மிருக பலி ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை இது தடை செய்ய படுவது என்பது மத சுகந்திரத்துக்க செய்யப்படும் துரோகம்


"சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோயிலில் நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு மக்கள் விலங்குகளை கொண்டுவர வேண்டாம் என அமைச்சர் மெர்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது வேண்டுகோளை மீறி கொண்டுவரப்படும் மிருகங்களை தனது குழுவினர் கையேற்றுவிடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்."
மிருகபலி என்பது சைவசமயத்தை/இந்து சமயத்தை  பொறுத்தவரை தொரு தொட்டு பின்பற்றி வரும் பழக்க வழக்கம் இதில் வேறு மதத்தவரின் தலை யீடு  என்பது எந்த ஒரு இந்து ஆலும் ஏற்று கொள்வது கடினம்
சென்ற வருடம் மிருக பலி பூஜையை அமைச்சர் மெர்வின் தடுத்திருந்தார்
ஏன் இந்த மிருகபலி 
மிருகபலி என்பது பண்டைய காலத்தில் காடுகளில் வசித்த சைவ தமிழ் மக்கள் தமக்கு என்று சில காவல் தெய்வங்களை வழிபட்டனர் அவற்றிற்கு தாம் சாப்பிடுவது போல விலங்குகளை படைத்தும் அவற்றை கடவுளுக்கு காணிக்கையாக குடுத்தும் வந்தனர் இது மறக்க மறைக்க முடியாத உண்மை
உதாரணம் கண்ணப்ப நாயனார் வாழ்க்கை
 இதன் தொடர்ச்சியில் இன்று எஞ்சி நிற்பது இறைவனுக்காக செய்யும் மிருக பலி மற்றும் மாமிசம் முட்டை படைத்தல் இவற்றை செய்யும் போது ஊர் நன்றாக வரும் என்பது அவர்களின் நம்பிக்கை அதில் உண்மை உண்டு என்பது பல மூதாதையரின் கருத்து
இன்று மிருக பலி என்பது பலராலும் வெறுக்க படுவதற்கு பிரதான காரணம் இதை செய்வதற்கும்/பார்ப்பதற்கு தைரியமான சமூகம் இல்லாமையும் பிராமண சமூகம் கொடுக்கும் அழுத்தமும்
இந்த பிராமண சமூகம் யார் என்று அறிந்தால் இவர்கள் இடையில் இந்தியாவின் வட நாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை கடவுளின் உதவியாளர்கள் என்று காட்டி பிழைக்கும் கூட்டம் உண்மையில் கிராம தெய்வங்களுக்கும் இவர்களுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு என்பது அறவிலும் இல்லை
ஆகவே இவர்கள் (பிராமணர் )இதை பற்றி கதைக்க எந்த விதத்திலும் முடியாது
இங்கு எனும் ஒரு வேதனை பெளத்த தேரர் கள்  இந்த விடயம் சம்பந்தமாக கதைப்பதுடன் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கின்றனர் இந்த விடயம் தொடர்பாக கதைக்க எந்த வக்கும்பெளத்த தேரர்கள்க்கு  இல்லை
 இதுவும் இலங்கையில் மத சுகந்திரம் இல்லை என்பதை காட்டி நிற்கிறது 
இதில் ஒரு சிரிப்பு என்ன எனில் மேர்வின் சில்வா எனும் ஒரு (........)சொல்கிறான் முஸ்லிம்கள் பெரு நாள்களின் போது  பசுக்களை கொன்றால் ஏற்க முடியும் ஆனால் தமிழ் மக்கள் செய்தல் முடியாது
எங்களின் வரலாற்றையும் தொன்மையும் அறிந்தஉண்மை தமிழர்  எவரும் இது தொடர்பாக கருத்து  தெரிவிக்க வில்லை என்பது தான் உண்மை

இந்த போக்கு இலங்கை என்ற நாட்டில் சைவ மற்றும் தமிழர்கள் இருந்தார்களா என்று இருக்கிறார்களா என்று யோசிக்க வைக்கிறது

மிருக பலி ,மிருக படையல் ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை இது தடை செய்ய படுவது என்பது மத சுகந்திரத்துக்க செய்யப்படும் துரோகம்
முஸ் லிம் களின் பள்ளி வாசல் தாக்க படும் போது  அவர்களுக்கு இருந்த ஒற்றுமை சைவ தமிழர்களுக்கு இல்லை என்பது  கவலை பட வேண்டிய விடயமாகும்
குறிப்பு இந்த சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோயில்ஆலயத்துக்கு நான் இரு தடவை சென்று வழிபட்டு உள்ளன் ஆக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்பவர்கள் அருகில் வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் வெகு சிலர் தான்  இந்த பிரதேசம் தான் குளக்கோட்ட மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட 52 தமிழ் கிராமத்தின் ஒன்றின் நிலை முன்னர் இங்கு 1சிங்கள கிராமமும் 52 தமிழ் கிராமமும் இருந்தது இன்று 1(உடப்பு )தமிழ் கிராமமும் எஞ்சிய அனைத்தும் சிங்கள கிராமம் ஆக மாறிஉள்ளது இது யோசிக்க வேண்டிய விடயம்
 தமிழ் சைவம் என்று கத்துவதை விட்டு மனத்தால் தமிழை சைவத்தை நேசித்தல் சைவம் தமிழ் சாகாது வாழும் 
எமது அடையாளங்களை தொலைப்பது நாம் தற்கொலை செய்வதுக்கு சமன் 
அன்புடன் சைவதமிழன்

1 கருத்துக்கள்:

ROBINSON SATHIYASEELAN 16 September 2012 at 20:05  

மனிசன கொண்ட பாராட்டுவாங்க...
மிருகத்துக்காக கதைக்க ஆள் இருக்கு மனிசனுக்காக?????????

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP