"பனைமரக்காடு" ஈழப்படம் என்று உலகுக்கு கூறு

என்னடா நாங்க என்ன லூசுபயல்கள் எண்டு நினைச்சாங்களா நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல எண்டு எங்கள் பொடியன் ஒருத்தன் படம் எடுத்தால் பாராட்டுவோம் எண்டு ஒரு மனித பண்பு கூட இல்ல
நாங்க நமக்குள் நாம் சண்டை பிடிச்சும் பொறமை படும் தான் எல்லாம் தொலைச்சு போட்டு நிக்கிறம் மறந்து போச்சா வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகுதம் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணி படத்தை வெற்றி பெறசையனும் எனக்கு என்ன யாராவது காசு தந்து எழுத பண்ணுறாங்க எண்டு நினைசியலா
இல்ல மச்சான் எங்கட படம் உலகத்தில ஓடினால் எங்களுக்கு தான் பெருமை தமிழன் ஒற்றுமை இல்லாதவன் எண்டு சொல்ல கூடாது நம்மட மண்ணுக்கு பெருமை

அண்டைக்கு ஒரு சின்ன கருத்து வேறுபாடு என் நண்பன் ஒருத்தன் சொன்னான் நீ(நான்) ஏன் eயாழ்ப்பாணம்
எண்ட பெயரை பாவிக்கிறாய் உண்ட பெயரை பாவி எண்டு மெசேஜ் போட்டன் அப்பிடி நம்மட தாய் பூமிய மறந்த யாழ்ப்பாண பயலுகள் இருக்கிறாங்க
எண்டா நம்மட பொடியள் என்னவோ பிடிச்சு போனது போல போல வெப்சைட் ப்ளாக் நடத்துறாங்க நாங்கதான் புதியயாழ்ப்பாணம்(newJaffna)எண்டு கடுப்பு கதை கதைகிறாங்க
தங்கட சகோதரம் யாரோடும் கதைச்சா இல்ல லவ் பண்ணினால் அந்த கடுப்பில கெட்டு போய்ச்சு எண்டு புலம்புறாங்க இந்த பயலுகள் என்ன செய்வம்
அப்பிடி நம்மட தாய் பூமிய மதிக்கிற பயலுகள் இருக்கிறாங்க
ஏஏஏ(AAA) மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யாழ். மண்ணில் உருவாகும் செவ்வேளின் பனைமரக்காடு திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ந.கே.கேசவராஜாவின் இயக்கத்தில் பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்களை எமது மண்ணைச் சேர்ந்த கவிஞர் அஸ்வின், சி.பாலகுமார், ச.தட்சாயினி, ந.கே.கேசவராஜன் ஆகியேர் பாடல்களை எழுதியுள்ளனர்
Watch Video Song

கடந்த காலங்களில் தமிழர்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்துவதாகவும், அவர்களது உண்மையான வாழ்வைச் சித்தரிப்பதாகவுமே இந்தப் படம் அமையும்
தமிழ்க் கலாசாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக எந்த வகையிலும் இந்தப் படம் அமையாது தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.அம்ரித் கதாநாயகனாக நடிக்கின்றார்.கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த அக்சராஅறிமுகமாகின்றார்.
முற்றிலும் யாழ் மண்வாசனையோடு வெளிவரும் இப்படத்தில் இலங்கை கலைஞர்களும் நடிக்கின்றனர்.
தீபாவளி தினத்தில் பனைமரக்காடு திரைப்படத்தை இலங்கையிலுள்ள முன்னணி திரையரங்குகள் பலவற்றிலும் சர்வதேச ரீதியாகவும் ஏக காலத்தில் காட்சிப்படுத்தப்படும்

பல்லவி
உயிரிலே உன்பார்வையால் பூ பூத்ததே
நெஞ்சிலே உன்வார்த்தைகள் தீ மூட்டுதே
அனுபல்லவி
மேகம் பூமழை பொழியுதே...- என்
யாகம் அதனாலே அழியுதே...
போகும் திசையாவும் மறையுதே - என்
தேகம் விழிநீரில் கரையுதே...
மனம் மாறுமோ...
ரணம் ஆறுமோ...
உன் மௌனம்தான் பதில் கூறுமோ.....
சரணம்-01
நெஞ்சில் ஆசையை பொத்திவைக்கிறாய்
நெருங்கி வருகிறேன் கத்திவைக்கிறாய்...
நெருஞ்சி முள்ளைப்போல் நெஞ்சில் தைக்கிறாய் நீ.......
நினைத்து நினைத்தெனை உருகவைக்கிறாய்
நிலவைப் போன்ற நீ கருகவைக்கிறாய்...
உணர்வில் கலந்து நீ உயிரில் வைக்கிறாய் தீ...
நான் காதல்பூக்கள் தருகிறேன்
நீ கல்லைதானே எறிகிறாய்
நான் அன்பை ஏந்தி வருகிறேன்
நீ அரிவாள் ஏந்தி வருகின்றாய்....
சரணம்-02
கண்கள் கொண்டு தீ மூட்டிவைக்கிறாய்
காதல் ஜன்னலை பூட்டிவைக்கிறாய்
வன்மம் இன்றியே வாழ்ந்து பார்க்கலாம் வா..
கனவில் வந்து நீ காதல் கொள்கிறாய்
நேரில் கண்டதும் விலகிச் செல்கிறாய்
தயக்க மேனடி உன்னை என்னிடம் தா..
உரிமை நானும் கேட்கிறேன்
என்னுயிரை நீயும் கேட்கிறாய்
நான் ஆசைகொண்டே பார்க்கிறேன்
என்னை எதிரிபோன்றே பார்க்கின்றாய்.....




4 கருத்துக்கள்:
wow super Line
நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல
wow super Line
நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல
யாழ். மண்ணில் உருவாகும் செவ்வேளின் பனைமரக்காடு வெற்றிoooவெற்றி
யாழ் மண்ணில் இருந்து உருவாகும் பனைமரக்காடு திரைப்படத்திற்கு எனது வாழ்த்துக்கள்
திரைப்படத்தின் இயக்குனரோ அல்லது கதா நாயகர்களோ அல்லது அதை சார்ந்தவர்களோடு முடிந்தால் தொடர்பினை ஏற்படுத்தி தாருங்கள்
எமது படைப்புக்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்
Post a Comment