இனியாவது நல்ல திரைப்படங்கள் வருமா .......??


வன்முறை, ஆபாசம் உள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை என்ற அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
 தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு என்ற ஒரே காரணத்துக்காகப்படத்தின் தலைப்பை மட்டும் தமிழில் வைத்துக்கொண்டு கடந்த காலங்களில் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த திரைப்படங்களை வழங்கியவர்களின் எண்ணிக்கையே அதிகம். ஆண்டுக்கு 500 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் பாதிக்கப்பட்ட போதிலும் வரிவிலக்கு என்ற பெயரில் சிலர் மட்டுமே இலாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.


அரசின் பதில், “வன்முறை, ஆபாசத் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை என்று அறிவித்திருப்பது தங்களுக்கு வேண்டாத மற்றும் தங்களிடம் அடி பணியாதவர்களின் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது என்று மறுக்க இதை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் என தெளிவுரை கொடுத்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டு காலம் தனது தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்றது என்பதை மறந்து வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
கடந்த ஐந்தாண்டுகளில்
திரைப்படத்துறையில் நடந்த அதிகாரத் துஷ்பிரயோகம் பற்றி ஏன் முன்னாள் முதல்வர் வாய்திறக்கவில்லை என்பதே எல்லோருக்குள்ளும் எழும் இப்போதைய கேள்வி?
குறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த பாரம்பரியமிக்க சில தயாரிப்பு நிறுவனங்களும் திறமையான சில இயக்குநர்களும் இன்றைக்கு இருப்பிடம் தெரியாமல் போனதற்கு நிதியோடு புதிதாய் முளைத்த தயாரிப்பாளர்கள்தான் காரணம் என்பதை முன்னாள் முதல்வர் ஏன் நினைத்துப் பார்க்க மறந்துவிட்டார்?
எத்தனை அடக்குமுறைகள்? எத்தனை அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என திரைப்படத்துறையினர் கடந்த ஐந்தாண்டுகளில் பட்ட கஷ்டங்களைப் பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். 
உதாரணமாக மதுரை மாவட்டத்தில் வழக்குச் சொல்லாகவும் குலதெய்வமாகவும் வழிபடும் "ஒச்சாயி' என்ற பெயரில் வெளியான திரைப்படத்துக்குக் கடந்த ஆட்சியில் வரிவிலக்கு அளிக்க மறுத்தது எந்தவிதத்தில் நியாயம்? 
பத்திரிகைகள் சுட்டிக்காட்டிய பிறகே வரிவிலக்கு அளிக்கப்பட்டது வேறு விடயம்.ஆனால், எந்தத் தமிழ் அகராதியிலும் இல்லாத "எந்திரன்' என்ற பெயரில் வெளியான படத்துக்கு மட்டும் எவ்விதக் கேள்வியும் கேட்காமல் வரிவிலக்கு அளித்தது யாருடைய அரசு?
 தனது பேரன் தயாரிப்பு என்ற ஒரே காரணத்துக்காகவே"எந்திரன்' படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது அதிகாரத் துஷ்பிரயோகம் இல்லையா?
இந்தப் படம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்;
சன் பிக்சர்ஸ் தயாரிப்பைப் பாராட்டிக் கொள்வது என்னையே நான் பாராட்டிக் கொள்வதற்குச் சமம் எனக் கருத்துத் தெரிவித்தவர்தானே முன்னாள் முதல்வர்.
தயாநிதி அழகிரியின் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட"வ குவாட்டர் கட்டிங்' என்ற தலைப்புக்குத் தமிழ்ப் பெயர் (!) என்ற அடிப்படையில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது யாருடைய ஆட்சியில் (Thuroki)என்பது முன்னாள் முதல்வருக்கு மறந்துவிட்டதா?
சாதாரண ஒரு தமிழ் ரசிகன் வன்முறையும் ஆபாசமும் இல்லாத திரைப்படத்தைப் பார்க்கக்கூடாது என்ற நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் என்பதை ஏன் முன்னாள் முதல்வர் மறைக்க முயல்கிறார்.
வரிவிலக்கு என்ற ஒற்றை வார்த்தையால் ஆபாசமும் வன்முறையும் இல்லாத திரைப்படங்களின் வருகை அதிகரிக்குமே என்ற எண்ணம் ஏன் அவருக்குள் உதிக்காமல் போய்விட்டது
.???????
                                                                                      
தனது குடும்ப உறுப்பினர்கள் தயாரிக்கும் படத்தில் வன்முறையும் ஆபாசமும் தவிர, வேறு ஏதும் இருக்காது (குறிப்பாக கதை இருக்காது) என்பதாலும் ஏழ்மையில் (?) இருக்கும் தனது குடும்பத் தயாரிப்பாளர்கள் வரிவிலக்குக் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள் (?) என்பதாலும் முன்னாள் முதல்வருக்கு இந்த அக்கறை வந்துவிட்டதா? 
என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
தனக்கு நெருக்கமானவர்கள் யாரும் திரைப்படத்துறையை ஆட்டிப்படைப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் முதல்வர் அனுமதிக்கமாட்டார் என்பது திரைப்படத்துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். எனவே, முன்னாள் முதல்வர் அஞ்சுவதுபோல எதுவும் இனி நடக்காது என்பது ஊரறிந்த இரகசியம்.
தமிழர்களிடமிருந்து எதை வேண்டுமானாலும் பிரித்துவிடலாம். ஆனால், திரைப்படத்தைப் பிரிப்பது கடினமே! 
உழைப்பை மட்டுமே நம்பி வந்தவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்வதிலும் அதிக இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கோடிகளுடன் வந்தவர்களைத் தெருக்கோடிக்கு அனுப்பியதிலும் இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு முக்கிய பங்குண்டு. நல்ல திரைப்படங்கள் வராமல் இருப்பதற்கு முன்னணி நடிகர்களும் ஒரு காரணம் என்றே கூற வேண்டும்.குறிப்பாக ரசிகர்கள் மனதில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதற்காக வன்முறை நிறைந்த ஆக்ஷன் திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து அதில் பஞ்ச் வசனங்களைப் பேசி நடிப்போம் எனப் பிடிவாதமாக இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும்.
ஆபாசமும் வன்முறையும் உள்ள திரைப்படங்களில் நடிக்கமாட்டோம் என நடிகர்களும், இயக்கமாட்டோம் என இயக்குநர்களும் முன்வர வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் விருப்பம்.

இவை நடந்தால் மட்டுமே நல்ல திரைப்படங்கள் வருவதோடு, தமிழக ரசிகர்களை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களும் போட்ட பணத்தை எப்படியாவது வசூல் செய்துவிடலாம் என எண்ணும் விநியோகஸ்தர்களுக்கும் விடிவுகாலம் பிறக்க வாய்ப்புள்ளது.

2 கருத்துக்கள்:

Anonymous,  6 September 2011 at 22:58  

mm
உழைப்பை மட்டுமே நம்பி வந்தவர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்வதிலும் அதிக இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கோடிகளுடன் வந்தவர்களைத் தெருக்கோடிக்கு அனுப்பியதிலும் இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு முக்கிய பங்குண்டு.
i accept Mr.Rajanikanth one of the example

karan 6 September 2011 at 23:03  

சாதாரண ஒரு தமிழ் ரசிகன் வன்முறையும் ஆபாசமும் இல்லாத திரைப்படத்தைப் பார்க்கக்கூடாது
y?
தமிழர்களிடமிருந்து எதை வேண்டுமானாலும் பிரித்துவிடலாம். ஆனால், திரைப்படத்தைப் பிரிப்பது கடினமே!

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP