வைரமுத்துவின் மறுபக்கமும்
கவி உலகமே இன்று ஒருவரின் வார்த்தைகளுக்குள் கட்டுப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்புடையவர் வைரமுத்துத் தான்.காரணம் அந்தளவு வார்த்தை ஜாலங்களுக்குச் சொந்தக்காரர் தான் இந்த வைரமுத்து.
அவர் பிரபலம் என்ற காரணமோ தெரியல அல்லது அவர் குண இயல்பு அப்படியோ தெரியல அவர் மீது அடிக்கடி குற்றச் சாட்டுகள் எழுந்த வண்ணமே இருக்கிறது.
கடந்த வாரம் நடந்த சம்பவம் உண்மையா ? அல்லது ஊடகங்களின் மிகைப்படுத்தலா எனத் தெரியவில்லை.
அரும்பு மீசை குறும்பு பார்வை திரைப்படத்தில் வைரமுத்துவும், கார்த்திக் நேத்தா என்ற புது கவிஞரும் பாடல் எழுதியிருந்தார்கள். பாடல் வெளியிட்ட விழா நடைபெறு் வேளையில் வைரமுத்து தனது புத்தக வெளியீடு ஒன்றுக்காக மதுரை செல்ல வேண்டிய சூழ் நிலை வந்து விட்டதால் பாடல் வெளியிட்டு விழாவிற்கு வர முடியல அனால் தனக்காக இன்னொருவரை மேடையேறுவதை அவர் அனுமதிக்கவில்லையாம். அது மட்டுமல்ல பாடல் இறுவட்டு அட்டையில் கார்த்திக் நேத்தாவின் பெயரையும் இட வேண்டாம் என்றாராம் இதற்கு என்ன காரணம் என எனக்கு விளக்குங்களேன்
கார்த்திக் நேத்தாவின் வரிகள்
புத்த மரம்
அரச மரம் மட்டுமே போதி மரம்
புத்தனாக இருந்தால்.
எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.
புத்தனாக இருந்தால்.
எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.
மரணம்
நீந்திக் கொண்டிருப்பவை
மீன்கள் என்று
பூனைக்குத் தெரிவதில்லை
நீந்துபவை மீன்கள் இல்லை என்றும்
அது நம்பிவருகிறது .
உண்மையில்
பூனைகளுக்கு பிடித்துப் போனது
மீன் இல்லை
மரணம் .
மீன்கள் என்று
பூனைக்குத் தெரிவதில்லை
நீந்துபவை மீன்கள் இல்லை என்றும்
அது நம்பிவருகிறது .
உண்மையில்
பூனைகளுக்கு பிடித்துப் போனது
மீன் இல்லை
மரணம் .
ஒரு முறை யுகபாரதி வழங்கியிருந்த பேட்டியிலும் குறிப்பிட்டிருந்தார். கணையாழியில் அவர் வேலை செய்யும் போது ஒரு பத்திரிகை சம்பந்தமாக சந்தித்த போது இலக்கிய விவாதங்களில் இருவரும் வாதிட்டுக் கொண்டார்கள் அப்புறம் எல்லாம் முடிந்து பத்திரிகையாளர் எல்லோரும் போன பிறகு தான் அவரை கூப்பிட்டு பாராட்டினாராம். அவர் தன்னை அத்தனை பேர் முன்னாடியும் ஏன் பாராட்டல என கூறியிருந்தார்.
2008 ம் ஆண்டு இடம் பெற்ற மகனின் திருமண நிகழ்வில் எந்தவொரு இளம் கவிஞருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை அதை விட முக்கியம் சினேகன் போன்றவர்கள் இவருடைய உதவியாக இருந்தவர்கள் அப்படியானால் இவர்களுக்கிடையே என்ன பிரச்சனை ?
ஒரு படத்திற்கான முழு பாடலையும் ஒரு கவிஞர் தான் எழுதணும் என்று விதியில்லாத தருணங்களில் கூட இவர் முழு பாடலும் தனக்குத் தான் வேண்டுமென்று கேட்பதில் நியாயமிருக்கிறதா (அது படக்காரர் சார்ந்த விடயமாகவே இருக்கட்டும் 5 ல் ஒரு பாடலை இளையவருக்கு விட்டுக் கொடுத்தால் என்னவாம்)
இத்தனைக்கும் இவரது இத்தனை செயற்பாட்டையும் கார்க்கி மேலயும் காட்டுவாரா ?
எனக்கும் அவருக்குமிடையிலும் கூட பல நாட்களாக குழப்பம் இருந்து கொண்டு தான் இருக்கிறது ஒரு வார்த்தை என்னை காயப்படுத்தும் மறு கணம் ஒரு வார்த்தை அக்காயத்திற்கு மருந்திடும். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவனில் அவர் எழுதியிரந்தாரே “புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக் கறி பொரிப்பதுவோ“ என்ற வரி நினைவிருக்கும் என நினைக்கிறேன் அந்த வரி என்னை பலமாக தாக்கிய வரிகளில் ஒன்று காரணம் அவர் என்ன காரணத்துக்காக எழுதியிருப்பார்
திரைக் காட்சிக்காகவா (அப்படியானால் மற்ற வரிகள் அப்படியில்லையே)
புரட்சிக்காக எழுதினாரா (அப்படியானால் அவர் மகனும் எலிக் கறியா பொரிக்கிறார்)
இப்படியெல்லாம் சிந்திக்கும் மறுகணம் அடுத்த பாடல் மனதை வருடி விடும் இது தொடர்கதையாகவே இருக்கிறது. அவர் கவிஞர் என்ற கோணத்தில் மட்டும் என்னால் பார்க்கப்படுவதால் பெரியளவு தாக்கம் எற்படவில்லை அதே இடத்தில் அவருக்கு பின்னர் நல்ல கவிஞர்கள் எமக்குத் தேவையில்லையா அல்லது அவர்களும் மழுங்கடிக்கப்படப் போகிறார்களா இதற்கு பதில் சொல்லவேண்டியது யார் ?
எப்போதும் இதற்கு எதிர்மாறாகவே பதிவுலகம் இருக்கிறது காரணம் ஒரு சிலரை தவிர மற்றைய எல்லா பதிவர்களும் புதியவர் ஒருவரைக் காண்டால் ஆர்வத்தோடு ஓடிச் சென்று வரவேற்கிறார்கள் அதிலும் எடுகோளாக எடுத்துக் கொண்டால் வலைச்சரம், தீராத பக்கங்கள் மாதவராஜ், பதிவர் ஜனா போன்றோர் முக்கியப்படுத்தப்பட வேண்டியவர்கள் இது சின்ன உதாரணமே இதன் மூலம் பல பதிவர்கள் வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.
நான் குறுகிய காலத்திற்குள் கொஞ்சமாவது முன்னுக்கு வந்ததற்கு இவர்களும் காரணமாகும் அத்துடன் சீபி செந்தில்குமார், மாத்தியோசி ரஜீவன், நல்ல நேரம் சதீஸ்குமார், நாஞ்சில் மனோ போன்றோருடன் இந்தப் பட்டியல் நீண்டே செல்கிறது இது திரையுலகில் எந்தளவு சாத்தியப்படுத்தப்படுகிறது என யாராவது விளக்கிச் செல்லுங்கள்.
குறிப்பு - என்னை வைரமுத்துவிற்கு எதிரானவன் என்று யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம் சந்தேகங்களை மனதில் வைப்பதை விட போட்டுடைப்பது நல்லதல்லவா ? ஒரு சிலர் மனதில் வைத்திருக்கும் சந்தேகங்களால் தான் பல விரிசலே இப்போதும் இருக்கிறது... தன் மகனை ஒழித்து வைத்துக் கொண்டு ஊரான் பிள்ளையை உனக்கு வெட்கமில்லையா ? ரோசமில்லையா ? என போருக்கழைத்த கவிஞரின் புத்தகங்களையே விரும்பிப் படிக்கும் எனக்கு வைரமுத்துவிடம் வெறுப்பதற்கு என்ன இருக்கப் போகிறது.
THANKS:- MATHISUTHA
0 கருத்துக்கள்:
Post a Comment