யாழ்ப்பாண சமூகச் சீர்திருத்தவாதிகள்


சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......!

அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர் வேதனைப்படக்கூடிய விடயம். ஆனால், இதனையே தம் ஆதாயத்துக்காகவும்  சுயநலங்களுக்காகவும் சிலர் இணையத்தளத்தில் ஓர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.இது எவ்வளவு கவலைகுரிய விடயமாகும்.தன் சமூகத்தினை தாமே கொச்சைப்படுத்தும் ஓர் நிகழ்வாகும்.
அனைவருக்கும் வணக்கம்
குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்.....!

உதாரணத்திற்கு, யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை தமது சுயநலனுக்காக திரிவுபடுத்தி தம் இணையத்தளங்களில் பிரசுரித்து வருகின்றனர்.இது மிகவும் கேவலம் கெட்ட கீழ்த்தரமான செயலாகவே நான் கருதுகின்றேன்.

அண்மையில் இணையத்தளத்தில் வரும் விடயங்கள் வாசிப்பதற்கு மிகவும் வேதனைப் படக்கூடியதாக இருந்தது.அதில் குறிப்பிடப்பட்டவை சில வேளைகளில் உண்மையாக இருந்தாலும் அவற்றை மூடிமறைப்பதால் சில நன்மைகள் உண்டாகும் என்பதே எனது உள் கருத்து.

சரி!! நீங்கள் இச் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே வைத்துக் கொள்வோம். நீங்கள் சொல்ல விரும்பும் விடயங்களை சூட்சுமமாக சொல்லி விளங்கப்படுத்துவீர்களேயானால் உங்கள் வெற்றி அதில் தங்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


எல்லோராலும் கலாசார பூமி என சித்தரிக்கப்படும் யாழ் மண்ணின் புணிதத்தன்மையினை சீர்குலைக்கும் வகையில் சில துர்க்குணம் கொண்ட ஜந்துக்கள் செயற்பட்டு வருகின்றன.அந்த ஜந்துக்கள் நாகரீகம் என்ற போர்வையின் கீழ் இத்தகய செயற்பாடுகளை செய்தவண்ணம் உள்ளனர்.

இவ்வாறான கெட்ட சம்பவங்களை தமது இணையத்தளங்களில் பிரசுரிக்கும் என் இனமே...!!!!!!
உன்னை ஒன்று கேட்டுக் கொள்கின்றேன்...’
நீ போடும் செய்திகள் அணைத்தும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்..உன் செய்திகள் அணைத்தும் உறுதிப்படுத்தப்பட்டவை என்று சொல்வாயெனில்...அச் சமூகவிரோதிகளை நீ நன்கு அடயாளம் கண்டிருப்பாய். நீ உன் சமுதயத்தில் அக்கறை கொண்டுதான் உன் செய்திகளை இடுகிறாய் எனில்,அவர்களை களை எடுக்கும் நிகழ்வினை தொடங்கிவிடு...அது எதுவாக இருக்க வேண்டும் என்பது உன் ஆளுமையில் உள்ளது.

அதைவிடுத்து அவற்றை பகிரங்கப்படுத்துவதில் எவ்வித பயனும் இல்லை.சமூகத்தில் அக்கறை கொண்டோர் வேதனைப்படுவர்.சிலர் இதையே சாதகமாகப் பயன்படுத்தி மேலும் தப்பு செய்யக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.காரணம்”காணாததைக்கண்டதும் ஆசைவருவது”மனித இயல்பு.
 யாழ்ப்பாணத்தில் புளுரூத் (Bluetooth) படும் பாடு,
 யாழ் பஸ் நிலைய ஆட்டோக்களின் இரகசியம் 
இவ்வாறான இடுக்கைகள் தேவைதானா
இவ்வாறான இடுக்கைகள் புதிய ஓர் பிழைக்கு இடம் கொடுக்காதா
சற்று சிந்தித்துப்பாருங்கள்.
இவை தேவையான இடுக்கைகள் தானா????

இந்த இணையத்தள நிறுவனர்களை ஒன்று கேட்கிறேன்

 உன்வீட்டில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் இவ்வாறுதான் செய்வாயா?
வீட்டிற்குள்ளேயே பேசி ஓர் தீர்வெடுக்கமாட்டாய்???  
Thanks :-
http://www.vanakkamnet.com
 நீ போடும் செய்திகளே சில சமயங்களில் புதிய தவறுகளைச் செய்ய வழிவகுக்கும்.ஜாக்கிரதை

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP