அதிரடி உண்மைகள்கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக் கணக் கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார்.' - இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப் போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. 'நான்தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம்' எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் 'கல்கி பகவான்'!!
இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலிச்
சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தகவல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வநாத் சுவாமியை சந்தித்தோம்.
Read more...