தன்னம்பிக்கை கொண்ட நண்பன்... மூன்றடிஉயரம்...!


ஒரு மனிதனின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பது உடல் வலிமையைவிட மனவலிமையும் முயற்சியுமே என்பதை நிருபித்துக் காட்டியுள்ளார் நண்பன் ரவிதரன் 
யாழ் நகரில் இருக்கும் மூன்றடி உயரேமேயான தொழிலதிபர் ரவிதரன். இவருக்கு வயது 38 ஆனால் இவரின் உயரம் மூன்றடி மட்டுமே.

உயரம் குறைந்த மனிதர்கள் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்தாலும் பலர் பிறரிடம் கையேந்தியும் பிறரை நம்பியும் வாழ்வதையே காணுகின்றோம். 

ஆனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்றடி உயரமான ரவிதரன் அவரின் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று சொந்தக்காலில் நின்று வாழ்வதுடன் வயதான தனது தாய் தகப்பனையும் தானே பராமரிக்கிறார். அத்தோடு பலர் இவரிடம் தொழில் செய்கின்றனர். இவர் உயரத்தில் குறைந்து இருந்தாலும் இவருக்கு இருக்கும் பண்பாடுகளும் சமூக அக்கறையும் தன்னம்பிக்கையும் பல மடங்கு உயரமானதே. 

இவர் யாழ் நகரில் தங்க நகைக் கடை ஒன்றும் தங்க ஆபரணங்கள் செய்வதற்கான பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யும் நிலையம் என இரண்டு வர்த்தக நிலையங்களை நடத்துகிறார். 
இவரிடம் சுமார் ஏழு பேர் தொழில் புரிகின்றனர். இவர் இந்நிலைமைக்கு வர காரணமாக அமைந்ததற்கும் தான் குள்ளமாக இருந்தும் தன்னிடம் தாழ்வு மனப்பான்கு வராமல் இருப்பதற்கு காரணம் தான் வீட்டுக்குள் முடங்காமல் கல்வி கற்றதும் வெளியில் எல்லோருடனும் பழகியதுமே என்றார். 

கடந்தகால யுத்த சூழ் நிலைமை வராவிட்டால் தான் பல்கலைக்கழகமும் சென்றிருக்க முடியும் என்று கூறிய ரவிதரன் பிறரிடம் தங்கி வாழாமல் சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பது தனது இலட்சியமாக இருந்ததாகக் கூறினார். தனக்கு கிடைத்த அரச வேலையை பொறுப்பெடுக்காமல், 1992 ஆம் ஆண்டு 1500 ரூபாய் பணத்துடன் ஆபரணம் செய்யும் தொழிலை ஆரம்பித்ததாகவும் கடந்த காலத்தில் இந்தியா கொழும்பு என சென்று வியாபாரத்தை விரிவாக்கினேன் என்றார். 

ரவிதரன் தனது முயற்சியாலும் திட்டமிடலாலும் வியாபாரத்தை விரிவாக்கி நகர்த்துகையில் ஆபரண தொழில் இலங்கையில் திடீரென பாரிய வீழ்ச்சியடைந்தது பொருளாதார ரீதியாக பாரிய சவாலை சந்திக்க வைத்துள்ளது.  இருந்தாலும் இப்பொருளாதரா சவாலை வெற்றிகொள்ள மனம் தளராது இன்றும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறான முயற்சியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டியது சிறந்த விடயமாகும்.
jaffna friends ஞாபகம் இருக்கா ?
 கொக்குவில்இல கண்டு பழக்கம் உங்களுக்கும் நாபகம் இருக்கா நாச்சிமார் கொவிலடில டெய்லி கும்பிடுவார் ஞாபகம் இருக்கா தன்னம்பிக்கை கொண்ட நண்பன்

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP