ஒரு வன்னி மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து பெற்ற அனுபவம்

சொந்தங்கள் உங்கள் சேமம் எப்படி ?
நீண்ட இடைவெளி மீண்டும் உங்களை வலைப்பதிவின் ஊடாக சந்திக்கும் ஒருவாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்
இது ஒரு உண்மை பதிவு
கடந்த வருடம் வவுனியாவில் இருக்கும் போது ஒரு அழைப்பு வந்தது எதிர் முனையில் பேசியவர் ஒரு அருட்சகோதரி (SISTER )
என்னிடம் அவர் சொல்லிய விடயம் எங்கள் பராமரிப்பில் பல ஆதரவு இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களில் இந்த வருடம் சிலர் கா.பொ.த சாதாரண(GCE O/L) தரம் பரீட்சை எடுகிறார்கள் ஆகவே நீங்கள் ஒரு வகுப்பு(TUESTION) எடுக்க வேண்டும் என்றும்
பின்னர் கூறினார் அவர்களில் சிலர் செஞ்சோலையை சாந்தவர்கள் அவர்கள் பாடபுத்தங்களை  தொட்டு அதிக காலம் நீங்கள் சிரமம் பார்க்காது படிப்பிக்க வேண்டும் நீங்கள் கற்பிக்கும் போது எளிமையாக புரியும் படி படிப்பிக்கவும் என்று கூறி முடித்தார்
நான் உடன் கூறிய பதில் நிச்சயமாக என்னால் முடிந்ததை செய்கின்றன்

அடுத்தநாள் அந்த வகுப்பு எடுப்பதற்காக சுமார் ஆறு /ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த நிலையத்துக்கு (வவுனியா இல் இருந்து கணேசபுரம் )சைக்கிளில் மிதித்து கொண்டு போனேன் காரணம்
நிச்சயம் ஓன்று அவர்களுக்கு உதவ வேண்டும் மற்றயது அந்த செஞ்சோலை பிள்ளைகளின் நிலையை உணர வேண்டும்
ஆம் நான் நினைத்ததுக்கு பதில் அன்று கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை என்ன என்று புரிய வில்லையா தொடர்ந்து படிங்கள்
அந்த நிலையத்தில் சுமார் எண்பது பெண்பிள்ளைகள் வரை இருந்தார்கள் அங்கு இருந்த கொட்டில்கள் அனைத்தும் தகரத்தாலும் பனை ஓலை ஆலும் அமைக்க பட்டிருந்தது


பின்னர் அந்த அருட்சகோதரி என்னை அந்த பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அங்கு சுமார் பதின் ஐந்து பிள்ளைகள் படிக்க வந்திருந்தார்கள்
முதல் நாள் நான் வகுப்பு நாட்டத்தி கொண்டிருக்கும் போது  ஒரு குரல் என்னை ஒருகணம் திகைக்க வைத்தது "ஆசிரியர் என்னை மன்னிக்க வேண்டும் நான் வகுப்புக்கு தாமத மாக வந்து உள்ளன் "
இந்த நிகழ்வு நடக்கும் போது மற்ற மாணவர்களும் வழமை போல இருந்தார்கள் கேலி செய்ய வில்லை ஏன் எனில் நான் எனது அறிவுக்கு எட்டிய வரை பிந்தி போனால் கேட்ட/சொன்ன  வார்த்தை Excuse Me Sir இதை விட கூட கதைத்தல் நண்பர்கள் நக்கல் செய்வார்கள்
திரும்பி பார்த்த போது ஒரு மாணவி(முகத்தில் சோகம் எழுதி இருந்தது)  இது வரை எனது வாழ்கையில் இவ்வாறான மாணவியை பார்த்ததும் இல்லை இவ்வாறான தமிழை கேட்கவும்  இல்லை
நான் திகைத்து போய் அந்த மாணவியை வகுப்புக்குள் அனுமதி செய்தேன் நான் நேராக அந்த மாணவியிடம் கேட்டேன் நீங்கள் சொன்னது புதுமையாக இருக்கிறது என்ற போது அந்த மாணவர்களில் பலர் சொன்னார்கள் "ஆசிரியர் "நாங்கள் இவ்வாறுதான் நாங்கள்வன்னிபாடசாலைஇல் படிக்கும் போது சொன்ன நாங்கள் எங்களுக்கு எப்பிடி தான் ஆசிரியர்களுடன் கதைக்க சொல்லி தந்தார்கள் இது பழகி விட்டது ஆங்கிலத்தில் சொல்லும் போது தான் கூச்சமாக உள்ளது என்று "அப்போது தான் நான் நினைத்தேன் நானும் தமிழனா என்று  ??

நான் என்னால் முடிந்த வரை அவர்களின் கல்விக்கு உதவி செய்தேன் ஆனாலும் இந்த நிகழ்வு மனதை விட்டு இன்று வரை அகலவில்லை இனியும் அகலாது என்ற நம்பிக்கையில் இதை பதிவு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன் அன்புடன் உங்கள் சொந்தம் அர்ஜுன்

தமிழ் தமிழ் என்று கத்துவதை விட்டு மனத்தால் தமிழை நேசித்தல் தமிழ் சாகாது வாழும் எனக்கு அந்த மாணவி சொல்லாமல் சொல்லி விட்டு சென்ற செய்தி 

4 கருத்துக்கள்:

Anonymous,  14 September 2012 at 22:54  

எம் தலைவரின் கண்காணிப்பின் கீழ் வளர்க்கப்ட்ட பிள்ளைகள அல்லவா. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

Anonymous,  15 September 2012 at 23:14  

ஆங்கிலத்தில் சொல்லும் போது தான் கூச்சமாக உள்ளது என்று "அப்போது தான் நான் நினைத்தேன் நானும் தமிழனா என்று ??
good i accept

Anonymous,  7 January 2015 at 14:33  

ஒரு இரு நாள் வன்னி இல் செமினார் செய்து அவர்களின் கல்வி பின்னடைவதக்கு கலைத்திடம் தெரியாமல் OL லுக்கு AL படிப்பித்த vavuniya campus students union தான் காரணம்

வன்னி பாடசாலை இல் படிப்பிக்கும் ஆசிரியர்கள் என்ன விசாரர்களா ?

Arjun Rajeswaran 8 January 2015 at 19:40  

கலைத்திடம் தெரியாமல் OL லுக்கு AL படிப்பித்த vavuniya campus students union தான் காரணம்???

please tell clearly.
@2009-2010 students they dont have enough teachers.
in early also they couldnt get proper study.
we have the pass list 100% i sure we did our best

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP