அன்னையர் தினம் தமிழன் கொண்டாடுவது பொருத்தமா...???




"தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்கு நீ தனித்தனியாய் கோவில் குளம் அலைவதுவும் எதற்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிசேக்கம் நடத்து "
மறக்க முடியாத வாலியின் வரிகள் 
அன்னையர்  தினம் கொண்டாடபடுவது என்பது விரும்பியோ விரும்பாமலோ பலவிடயங்களை சிந்திக்க வைக்கின்றது அந்த வகையில் 
1.உண்மையான அன்புக்கும் காதலுக்கும் காதலர்தினம் தேவை இல்லை அது போல உண்மையான புனிதமான தாய்மைக்கு அன்னையர் தினம் தேவையா?
ஒருநாளில் மட்டும்  தாயை கொண்டாடினால் போதுமா?

2.வெள்ளைகாரன் அன்னையர் தினம் வைத்ததற்கு காரணம் இருக்கின்றது  காரணம் அவனது குடும்ப அமைப்பு சமூக நடைமுறைகள் அப்படி சில வெள்ளைக்காரருக்கு அவர்களுடைய உண்மையான தாயை அறிவது கூட கடினம் ஆக அவர்கள் அன்னையர் தினம் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது 
3.தமிழனின் வரலாற்றில் தாய் என்பது தெய்வத்தை விடவும் பெரியது அல்லது தாய் என்பது தெய்வம்
புறநானூற்று தாய்போல இறந்த பிள்ளையை  வாளால் கீறி புதைத்த வீர தாய்கள் நிறைந்த இனம்
இவ்வாறு தாய்,மாதா,அம்மா  என்று போற்றி வாழ்ந்த சாதி தாயின் சொல்லை வேத வாக்காக கொண்டு வாழும் நமக்கு ஒரு நாள் மட்டும் தாயின் புகழ்பாடுவது என்பது ஏற்று கொள்ளகூடியது இல்லை

4.இங்கு நான் ஒருவிடயத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன் 
நான் பலதடவை சுழிபுரத்தில் உள்ள சிவபூமி முதியவர் இல்லம் சென்று இருக்கின்றேன் அங்கு இருப்பவர்களில் 90வீதம் பிள்ளைகள் உள்ள தாய் தந்தைமார் அதைவிட அவர்களிடத்தில் கதைக்கும் பொது அறிந்த விடயம் அவர்களது பிள்ளைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் பதவிகளில் உள்ளனர் அவர்கள் தங்களை பார்ப்பது இல்லை இல்லாவிடின் தங்களை ஒரு சுமையாக கருது கின்றனர் 
இவ்வாறு சிலவிடயங்கள் நடக்கும் போது எனக்கும் தோன்றுவது வாழ்கை ஒரு நாடகம் இதில் எங்கு பாசம் காசு தான் எல்லாம் 
ஆனாலும் தற்காலத்தில் தமிழ் சமூகத்தில் நடக்கும் சமூக பாலியல் சீர்கேடுகளும் தாய்ப்பால் கொடுத்தால் உடல் (மார்பு )அழகு கெடும் என்று அன்பையும் பாசத்தையும் கொடுக்க மறக்கும் தமிழ் தாய்மார்களும் ,தாய்தந்தைமாரை அலைய விட்டும் முதியோர் இல்லங்களில் விட்டும்  சுகம் காணும் மக்கள்(பிள்ளைகள் ) உள்ளபோது அவர்கள் ஆடி அமாவாசையில் விதரம் பிடிக்காவிட்டாலும் ஒரு நாள் ஆவது அன்னையர்  தினம் வருவதால் அன்று ஆவது தாய்தந்தைமாரை நினைத்து கொண்டால் சந்தோசம்

அன்பான தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 
நீண்டகாலத்துக்கு பின் மீண்டும் ஒரு பதிவு எழுத்துகின்றேன் 
அன்னையர் தினம் தொடர்பான எனது மனகுமுறல் இந்த பதிவு பிடித்து இருந்தால் முகப்பு புத்தகத்தில் பகிரவும் (share on facebook)


எனது தாய் உட்பட அனைத்து தாய் உள்ளங்களுக்கும் இனிய அன்னையர் தினவாழ்த்துக்கள்  

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP