செகராசசேகரம்
மணிதங்கு வரையு ளாதி
மன்னுயிர் படைத்த போது
பிணிதங்கு வகையு நோயின்
பேருடன் குணமுங் காட்டி
அணிதங்கு மருந்துங் காட்டு
மாயிரு வேதந் தன்னைக்
கணிதங்கு வகையால் வேதங்
கடந்தமா முனிவன் செய்தான்.
செய்தவர் தனது நூலும்
தேர்ந்தோர் தெரிப்பும் பார்க்கிற்
பொய்தவம் பயர்ந்த பௌவம்
போலுமிங் கிதனை யாய்ந்து
வெய்தவ நோய்கள் தீர்
விருத்தவந் தாதி யாகக்
கொய்தவ வொழுங்கி லேதான்
கோப்புற செப்ப லுற்றாம்.
செயம்பெறு சிங்கை நாடன் செகராச சேக ரன்றான்
செகராச சேகர னெனும்
சிங்கையா ரியனையெதி ரொண்ணார்க ளென்னவே
திசைகெட் டகன்று விடுமே
செகராசசேகரமாலை
கந்தமலை யாரியர்கோன் செகராச சேகரமன்
கங்கை நாடன்
தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ
திடமதனைத் தலத்தின் மீது
மின்குலவு தென்கலையாற் றருகவென
வருள்புரிய விருத்தப் பாவாற்
பொன்குலவு செகராச சேகரமா
லையச்செய்தான் போருந்து மேன்மைத்
தொன்குலவு மிராசவிரா மேசனருள்
சோமனெனுஞ் சுருதி யோனே.
சீரியவேற் பரநிருப ரிறைஞ்சும் பொற்றாட்
செகராச சேகரமன் சிங்கை தங்கு
மாரியர்கோ னெனக்குடைக்கீ ழவனி யெல்லா
மடக்கியொரு கோலோச்சி யளிக்கு மாதே
சேவணி துவசன் சிங்கையெங் கோமான்
செயசெக ராசசே சரமன்
சேது காவலன் விஞ்ஞை விஞ்சுசெக
ராச சேகரன்
மன்னர் மன்னுசெக ராச சேகரமன்
மணவை யாரியவ ரோதயன்
பன்னு செந்தமிழ்வ ளம்பெ றற்குதவு
பரிசில்…………………..
வையமன்று காத்தியா யனசூத் ரத்து
மன்னியகா சிபகோத்ர மருவு கேண்மைச்
செய்யசதுர் மறைவாய்மைக் காசி வந்த
செகராச சேகரனா மன்ன னாதி
துய்யபுகழ்ப் பூசுரமன் னவரை…
பரராசசேகரம்
தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த
தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப்
பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்
சீரணியுந் திருமாலு மயனுங் காணாச்
சிவபெருமா னளித்தருளு மொருவெண் கோட்டுக்
காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்
கடவுளிரு பதபுயங்கள் கருத்துள் வைப்பாம்.
பாரின் மேவுதிற லரச னானபர
ராச சேகரனை யண்டினோர்
சீரின் மேவிவளர் செல்வ மல்கவவ
ரின்மை தீருமது செய்கைபோல்
பார்மேவு மரசர்குல திலக மான
பரராச சேகரன்மால் பருதி யேந்தி
ஏர்மேவு முலகுபுரந் தருளி நாளி
லிசைத்தனனைங் கரத்தரியை யிறைஞ்ச லுற்றே.
பார்த்திவர்க ளேனுநோய் தொலைக்கு மீதே
பரராச சேகரன்மன் பணித்த செங்கோல்
காத்தபுவி யோர்களிரு ணீக்கு மாபோற்
கண்ணிலிரு ணீக்குமிது திண்ணந் தானே
திருக்கரைசைப் புராணம்
மன்றதனி லகலா தென்றும்
விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித்
தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட
எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே
தென்கலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ஙன் சாராநின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங னீயு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென
வுவனறிய வுரைத்திட் டாரால்
சூதமுனி யருளிச் செய்த
மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத்
தென்கலையின் விருத்தப் பாவாற்
றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி
ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை
பழமையும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை 18.01.1915 இல் உருவாக்கப்பட்டது. இதற்கு இந்து மகாசபை முக்கிய பங்கு வகித்தது எனலாம். இது ஆரம்பத்தில் இந்துக் கல்லூரி தமிழ் வித்தியாசாலை என்ற பெயரில் ஆண் பிள்ளைகளுக்கென ஆரம்பிக்கப்பட்ட தொன்றாகும்.
05.03.1927 இது தமிழ்க் கலவன் பாடசாலையாக இயங்கத் தொடங்கியது. 1928 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்துக் கல்லூரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இதன் தொடக்க நிலை வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் ஒரு சரரார் இந்துக் கல்லூரியின் வரலாற்றோடு இணைந்த தொடர்புடையது என்கிறார்கள்.
யாழ்ப்பாண நூல் நிலையம்
பொதுமக்கள் நூல்நிலையம்' என்னும் பெயரோடு முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் இன்று நிலைத்திருந்தால், அதற்கு வயது 140 ஆகும். அது 1842 ஆம் ஆண்டில் பெரிய நீதிமன்றக் காரியதரசியாயிருந்த எஃப். கிறினியர் என்னும் பெரியாரால்
யாழ்ப்பாணப் பண்பாடு - மறந்தவையும் மறைந்தவையும்

யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் என்பதை நோக்குவதற்கு முன்னர் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகும். பண்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மேலைப்புல அறிஞர்கள் 160க்கும் மேற்பட்ட வரையறைகளைத் தொகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் எமக்குப் பொருத்தமான சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட
யாழ்ப்பாணம் என்ற பெயர்

யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடியும்.சோழ நாட்டில் இருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் தென
காலப்போக்கில் குடாநாடு முழுவதற்கும் அப்பெயர் வழங்கப்பட்டது
யாழ்ப்பாணக் கோட்டை
இலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளும் பண்பாட்டு விழுமியங்களும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை இன்றும் பறைசாற்றுகின்றன.
ஊர்காவற்றுறை கோட்டை, காங்கேசன்துறைக் கோட்டை, வெற்நிலைக்கேணி கோட்டை என்பன கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இயக்கச்சி கோட்டை, ஆனையிறவுக்கோட்டை, பூநகரிக்கோட்டை என்பன பாதைக்கடவைகளில் அமைக்கப்பட்ட கோட்டைகளாகும். இத்தகைய நிலைய முக்கியத்துவத்தினால் கடலிருந்தும் தரையிலிருந்தும் வரும் எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிப்பது எளிதாகவிருந்தது.
யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது யாழ்ப்பாணக் கோட்டையாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் கரையோரத்தில் தன் கம்பீரமான வடிவத்தை இழந்து சிதிலமான நிலையில் இன்றும் கோட்டை காணப்படுகின்றது. யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கே பண்ணைக் கடற் கரையோரத்தில் கம்பீரமாகக் கோட்டை அமைந்திருந்தது. இக்கரையோரத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரால் மீளமைக்கப்பட்ட கோட்டையாகும்.
யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் மிக அற்புதமானதாகும். அதுமாத்திரமல்லாமல் கீழைத் தேசத்திலுள்ள கோட்டைகள் யாவற்றிலும் மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான கோட்டை என அனைத்துக் கட்டிடக்கலை விற்பன்னர்களாலும் விதத்துரைக்கப்பட்டதாகும்.
முதலில் சிறிய பண்டகசாலையாக இக்கோட்டை இருந்தது. பின்னர் போர்த்துக்கேயர் அப்பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கினர். ஒல்லாந்தர் இக்கோட்டையைப் புனரமைத்தனர். முதலில் ஐங்கோண வடிவில் உள்கோட்டையின் வடிவம் அமைக்கப்பட்டது. இதனை 1680 இல் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 1792 இல் நிறைவுற்றது.
யாழ்ப்பாணக்கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. உள்கோட்டையின் சுற்றளவு 6300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்கத்தளம் 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக்கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை. இக்கோட்டைகள் கடற்கரையோரங்கனில் அல்லது பாதைக் கடவைகளில் அமைந்திருந்தன.
யாழ்ப்பாணக்கோட்டைக்குள் கவனர் பங்களா, ராணி மாளிகை, சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் வைத்து கைதிகள் விசாரிக்கப்பட்டார்களாம். கோட்டை இரண்டு வாயில்களைக் கொண்டிருந்தது. ஒன்று `கடற்பாதை மற்றையது நிலப்பாதை. `கடற்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நில வழி தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறம் நிலப்பாதையாகும். கோட்டைக்குள் தென் கிழக்குப் பகுதியில் ஒரு சதுரங்கத் தேவாலயம் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடங்கள் எதனையும் காணமுடியாது.
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்ற சதியொன்று நடந்தது. நல்லூர் முதலியாராகவிருந்த பூதத்தம்பி என்பவன் இதில் பங்குபற்நினான் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் யாழ்ப்பாண நிர்வாக மையமாக யாழ் கோட்டை விளங்கியதால் அதை இராசவாசல் என சிறப்பாக அழைத்தார்கள்.