சூப்பர் ஸ்டார் ரஜினி 63வது பிறந்த நாள் சிறப்பு பதிவு


வணக்கம் சொந்தங்கள் சுகங்கள் எப்படி 
இன்றைய பதிவு தமிழ் திரை உலகின் மிகவும் பிரமாண்டமான நடிகர் ஆன்மிகவாதி  என பல முகங்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜனி இன் 63ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பதியப்படுகிறது
பெரும் பாலான விடயங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை  நூற்றாண்டுக்கு ஒரு முறை அமையும் அபூர்வ தேதி  
சூப்பர் ஸ்டாரின் மறக்க முடியாத பிறந்த நாளாக மலருகிறது 12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே அமையும் அபூர்வ தேதி இது.
கூட்டினால் 36.. சினிமாவுக்கு வந்தும் 36 ஆண்டுகள்
ரஜினிக்கு இந்த ஆண்டு வருவது 63 வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் அமையும் தேதி 12.12.12. இந்த மூன்றையும் கூட்டினால் 36 வருகிறது ரஜினி சினிமாத் துறைக்குள் காலடி வைத்து 36 ஆண்டுகள் ஆகின்றன!
திருப்பிப் போட்டால் 63  
இந்த 36-ஐ திருப்பிப் போட்டால், அவரது வயது 63 வந்துவிடுகிறது. இது ஒரு தன்னிச்சையான ஒற்றுமையாக இருந்தாலும், வேறு எந்த நடிகருக்கும் அல்லது தலைவருக்கும் அமையாத ஒரு அபூர்வ விஷயம் 
திரையுலகின் மன்னன்...
ஸ்டைலின் குரு, அதை பின்பற்றும் சிஷ்யன்கள் பலர்..
ஆறில் இருந்து அறுபது வரை வயது வேறுபாடின்றி உங்களை பற்றித்தான் பேச்சு..

அறுபது கடந்தும் இன்றும் நீங்கள் உழைப்பாளி..
ரசிகர் மனதின் தனிக்காட்டு ராஜா..  அன்புக்கு நீங்கள் என்றும் அடிமை..
முத்துப்போன்ற வெள்ளை மனம் கொண்ட ராஜாதி ராஜாவே எம் இதய தளபதி..
அன்புள்ள ரஜனிகாந், நோயின் வலி கடந்து நிற்கும் நீங்கள் எந்திரன்..
முதுமை உங்களுக்கு அல்ல.. 
உங்களை சேர துடித்து களைத்து நிற்கும் அந்த முதுமைக்குதான் முதுமை...
இளமை ஊஞ்சலாடும் சிவாஜிராவ் அவர்களே...
படிமம்:Rajinikanth during audio release of robot.jpg
                          உங்களுக்கு இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

ரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராசா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரசினிகாந்து நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.
1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த எந்திரன்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 ரஜினிகாந்த்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார்.
நடித்ததில் மிகவும் சிறப்பான படங்கள் 

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்(கள்)மொழிவிருதுகள்
1975அபூர்வ ராகங்கள்அபஸ்வரம்தமிழ்
1976மூன்று முடிச்சுதமிழ்
197716 வயதினிலேபரட்டைதமிழ்
புவனா ஒரு கேள்விக்குறிஅரவிந்த்தமிழ்
1978முள்ளும் மலரும்காளிதமிழ்தமிழக அரச திரைப்பட விருதுகள்
1979நினைத்தாலே இனிக்கும்தீபக்தமிழ்
ஆறிலிருந்து அறுபது வரைசந்தானம்தமிழ்
1980பில்லாபில்லா,
ராஜா
தமிழ்
முரட்டு காளைகாளையன்தமிழ்
1981தில்லு முல்லுஇந்திரன் /
சந்திரன்
தமிழ்
1982மூன்று முகம்அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ்தமிழக அரச திரைப்பட விருதுகள்
1984நல்லவனுக்கு நல்லவன்மாணிக்கம்தமிழ்சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1985ஸ்ரீ ராகவேந்திராராகவேந்திர சுவாமிதமிழ்
1991தளபதிசூர்யாதமிழ்
1992அண்ணாமலைஅண்ணாமலைதமிழ்
1993எஜமான்வாணவராயன்தமிழ்
1995பாட்சாமாணிக்கம்தமிழ்
முத்துமுத்து,
எஜமான்
தமிழ்தமிழக அரச திரைப்பட விருதுகள்
1997அருணாசலம்அருணாசலம் ,
வேதாசலம்
தமிழ்
1999படையப்பாஆறுபடையப்பன்தமிழ்தமிழக அரச திரைப்பட விருதுகள்
2005சந்திரமுகிடாக்டர். சரவணன் ,
கிங் வேட்டையன்
தமிழ்தமிழக அரச திரைப்பட விருதுகள்
2007சிவாஜிசிவாஜி ஆறுமுகம்தமிழ்தமிழக அரச திரைப்பட விருதுகள்
பரிந்துரை—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2010எந்திரன்டாக்டர். வசீகரன்,
சிட்டி
தமிழ்பரிந்துரை—சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
நிஜ வாழ்க்கையில் ரஜினிகாந் புகைப்படங்கள் 


இவன் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா... -கவி பேரரசு வைரமுத்து

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP