இது உண்மையில காதலா காமமா....???காதலர்தின ஸ்பெஷல்

இந்த இழவு விழுந்த காதலர் தினம் ( வேலண்டைன்ஸ் டே ) இண்டைக்கு  எண்டு எனக்கு யாரோ ஒருத்தன் வாழ்த்தி அனுப்பி இருக்கிறான் இதை பார்த்த உடன இந்த பதிவை எழுதணும் எண்டு ஆசை பட்டன் கொஞ்சம் படிச்சு பாருங்க புடிச்சா உங்க கருத்தை சொல்லுங்க 


இந்த காதல் பல விதம் பாருங்கோ  
உண்மை காதல் 
இலக்கிய காதல் 
கள்ளகாதல் 
நண்பர்களுக்குள்காதல் 
வயது கூடிய காதல்  ,நாய் காதல் , நரி காதல்  .........
இதுக்குள்ள நல்ல காதலை எங்க தேடி புடிக்கிது எண்டது தான் தெரியல ....???

உண்மையாக காதலிப்பவனுக்கு காதலர்தினம் தேவையா..???
சும்மா நான் எப்பிடி கேட்டல் சொல்லுவாங்க மாப்ளை எங்கயோ செமையா வாங்கி கட்டிட்டன் போல எண்டு 
யாரும்  என்னை  இந்த (உண்மையாக காதலிப்பவனுக்கு காதலர்தினம் தேவையா..?)கேள்விய கேட்டஉடன நான் சொல்லுற பதில் 
இல்லை
 காதல் அன்பு பாசம் இரண்டினதும் பரிமாற்றம் அதனை கொண்டாட முடியாது அனுபவிக்க வேண்டும் இது தான் உண்மையான பதில் 
(பிழை எண்டா சொல்லுங்க மாத்தி கொள்ளுறன் Heeeeee.......??)
உண்மையாக எப்பிடி இந்த காதலர் தினம் வந்தது...??
வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270
கலியாணம் செய்து வைத்தவன் இறந்த தினமா காதலர் தினம் என்ன கொடுமை சரவணா அப்பிடி எண்டா எங்கட ஐயர்மார் சாகிறதினமும் குட்டிகாதலர் தினம் ( வேலண்டைன்ஸ் டே ) போல 
இந்த உலகத்தில எல்லா இடமும் காதலர் தினம் எண்டா கொண்டாடம் வாங்கி குடுக்குறவன் பாடுதான் திண்டாடம் ஏன் எண்டால் அடுத்த வருடம் யாரோட காதலன்/காதலி காதலர் தினம் கொண்டாட போறாங்க  எண்ட  க்கம்  சொன்னால் புரியாது மச்சான் 
(அனுபவம் சிறந்த நண்பன் -----நண்பேண்டா...........Heeeee........முடியல )
காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? 
காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு.
 உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !

அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள்
மச்சான் அல்வாதான் கடைசில 

இப்பிடியும் நடக்குமா 
 காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.              (Same feeling)




உண்மையான அன்பு பாசம் உள்ள காதலுக்கு காதலர் தினம் இல்லை என்ன எந்த வெகுமதியும் ஈடாகாது 
ஆனால் அப்பிடி பட்ட காதல் இந்த உலகத்தில் இல்லை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை 
இந்த காலத்தில் காதலர் தினம் என்பது பலர் (காதலன்/காதலி )தங்களது உடல் சூட்டை தணிக்கும் அல்லது அதற்கு களம் அமைக்கும் ஒரு தினமாகவும்காதலர் தினம் ( வேலண்டைன்ஸ் டே )உள்ளது என்பது கவலையான விடயம் 
ஆக காதல் என்பது காதலிக்கும் போது தெரிவது இல்லை முடிவில் தான் தெரியும் 
உண்மை காதல் இனியும் உலகத்தில் மலர்ந்தால் சந்தோசம் 


காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா?
கற்பை மட்டும் கரன்சி நோட்டில் கறப்பவன் மனிதனா?
தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும் 
துடிப்பவன் எவனடா ?அவன்தான் மனிதன் 


<<முடிந்தால் இந்த பதிவையும் வாசிங்கள் >>
எப்படி உலகம் எங்கும்காதலர் தினம் -- வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள் 

அன்பிற்கினிய உறவுகளே! உங்கள் ejaffna.blogspot.com தற்போது ejaffna.net   ஆனது ஆக மற்றம் கண்டு உள்ளது
உங்களின் மேலான கருத்துகளையும் ஆசிகளையும் கூறுங்கள்
வெகு விரைவில் அதிரடி மாற்றங்களுடன் ejaffna.net பயணிக்கும் 

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP