ஆஸ்திரேலிய பயணமும் சீரழிந்த குடும்பமும்--உண்மைபதிவு
நண்பர்கள் வணக்கம்
நீண்டகால இடைவெளிக்கு பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி
இன்றைய பதிவு
ஆஸ்திரேலிய பயணமும் சீரழிந்த குடும்பமும்

இந்த பதிவு உண்மையாக நடந்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருநாள் நான் வழமையாக பொருட்கள் வாங்கும் கடைக்காரர் மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டார் அதன் காரணம் மகன் நான்கு மாதம் கஷ்டப்பட்டு பின் ஒரு வழியாக ஆஸ்திரேலியா சென்று விட்டான் இன்று தங்களுடன் தொலைபேசி இல்
கதைத்தான் எனவும் அறிந்த போது நானும் மகிழ்வடைந்தேன் எனக்குள் நான் சொல்லி கொண்டது "என்ன என்றாலும் அந்த குடும்பம் நல்லாய் வரவேண்டும் நான்கு பிள்ளை களுடன் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து இன்று ஒரு சின்ன கடை நடாத்தி தன்மானத்துடன் வாழ்கின்றார்கள் அவர்களது மொத்த குடும்பமும் கடைக்கு ஆக உழைப்பதும் பாரட்ட படவேண்டியது தான் "
கடந்த மாதம் வழமை போல நான் கடைக்கு சென்ற போது அந்த கடை இல் அந்த ஆஸ்திரேலியா சென்ற மகன் அங்கு ஆனாலும் நான் சுதாகரித்து கொண்டு பொருட்டகள் வாங்கி கொண்டு அந்த கடை ஐயாவை தனிய அழைத்து "என்ன மகன் வந்திட்டானா என்று கேட்டபோது" தம்பி நீங்கள் அவனை கேளுங்கோ எல்லாம் சொல்லுவான் "அவன் குழம்பி இருக்கிறான் பத்து லட்சம் வரையில் துலைச்சு போட்டு வந்து நிக்கிறான் எப்பிடி கடன் கட்ட போறனோ தெரியல நீங்கள் எப்பிடி யாவது அவனை சமாதான படுத்தி முந்தின போல இருக்க செய்யுங்கோ உங்களுக்கு புண்ணியமாய் போகும்
நான் கண்ட உண்மை "எல்லா சொத்தையும் இழந்த பின்னும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒருவனை தாங்குவது நிச்சயம் தாய் தந்தை தான் "
அவனிடம் நான் "என்னடா ..? எப்ப வந்தது ? என்று கேட்க தலையை கீழ் போட்டவன் உயர்த்தாமல் மௌனம் காத்தான் நன் மீண்டும் "என்னடா ..? எப்ப வந்தது ? ஏன் பேசமாட்டான் என்கிறாய் என்ற போது குனிந்ததலை நிமிராமல் சொல்ல தொடங்கினான்
அண்ணா என்ன எண்டாலும் இந்த மண்ணில இருக்கிறது எண்டால் கட்டாயம் ஒரு தொழில் வேணும் அப்பிடி இல்லை எண்டால் யார் அண்ணா பொண்ணு தருவாங்கள் எப்பிடி அண்ணா யார் குடும்பத்தை பார்ப்பது
எந்த படிக்காதவன் எண்டாலும் வெளிநாடு எண்டால் உடன பொண்ணுங்கள் ok சொல்லுறாங்கள்
நான் இப்ப எவலத்தை (எவ்வளவு )தொலைத்து போட்டு நிக்கிறன் உங்களுக்கு தெரியுமா...??
சரி எப்படி உன் பயணம்
அண்ணா பதினைந்து நாள் சின்ன படகில 32பேர் போன நாங்கள் முதலில "நவ்ரூப் " தீவு ல விட்டாங்கள் பிறகு "கிரீஸ்மஸ்" தீவில விட்டாங்கள்
எங்களுக்கு போன உடன் சொன்னாங்கள் "நீங்கள் ஏன் இங்க வாறீங்கள் உங்கள் நாட்டில் எல்லாம் பிரைச்சினை இல்ல திரும்பி போங்கோ இல்ல எண்டால் வேற நாட்டுக்கு நாங்கள் உங்களை அனுப்புவம் அங்க நீங்கள் போனால் உங்கட நாட்டுக்கு(ஸ்ரீலங்கா) சாவிலும் போக முடியாது யாரையும் எடுக்க முடியாது காசு அனுப்ப முடியாது "
இப்பிடி சொன்னால் எப்பிடி இருக்கும் மூன்று மாதம் பொருத்து பொருத்து பார்த்தம் அங்க ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் தற்போது மேற்கொண்டிருப்பது தனது அரசியல் இருப்பைப் பலப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பவாத நடவடிக்கை” எங்களை வெளி ஏற்றுவதில் குறியாக இருப்பதால் என்ன செய்ய முடியும்
திரும்ப வந்திட்டம் இது வரையில் 2000 பேர் திரும்ம வந்திட்டாங்கள்
(அனைவர் பின்னாலும் இப்பிடி ஒரு சோகக்கதை இருக்கு )
நான் என்னவோ எண்டு இருக்கிறன் இனி வெளிநாடு என்ற சொல்லுக்கு இடம் இல்லை கடையை பாப்பம் இல்லை வன்னிக்கு சென்று தோட்டம் செய்வம் செய்து கடனை அடைப்பம்
அவன் எனக்கு சொல்லாமல் சொன்ன செய்தி
தங்கள் தங்கள் கடின உழைப்புக்கு என்றும் பலன் இருக்கும்
புலம் பெயர் மண்ணில் பெறும் சந்தோசத்தை விட கிடைப்பதை கொண்டு இந்த மண்ணில் வாழ பழகி கொள்ள வேண்டும்
"சொர்க்கம் சென்றாலும் சொந்த இடம் போல் சுகந்திரம் வராது "
தங்கள் தங்கள் குடும்பம் நாளை நன்றாக இருக்கவேண்டும் என்ற கனவுடன் அகதிகள் ஆக ஏதிலிகளாக செல்லும் சகோதரர்கள் என்றும் தாய் மண்ணை மறக்காது தமிழை மறக்காது வாழ வேண்டும்
அன்புடன்
தோழன் அர்ஜுன்

மிக பெரிய சமுத்திரத்தின் ஊடாக செல்லும் சின்ன படகு
ஈழ தமிழ் அகதிகள்
0 கருத்துக்கள்:
Post a Comment