மட்டகளப்பு,யாழ்ப்பாண பிரதேசவாதம்
--ஒற்றுமை இல்லா தமிழினம் ஈழ தமிழனின் கண்ணீர் கதை --
இலங்கை தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக உள்ள வடக்கு ,கிழக்கு, மலையகம் மட்டும் கொழும்பு பிரதேசம் விளங்கினாலும் பிரதேசவாதம் காரணமாக மக்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படுகின்றது
யார் பெரியவன்...?
என்பதற்கு தீர்வு இல்லை ஆகினும் அனைவரும் மகள் என்று பார்ப்பது மட்டும் இதற்க்கு தீர்வாகும்இந்த பதிவு ஒரு சிலமாதம் முன் எழுத நினைத்தாலும் நேற்று நிரூபன் அண்ணா மட்டும் லோஷன் அண்ணா தங்கள் பதிவுகளில் இந்த பிரதேசவாதம் தொடர்பான சில விடயங்கள் அலசப்பட்டமையல் இந்த பிரதேசவாததில் நானும் ஒருகாலத்தில் பாதிக்க பட்டவன் என்ற ரீதியில் இந்த பதிவை தருகின்றன் நான் மட்டகளப்பு,யாழ்ப்பாணஇரண்டு பகுதி மக்களுடனும் நன்கு பழகியவன் என்ற ரீதியில் எழுதி இருக்கிறன் பிழைகளை சுட்டி காட்டவும்
குறிப்பு :-இந்த பதிவு அரசியல் நோக்கத்தில் எழுதப்படவில்லை
இன்று மட்டகளப்பு-யாழ்ப்பாண பிரச்சனை பற்றி பார்ப்போம்
Vs
இந்த பிரச்சனை பலராலும் அறியபட்டலும் வெளிகொனர்வத்ர்க்கு விரும்பபடாத ஒரு பிரச்சனை காரணம் வடக்கு கிழக்கு இணைந்த பகுதி தமிழரின் தாயகம் என்ற கொள்கையாகும்
ஆகிமும் இந்த பதிவு பல உண்மைகளை தோலுரித்து காட்டும் என்று நினைக்கிறன்
யாழ்ப்பாண குறிப்பாக தீவு (காரைநகர்,நெடும் தீவு,.....10தீவு) பகுதி மக்கள் பல்நெடும் காலமகவியபர தொடர்புகளை மட்டகளப்புடன் பேணி உள்ளனர்
ஆனாலும் மட்டகளப்பு பிரதேசம் சோழர் ஆட்சியிலும் கண்டி ஆட்சியிலும் இருந்த பிரதேசம் ஆகவே அவர்கள் கலை கலாசாரம் ஆகம கோவில் அமைப்பு முறை என்பவை முற்று முழுதாக யாழ்ப்பாணதுடம் வேறு பட்டது தனித்துவமானது
மட்டகளப்பு மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை தொழிலாக கொண்டாலும் அவர்களின் புவியியல் அமைப்பு கடல் வளத்தையும் மலிவாக கொடுக்கின்றது ஆகையால் அவர்கள் மக்களை உபசரிப்பதில் சிறந்து விளன்க்குகின்றாக்கள்
(யாழ்ப்பாணமக்கள் குறைந்தவர்கள் அல்ல இந்த பதிவுக்காக இப்படி தருகிறேன் தப்பாக நினைக்க வேண்டாம் )யாழ்ப்பாணம் சன அடர்த்தி கூடிய பிரதேசம் கடல் மிகுந்த பிரதேசம்
இங்கு என்ன பிரைச்சனை எனில் யாழ்ப்பாணத்தில் இருந்து வியாபாரத்துக்கு மட்டகளப்பு செல்வவர்கள் அக்காலத்தில் காட்டுப்பாதை எனவே செல்ல பல நாட்கள் எடுக்கும்
அவ்வாறு செல்பவர்கள் உபசரிப்பு,திருமணம்,காதல் காரணமாகவும் யாழ்ப்பாணத்தில் விவசாயம் சிலகாலங்களில் பொய்த்து விடுவதனாலும் அங்கு தங்கி உள்ளனர்(மட்டகளப்பு) என்பது உண்மை அவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டகளப்புக்கு அழைத்தாலும் பெண்கள் தங்கள் வாழ்ந்த பகுதிய விட்டும் தாய் தந்தையை விட்டும் போக மறுத்ததுடன் அவர்களின் தொடர்புகளை வெறுத்தும் உள்ளனர்
இதற்க்கு தீர்வு காண தொடங்கிய யாழ்ப்பாண மக்கள்
1)மட்டகளப்பில் வசியம் செய்து அங்கு போகும் மக்களை பாயோடு தங்க செய்து விடுவார்கள்
2)அவர்கள் நம்பத்தகுந்த மக்கள் இல்லை என்ற ஒரு தோற்ற பாட்டை யாழ்ப்பாணத்தில் ஏற்படுதினர்கள்
இது எவராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும்
இன்றும் யாழ்ப்பாணத்தில் மட்டகளப்பு என்ற சொல்லு எடுத்தவுடன் அவர்கள் வசியம் செய்வார்கள் பாயோடு தங்க செய்து விடுவார்கள்
என்று குழந்தை முதல் கிழடு வரயில் சொல்லுவார்கள்
ஏன் எனில் நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் நானும் என் சிறுவயதில்(சிலவருடம் முன்வரை ) இப்படிசொல்லி திரிந்து உள்ளன்
இப்படி ஆனாலும் மட்டக்களப்பின் சிலபகுதில் இன்றும் மாந்திரீகம் இருப்பது உண்மை ஆனாலும் அங்கு உள்ள சுமார் ஆறு லட்சம் மக்களும் அப்பிடி என்று சொல்லுவதை ஏற்கமுடியாது
இந்த விடயங்கள் மட்டகளப்பு மக்களுக்கு தெரிய வந்த போது அவர்கள் நாங்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற ரீதியில் ஏதிர்பை காட்டிவருகிறார்கள் என்பது கண்கூடு
ஆனால் படித்தவர்கள் சிலரும் அரசியல்வாதிகளும் இன்றும் இந்த அடிப்படை கொள்கைகளில் இருப்பது தமிழர்கள் செய்த பெரும் பாவகேடு
என்ன எண்டாலும் மக்கள் தங்களுக்குள் தாங்கள் பிரிந்து நிற்பதை ஏற்கமுடியாது
உண்மைகளை விளங்கிய நாங்கள் ஆவது அனைவரும் மனிதர்கள் என்று பார்த்து நடப்பது ஆரோக்கியமானது
குறிப்பு :-இந்த பதிவு அரசியல் நோக்கத்தில் எழுதப்படவில்லை
குறிப்பு :-இந்த பதிவு அரசியல் நோக்கத்தில் எழுதப்படவில்லை
இறைவன் நாடினால் அடுத்த பதிவில்
யாழ்ப்பாண மலையாக பிரச்சனை பற்றி பார்ப்போம் பார்ப்போம்
இங்கு joke என்ன எனில் யாழ்ப்பாணத்தில் சொல்லுவார்கள்
வடக்கத்தையான் எங்களுக்கு (யாழ்ப்பாணத்தானுக்கு ) புத்தி சொல்ல வெளிக்கிட்டனா......??
1 கருத்துக்கள்:
//ஆனால் படித்தவர்கள் சிலரும் அரசியல்வாதிகளும் இன்றும் இந்த அடிப்படை கொள்கைகளில் இருப்பது தமிழர்கள் செய்த பெரும் பாவகேடு
உண்மை
i expect யாழ்ப்பாண மலையாக பிரச்சனை Article
Post a Comment