யாழ்ப்பாண மண்ணெண்ணெய் யுகங்களும் அரிக்கன் லாம்புகளும் ( மண்வாசனை -2)


தம்பி பொழுது இருளுது. மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து எண்ணையை விட்டு ஆயத்தப்படுத்தியாச்சோ? படிக்கவேணுமெல்லோ? அம்மாவின் குரல் குசினிக்குள் இருந்து கேட்டது. வீட்டில் இருந்த அரிக்கன் லாம்பு, ஜாம் போத்தல் விளக்கு மண்ணெண்ணெய், ஒரு சிறிய துணி இவற்றுடன் முற்றத்து வாசல் படியில் வந்து அமர்ந்து கொண்டு, முதல் நாள் இரவின் கரிபுகை மண்டிப்போய் இருந்த அரிக்கன் லாம்பின் சிமினியை மெதுவாக கழற்றி அதில் படிந்திருந்த புகையை துடைக்க துவங்கினேன். எனது பள்ளிக்கால பதின்ம வயதுகளில், இருள் சூழும் மம்மல் பொழுதுகளில் சிமினி துடைக்கிறதும், மண்ணெண்ணெய் விட்டு விளக்கு திரியை சரிபார்ப்பதும், திரி கட்டையாகிப்போனால் துணியை கிழித்து புது திரி சுற்றி போடுவதும் எனது அன்றாட கடமைகளில் ஒன்றாகி போனது. 

Read more...

எங்கட யாழ்ப்பாணதுக்கு கறண்ட் வந்த கதை( மண்வாசனை -1)




இதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததி அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.

Read more...

"பனைமரக்காடு" ஈழப்படம் என்று உலகுக்கு கூறு

என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பங்கள் அண்டைக்கு மங்காத்தா எண்டு ஒரு லொள்ளு படம் வர நம்மட ஆக்கள் உடன விமர்சனம் போடவேளிக்கிடினம்


என்னடா நாங்க என்ன லூசுபயல்கள் எண்டு நினைச்சாங்களா நம்மட கலை கலாச்சாரம் உலகம் அறிந்தது நாங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல எண்டு எங்கள் பொடியன் ஒருத்தன் படம் எடுத்தால் பாராட்டுவோம் எண்டு ஒரு மனித பண்பு கூட இல்ல
நாங்க நமக்குள் நாம் சண்டை பிடிச்சும் பொறமை படும் தான் எல்லாம் தொலைச்சு போட்டு நிக்கிறம் மறந்து போச்சா  வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகுதம் நம்மளால முடிஞ்ச உதவிய பண்ணி படத்தை வெற்றி பெறசையனும் எனக்கு என்ன யாராவது காசு தந்து எழுத பண்ணுறாங்க எண்டு நினைசியலா
இல்ல மச்சான் எங்கட படம் உலகத்தில ஓடினால் எங்களுக்கு தான் பெருமை தமிழன் ஒற்றுமை இல்லாதவன் எண்டு சொல்ல கூடாது நம்மட மண்ணுக்கு பெருமை

அண்டைக்கு ஒரு சின்ன கருத்து வேறுபாடு என் நண்பன் ஒருத்தன் சொன்னான் நீ(நான்) ஏன் eயாழ்ப்பாணம்
எண்ட பெயரை பாவிக்கிறாய் உண்ட பெயரை பாவி எண்டு மெசேஜ் போட்டன் அப்பிடி நம்மட தாய் பூமிய மறந்த யாழ்ப்பாண பயலுகள் இருக்கிறாங்க

எண்டா நம்மட பொடியள்  என்னவோ பிடிச்சு போனது போல போல வெப்சைட் ப்ளாக் நடத்துறாங்க நாங்கதான் புதியயாழ்ப்பாணம்(newJaffna)எண்டு கடுப்பு கதை கதைகிறாங்க
தங்கட சகோதரம் யாரோடும் கதைச்சா இல்ல லவ் பண்ணினால் அந்த கடுப்பில கெட்டு போய்ச்சு எண்டு புலம்புறாங்க இந்த பயலுகள் என்ன செய்வம்
அப்பிடி நம்மட தாய் பூமிய மதிக்கிற பயலுகள் இருக்கிறாங்க

ஏஏஏ(AAA) மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யாழ். மண்ணில் உருவாகும் செவ்வேளின் பனைமரக்காடு திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
ந.கே.கேசவராஜாவின் இயக்கத்தில் பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்களை எமது மண்ணைச் சேர்ந்த கவிஞர் அஸ்வின், சி.பாலகுமார், ச.தட்சாயினி, ந.கே.கேசவராஜன் ஆகியேர் பாடல்களை எழுதியுள்ளனர்

Watch Video Song

கடந்த காலங்களில் தமிழர்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்துவதாகவும், அவர்களது உண்மையான வாழ்வைச் சித்தரிப்பதாகவுமே இந்தப் படம் அமையும் 
தமிழ்க் கலாசாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக எந்த வகையிலும் இந்தப் படம் அமையாது தென்னிந்திய  முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.அம்ரித் கதாநாயகனாக நடிக்கின்றார்.கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த அக்சராஅறிமுகமாகின்றார்.
முற்றிலும் யாழ் மண்வாசனையோடு வெளிவரும் இப்படத்தில் இலங்கை கலைஞர்களும் நடிக்கின்றனர்.








தீபாவளி தினத்தில் பனைமரக்காடு திரைப்படத்தை இலங்கையிலுள்ள முன்னணி திரையரங்குகள் பலவற்றிலும் சர்வதேச ரீதியாகவும் ஏக காலத்தில் காட்சிப்படுத்தப்படும் 

பல்லவி

உயிரிலே உன்பார்வையால் பூ பூத்ததே
நெஞ்சிலே உன்வார்த்தைகள் தீ மூட்டுதே

அனுபல்லவி

மேகம் பூமழை பொழியுதே...- என்
யாகம் அதனாலே அழியுதே...
போகும் திசையாவும் மறையுதே - என்
தேகம் விழிநீரில் கரையுதே...

மனம் மாறுமோ...
ரணம் ஆறுமோ...
உன் மௌனம்தான் பதில் கூறுமோ.....


சரணம்-01

நெஞ்சில் ஆசையை பொத்திவைக்கிறாய்
நெருங்கி வருகிறேன் கத்திவைக்கிறாய்...
நெருஞ்சி முள்ளைப்போல் நெஞ்சில் தைக்கிறாய் நீ.......

நினைத்து நினைத்தெனை உருகவைக்கிறாய்
நிலவைப் போன்ற நீ கருகவைக்கிறாய்...
உணர்வில் கலந்து நீ உயிரில் வைக்கிறாய் தீ...

நான் காதல்பூக்கள் தருகிறேன்
நீ கல்லைதானே எறிகிறாய்
நான் அன்பை ஏந்தி வருகிறேன்
நீ அரிவாள் ஏந்தி வருகின்றாய்....


சரணம்-02

கண்கள் கொண்டு தீ மூட்டிவைக்கிறாய்
காதல் ஜன்னலை பூட்டிவைக்கிறாய்
வன்மம் இன்றியே வாழ்ந்து பார்க்கலாம் வா..

கனவில் வந்து நீ காதல் கொள்கிறாய்
நேரில் கண்டதும் விலகிச் செல்கிறாய்
தயக்க மேனடி உன்னை என்னிடம் தா..

உரிமை நானும் கேட்கிறேன்
என்னுயிரை நீயும் கேட்கிறாய்
நான் ஆசைகொண்டே பார்க்கிறேன்
என்னை எதிரிபோன்றே பார்க்கின்றாய்.....




Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP