள காயங்கள் இரத்தக் கறைகள் என்பவற்றில் இருந்து தெரிகின்றன. கைது செய்த கடாஃபியின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் தவறிவிட்டனர். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த நீதிக்குப் புறம்பான கொலையைத் தாம் அங்கீகரிக்கவில்லை என்றார். பன்னாட்டு மன்னிப்புச் சபை கடாஃபியின் இறப்புத் தொடர்பாக முழு அறிக்கையைக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் கடாஃபியின் இறப்புத் தொடர்பாக விசாரணை தேவை என்று கூறியுள்ளது.


அரபு வசந்தத்தில் முதலில் கொல்லப்பட்ட சர்வாதிகாரி மும்மர் கடாஃபியாகும்.  


கடாஃபின் கொலைக்குப் பின்னரான நகைச்சுவைகள்.
கடாஃபியின் பெயரை எப்படி எழுதுவது என்பது பல ஊடகவியலாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. ‘Gaddafi’, ‘Khaddafi’ 'Qaddafi, 'Qadhafi', 'Gathafi',  or ‘Ghaddafi’ என்று பலவிதமாக எனப் பலவிதமாக அவரது பெயரை எழுதுவார்கள். இது தொடர்பாக சில நகைச்சுவைகள் உலாவத் தொடங்கிவிட்டன:
காடாஃபியின் கொலையைக் கொண்டாடும் மக்கள்.

சூளுரை
 வான் தாக்குதலுக்கு எதிரான மிகச் சக்திவாய்ந்த தற்காப்பு ஆயுதம் என்றால் அது மக்கள்தான். இங்கே மக்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு நடுவில்தான் நான் இருக்கிறேன். 
கர்ணல் கடாஃபி
பிரித்தானியப் பாராளமன்றத்தில் பிரித்தானியா வாழ் இந்து சமயப் பிரமுகர்களிடை தீபாவளி வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது கடாஃபியை பிரதம மந்திரி டேவிட் கமரூன் நரகாசூரனுக்கு ஒப்பிட்டார்.

Thanks veltharma


 கேர்னல் கடாஃபி, லிபியாவின் அதிகாரமிக்க தலைவராக[1969 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு அவரது அரசு பதவியில் இருந்து அகற்றப்படும் வரை இருந்தவர். 1969 ஆம் ஆண்டில் லிபியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்தார். 42 ஆண்டு காலம் பதவியில் இருந்து அரபு நாடொன்றில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமையைப் பெற்றர்.
1969 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்[. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது எரிபொருள் விலை அதிகரிப்பு, பெறோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் ஆப்பிரிக்கநாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினது ம்வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது

லிபியா
லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும். ஏறத்தாழ 18,00,000 ச.கி.மீs (7 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.[1] லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும். 1951ஆம் ஆண்டு லிபியா இராச்சியம் என விடுதலைப்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார். 2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன

4 கருத்துக்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) 25 October 2011 at 14:46  

துப்பாக்கி தங்கத்தாலானதானாலும், அதன் பயன்பாடு கொல்தலே!
அதானால் அடுத்தரையோ, தன்னையோ கொல்லலலாம். இவர் தன்னைக் கொன்றிருக்கலாம்.
எனக்கு அவருடன் தனிப்பட்ட வகையில் கோவம் இல்லை. ஆனால் 42 வருடங்கள், இவரால் எவருமே
பாதிக்கப்படவில்லை எனச் சொல்லமுடியுமா? கடந்த 8 மாதம் இவர் தன்னையும், தன் குடும்பத்தையும்
காக்க செய்த கொலைகள் எத்தனை.
அதன் பின் இவர் தனக்கு உயிர் பிச்சை, இஸ்லாமிய மார்க்கத்துக்கு உடன் பட்டுத் தாருங்கள் எனக் கேட்க
வெட்கமில்லையா? இவர் செய்த கொலைகள் யாவும் இஸ்லாமுக்கு ஏற்புடையதா?
எந்த வகையில் இவர் மாவீரன் புறமுதுகிட்டு, தப்பி ஓட முற்படுபவர் மாவீரரா? இக்காணொளி களையும்; இவர்
ஐநா வில் ஆற்றிய உரையுட்பட, சமீபகால உரைகளையும் நடைமுறைகளையும் பார்த்தபோது, இவருக்கு
மனநல வைத்தியம் செய்திருக்க வேண்டும்.மிகக் கௌரவமாக வாழ்ந்து, இறந்திருக்க வேண்டியவர்.
அர்த்தமற்ற , மக்களுக்கெதிரான பாடோடாப வாழ்வு வாழ்ந்து, விசர் நாயைப் போல் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
எல்லாம் தகிடு தத்தமும் கற்றவர், மக்கள் மனதை வெல்லத் தவறிவிட்டார்.கிளர்ச்சி எழுந்த போதும் ஒதுங்கி
மக்களாட்சிக்கு வழி விட்டிருந்தால் , இவ்வளவு அவமானமும், கொடுமையும் மிக்க சா வந்திராது.
அல்லா (இறைவன்) - சகல வல்லமையும் மிக்கவர். பல ஆட்சியாளர்கள் போல் இவரும் இறைவனுக்கு
எதிராகவே செயல்பட்டவர்.

நண்பன் 25 October 2011 at 21:34  

ஜோகன் பாரீஸ் சூப்பர் பின்னோட்டம் நன்றி .
மக்கள் மனதை வெல்லத் தவறிவிட்டார்.

யாழ் அர்ஜுன் 25 October 2011 at 23:33  

ஜோகன் பாரீஸ்,நண்பன் பின்னோட்டதுக்கு நன்றி .

அமெரிக்கா தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும்
here also

Anonymous,  29 October 2011 at 02:01  

johan you are correct.......golden phrases.

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP