தன்னை கடவுள் என்று கூறும் இவருக்கு என்ன ? Who is that சத்ய சாய்பாபா ? x-ray reportசாக கிடந்த, பாபா கடவுளா.......?... 
இல்ல....அவர காப்பாத்த போராடின வைத்தியர்கள் கடவுளா.......?


சத்ய சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார்?
தன்னை கடவுள் என்று கூறும் இவனுக்கு என்ன ???


சத்யா சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.
சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது வானில் இருந்து வந்த அதிசய ஒளி ஈஸ்வரம்மா வயிற்றில் புகுந்தது போன்று இருந்தது. அதன் பிறகு ஈஸ்வரம்மா கர்ப்பம் ஆனார். 
குறிப்பிட்ட காலம் கடந்ததும் அவருக்கு குழந்தை பிறந்தது. சத்ய நாராயண ராஜு என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள். சிறு பருவத்திலேய சாய்பாபா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்.
நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல், என தொட்ட துறைகளில் எல்லாம் பிரகாசமாக இருந் தார்.
1940-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி சாய்பாபா தனது சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கொட்டி விட்டது. இதனால் அவர் சில மணி நேரம் தன்னிலை மறந்தவராக மாறிவிட்டார். அதன் பிறகு சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது என முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார். 
இதனால் பயந்துபோன பெற்றோர்கள் அவரை டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவர்கள் சாய்பாபாவை பரிசோதித்து விட்டு நரம்பு தளர்ச்சி நோய் தாக்கி இருப்பதாக கூறினார்கள். அதற்கு சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. மத குருக்கள், சாமியார்களிடம் அழைத்து சென்றனர். பலன் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து “ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய்” என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். 
சத்ய சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்புதான் சீரடி சாய்பாபா இறந்திருந்தார். இந்த நிலையில் சத்யசாய்பாபா நான் தான் சீரடி சாய்பாபாவின் மறுபிறவி என்று அவர் கூறியதால் அனைவரும் வியப்படைந்தனர்.
இந்த தகவல் சுற்று வட்டார பகுதி முழுவதும் பரவியது. அதுவரை சத்ய நாராயணராஜுவாக இருந்த அவர் சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார். மக்கள்  திரண்டு வந்து சாய்பாபாவை பார்த்தனர். அவர்களுக்கு சாய்பாபா அருளாசி வழங்கினார். பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி காட்டினார். 
அதன் பிறகு சாய்பாபாவே சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றார். அவரை காண வந்த பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறின. தனது கை,கால்களில் இருந்தும் உடல்களில் இருந்தும் திடீரென பல்வேறு பொருட்களை எடுத்து காட்டி எல்லோரையும் அதிசயிக்க வைத்தார்.
இதனால் அவரது புகழ் தென்இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 1944-ம் ஆண்டு பக்தர்கள் அனைவரும் சேர்ந்து சாய்பாபாவுக்கு புட்டபர்த்தியில் கோயில் கட்டி கொடுத்தனர். அங்கு பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். 
இதனால் விரிவான கோவில் கட்டப்பட்டது. அதற்கு பிரசாந்தி நிலையம் என்று பெயர் சூட்டினார்கள். 100 ஏக்கர் நிலம் கோவிலுக்காக வாங்கப்பட்டது. 1948-ல் அங்கு சாய்பாபா ஆசிரமத்தை கட்டினார். 1954-ல் சிறு ஆஸ்பத்திரி ஒன்றை கட்டி இலவச மருத்துவ சிகிச்சை வழங்கினார்.
அவருடைய அருளாசி, அதிசயங்களால் கவரப்பட்டு இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் சாய் பாபாவுக்கு பக்தர்கள் உருவானார்கள். இந்தியா முழுவதும் சாய்பாபா சுற்றுப்பயணம் செய்தார். தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தார். அவரை கடவுளின் அவதாரமாகவே பக்தர்கள் கருதினார்கள்.
இந்தியா முழுவதும் சத்ய சாய்பாபா ஆசிரமங்கள் உருவாயின. 137 நாடுகளில் அவருக்கு பக்தர்கள் உருவானார்கள். பக்தர்கள் ஏராளமான பணத்தை ஆசிரமத்தில் கொட்டினார்கள். இவற்றை பொது மக்களின் நல்ல காரியங்களுக்காக செலவிட்டார். 
குடிநீர், சுகாதாரம் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் செலவிட்டார். தற்போது உலகில் 114 நாடுகளில் 1200 இடங்களில் சத்ய சாய்பாபா மையங்கள் உள்ளன. சாய்பாபா ஆசிரமத்தின் சொத்து மதிப்பு ரூ.2 1/2 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது.சாய்பாபாவின் பில்லியன் சொத்துகளுக்கு மோதல் ஆரம்பம்

சத்ய சாய்பாபாவின் மறைவைத் தொடர்ந்து புட்டபர்த்தியில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த வாரிசு யார்? ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் எதிர்காலம் என்ன என்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.1 இலட்சம் கோடி அளவுக்கு சொத்துக்களைக் கொண்டுள்ளது சாய்பாபா அறக்கட்டளை. இதை நிர்வகிப்பது தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் பாபாவின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.பாபா உடல் நலம் குன்றி படுத்த படுக்கையான நாள் முதலே இது வெடிக்கத் தொடங்கிவிட்டது.

இதன் காரணமாகவே பாபாவின் உடல்நிலை குறித்த விவரங்களைக் கூட அவரது பக்தர்களால் அறிய முடியாமல் போய்விட்டது.பெரும் மர்மமான சூழலிலேயே சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஆந்திர மாநில அரசு களத்தில் இறங்கி பாபாவின் நிலை குறித்தும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்தும் உண்மை தகவல்களை அறிய அதிகாரிகள் குழுவை நியமிக்க நேரிட்டது.

அறக்கட்டளையின் தலைவராக இதுவரை சாய்பாபாதான் இருந்துவந்தார்.அவர் மட்டுமே காசோலைகளில் கையெழுத்திடக் கூடிய அதிகாரம் பெற்றவராக இருந்தார். இதன் காரணமாக அறக்கட்டளையின் அடுத்த கட்டம் பெரும் தேக்க நிலையை சந்தித்துள்ளது. பிற சாமியார்கள்,மதத்தலைவர்கள் போலல்லாது சாய்பாபா தனது குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக் காத்து வந்தார்.எனவேதான் அவர்கள் தற்போது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் பங்கு கேட்கின்றனர்.இவர் அறக்கட்டளையில் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.தனக்கு நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பு தரவேண்டும் என்று கோருகின்றார் ரத்னாகர்.இவருக்கு முன்பு இவரது தந்தை ஜனகராமையா அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்தார்.அவரது மறைவைத் தொடர்ந்து ரத்னாகர் உறுப்பினரானார்.

அதேசமயம் அறக்கட்டளை செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் சில உறுப்பினர்கள் பல்வேறு பிரமுகர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து அதன் மூலம் அறக்கட்டளையை நிர்வகிக்க வலியுறுத்தி வருகின்றனர். சக்கரவர்த்தியின் யோசனைக்கு அறக்கட்டளை உறுப்பினர்களான முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி,முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் எஸ்.வி.கிரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.சக்கரவர்த்தி ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆவார்.பாபாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தனது பதவியை துறந்தவர் ஆவார்.

தற்போது இந்தப் பிரச்சினையில் அரசியலும் கலந்துவிட்டதால் பெரும் குழப்பநிலை காணப்படுகிறது. கடந்த 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி அனந்தப்பூரில் உள்ள அறநிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில்தான் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.இந்த அலுவலகமும் தற்போது பாபா அறக்கட்டளை விவகாரம் குறித்து பெருத்த மௌனம் சாதித்து வருகிறது.யார் அறக்கட்டளையை அடுத்து நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அலுவலகம்தான் கூறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறக்கட்டளை பதிவு ஆவணத்தில் அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் நிறுவன அறங்காவலர்அதாவது சாய்பாபாஅனுமதி பெற்றே செய்யவேண்டும்.நிறுவன அறங்காவலருக்கே மாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் நிறுவன அறங்காவலர் இல்லாத பட்சத்தில் அறக்கட்டளையில் எப்படி மாற்றம் செய்வது என்பது குறித்து குறிப்பு ஏதும் இல்லை.

தற்போதைய நிலையில் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிடும் திட்டம் இல்லை என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.இதை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைவரப்படி சாய்பாபாவின் அடுத்த வாரிசு யார் என்பது குறித்து அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.சிலகாலம் வரை அறக்கட்டளையே நிர்வாகத்தை கவனித்து வரும் என்றும் பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகுதான் அடுத்த வாரிசு அறக்கட்டளையின் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிகிறது.

சாய்பாபா மரணத்தில் சர்ச்சை: மரணத்திற்கு முன்பே சவப்பெட்டி ஓர்டர் செய்த மர்மம்