உதயதாரகை
உதயதாரகையின் முதலாவது பத்திரிகையில் அப்பத்திரிகை குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கின்றது.
உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சாத்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மார்க்கம் முதலானவை பற்றியும், பிரதான புதினச் சங்கதிகள் பற்றியும் அச்சடிக்கப்படும்.அது தமிழப்பாஷையிலும், இடைக்கிடையே தமிழும் இங்கிலீசும் கூடினதாயும், எட்டுப்புறமுள்ளதாக நான்காய் மடித்ததாள் அளவில் ஒவ்வொரு மாதத்து முதலாம் மூன்றாம் வியாழக்கிழமைகளிற் பிரசித்தம் பண்ணப்படும்.இதின் விலை, பத்திரம் ஒன்றுக்கு 2 பென்சு அல்லது 16 வெள்ளைச் சல்லி.இதிற் பத்துப் பத்திரிகைக்குக் கையெழுத்து வைத்து மாதாந்தம் பணம் முன்னேறக்கொடுத்து வைத்து, மறு பெயருக்கு செலவிடக்கூடிய காரியகாரருக்கு இதின் விலை பத்திரம் ஒன்றுக்கு 11/2 பென்சு அல்லது கட்டணம் இருபதுக்குக் கையெழுத்து வைத்து வருஷாந்தம் முன்னேறக் கொடுத்து வைக்குங் காரியகாரருக்கு இதன்விலை பத்திரம் ஒன்றுக்கு 1 பென்சு அல்லது 8 வெள்ளைச் சல்லி. அறிக்கைப் பத்திரங்கள் வழக்கமான வீதம் அச்சடிப்பிக்கலாம். இந்தப் பத்திரத்துக்குக் காரியக்காரராய் இருக்க விரும்புகிறவர்கள் மானிப்பாயிலுள்ள அமரிக்கன் மிசியோன் அச்சுக்கூடத்திலுள்ள பிரசித்தக்காரனிடத்தில் எழுதிக் கேட்டுக்கொள்ளவும்.காகிதம் எழுதிக்கொள்பவர்கள் தாங்கள் அறிவிக்க வேண்டியவைகளை உதயதாரகைப் பத்திரத்தினது முகாமைக்காரருக்கு எழுதிக்கொள்ளவும்.இந்தப்பத்திரங்களை யாழ்ப்பாணத்திலும் மதுரையிலுமுள்ள மிசியோனிடங்களிலே வாங்கலாம்
0 கருத்துக்கள்:
Post a Comment