சித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --
சித்தர்கள் உண்மையானவர்களா..??-மர்ம தகவல்கள்-
சொந்தங்கள் உறவுகள் எப்பிடி சுகம் ?
நீண்ட காலத்தின் பின் மீண்டும் உங்களை சந்திக்கின்றன்
"பிந்திய புதுவருட வாழ்த்தும் முந்திய தைப்பொங்கல் வாழ்த்தும்"
ரைமிங் நமக்கும் வொர்க் அவுட்(work out) ஆகுது போல he he... :-p
vijay tv,sun tvசித்தர்கள் பற்றி ஒளிபரப்பிய நிஜம் நிகழ்ச்சியின் பாதிப்பு என்னை இந்த பதிவை எழுத தூண்டியது இந்த பதிவுக்காக பலவிடயங்களை பலகாலமாக குறித்து வைத்தும் இணையத்தில் பெற்ற தகவல்களையும் இணைத்து உள்ளன்
" ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பழிந்தார்களே "
என்று வாழ்வின் அநித்யத்தை வெடுக்கென்று சொன்ன திருமூலர்
காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள்.இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது
சித்தர்கள் யார்?"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி/சக்தி பெற்றவர் என்று பொருள்.
சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, மனித சக்திக்கு அப்பார்பட்டு செயற்கரிய காரியங்களை செய்வது இச் செயலை "சித்து விளையாட்டு" என்று கூறுவர்.
பொதுவாக சித்தர்கள் உணவு, உடை, உறையுள் என்பன பற்றிக் கவலைப் படாதவர்கள். இவர்கள் பற்றற்றவர்கள். யார் பேச்சையும் செவிமடுக்காதவர்கள், யாருடனும் பேசாதவர்கள். ஞானம், இரசவாதம், சமாதி நிலை கைகூடியவர்களிடம் உறவு கொண்டு இருப்பவர்கள். சித்தர்களின் செயல்களில் முதன்மையானது சமாதியில் இருத்தல் ஆகும். உண்ணாமல், உறங்காமல், இடம் பெயராமல், வெய்யில், மழை, பகல் இரவு பாராமல் இருப்பதே சமாதிநிலை. அவ்வாறு சமாதியில் இருந்து தாம் பெற்ற ஞானத்தை, பட்டறிவை மக்களுக்கு எடுத்துரைப்பவர்கள் சித்தர்கள்.
My Note:-
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை
சித்தர்களின் கொள்கை
கடவுள் எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் கடவுள் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி
சித்தர்கள் யோகசமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
சித்த வைத்தியம்
சித்தவைத்திய முறைகாலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர்.
இரசவாதம்
சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.
இன்றைய அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ(உலோகம் ) பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி சித்தர்கள் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று
பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் போகர் என்ற சித்தரே.
சில சித்து விளையாட்டுகள்
*நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது,
*ஆணைப் பெண் வடிவிலும் பெண்ணை ஆண்வடிவிலும் தோன்றச் செய்வது
*மலடியைப் பிள்ளைபெறச் செய்தல்
*அங்கவீனர்களுடைய குறைகளைப் பலரும் காணும்போதே உடனே தீர்த்து அவர்களைச் சீர்படுத்துவது
*நாலு லோகத்தையும் பொன்னாக மாற்றுவது
*விண்ணில் தாவிச் சென்று மேகத்தைப் பிடித்து, இடி தோன்றச்செய்து, அந்த மேகத்திலிருந்து குடிநீரைப் பிழிந்தெடுத்து பார்ப்பவர்களெல்லாம் அதிசயம்போல் காட்டுவது
பதினெண் தமிழ்ச் சித்தர்கள்
1 திருமூலர்
2 இராமதேவர்
3 கும்பமுனி
4 இடைக்காடர்
5 தன்வந்திரி
6 வால்மீகி
7 கமலமுனி
8 போக நாதர்/
9 மச்ச முனி
10 கொய்கணர்
11 பதஞ்சலி
12 நந்தி தேவர்
13 போதகுரு
14 பாம்பாட்டி
15 சட்டைமுனி
16 சுந்தரானந்த தேவர்
17 குதம்பைச் சித்தர்
18 கோரக்கர்
போகர் ஜப்பான் மற்றும் சீனாவிற்குச் சென்று அங்குள்ள மக்கள் இறைவன்பால் மனத்தை ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு.
இவர் தான் ஏழாம் அறிவு படத்தில் வரும் போதிதர்மர் என்பதற்கு நிறைய ஆதாரம் உண்டு
ஜப்பானில்உள்ள முருகன் கோவிலை பற்றி அறிய முடிந்தது, ஆனால் அது "முருகன் அல்ல போகர்" என்றும். அவர் பழனியில் மூலவர் சிலை தயார்செய்து கொண்டு இருந்த காலத்தில், தன் சீடரின் ஒரு செய்கையினால் அவர் மீது கோவப்பட்டு காற்றில் நடந்து ஜப்பான் சென்று, அங்கு ஒரு பெண்ணிடம் வயப்பட்டு குடும்பம் நடத்தியதாகவும், அந்த வழி வந்தவர்கள் தான் ஜப்பானில் இன்றும் "போகர் கொண்டையுடன்"இருப்பதாகவும் அறிந்தேன்.
---எனது இந்த தேடலுக்கு துணையாக இருந்தவர் இலங்கை முன்னணி வலைபதிவாளரும் வைத்தியருமான Dr.முருகானந்தன்
எனது ஈழ தமிழன் என்ன வியாபார பண்டமா.....?? பதிவிற்கு அவர் வழங்கிய பின்னூடத்தில் இது பற்றி கூறியிருந்தார் ----
பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழர்கள் மட்டும் தான் சித்தர்களா...??
பதினென் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ளது. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே.
எங்கள் இலங்கை இலும் சித்தர்கள் வாழ்ந்து உள்ளார்கள்
யோகர்சுவாமி
செல்லப்பா சுவாமி
குடை சுவாமி
இந்த இலங்கை சித்தர்கள்(14சித்தர்கள்) தொடர்பான ஒரு புத்தகம் பார்க்க முடிந்தது நம்மவர்களும் குறைந்தவர்கள் இல்ல
http://ta.wikipedia.org,
http://siththarkal.blogspot.com,
http://singakkutti.blogspot.com வலைபதிவில் இருந்து பெற்ற தகவல்களை கொண்டும் எனக்கு சித்தர்கள் பற்றி இருக்கும் அறிவை கொண்டும் இந்த பதிவை தந்து உள்ளன் உங்கள் மேலான கருத்துகளை சொல்லுங்கள்
விரைவில் அடுத்த பதிவில்இரும்பைப் பொன்னாக்கும் -ரசவாதம்- எவ்வாறு......??
7 கருத்துக்கள்:
super machan nice job keep it up
THALAIPAI SARI PARKAVUM
nyc da
இது ஒரு கிராமத்து இணையம் http://www.siruppiddy.net/
உங்கள் பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.
vaiyakam undu vazhv
aarku
இன்றைய அறிவியல் முறையிலோ அல்லது பழங்கால இரசவாத முறையிலோ ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்ற முடியும். நான் மாற்றி காட்டுவேன் என சொல்பவர் உண்டா? நாம் புத்தகங்களில் படித்ததை மட்டும் வைத்து அது உண்மை என்று எப்படி நம்ப முடியும். தவறாக எண்ண வேண்டாம் எனக்கு எழுந்த சந்தேகத்தை கேட்டேன்.
Post a Comment