யாழ்ப்பாணக் குடாநாடு
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப்பகுதி மூலம் தெற்கேயுள்ள தாய் நிலமான வன்னிப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்குக் கரையோரத்திலும் ஓர் ஒடுக்கமான நில இணைப்பு உண்டு. மேலும், யாழ்ப்பாணக் குடாநாடு, உப்பாறு கடல்நீரேரி, தொண்டமானாறு கடல்நீரேரி என்பவற்றால் கிட்டத்தட்ட மூன்று தீவுகளாகப் பிரிக்கப்பட்டது போல் தோற்றமளிக்கிறது. இந்த இயற்கைப்பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, யாழ் குடாநாடு, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி என மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
மக்கட்பரம்பலைப் பொறுத்தவரை யாழ் குடாநாடு மிகவும், மக்கள் அடர்த்தி கூடிய ஒரு பகுதியாகும். 1981 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வட மாகாணத்தின் 11.6% நிலப்பரப்பைக் கொண்ட குடாநாட்டில் 66.59% மக்கள் வாழும் அதேவேளை, 88.4% மிகுதிப் பகுதியில், 33.41% மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்
0 கருத்துக்கள்:
Post a Comment